PDA

View Full Version : மயங்கிய விண்மீன்.



M.Jagadeesan
03-08-2012, 03:47 AM
அசுவனி முதலா ரேவதி ஈறாக
விசும்பில் உள்ள விண்மீன் கூட்டம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொன் றாகத்
திங்களின் அருகே திகழொளி காட்டும்

அன்றொரு நாளில் ஆகாய வீதியில்
திங்களின் அருகே நிற்க வேண்டிய
விண்மீன் ஒன்று நிலை தடுமாறி
மங்கை ஒருத்தியின் வண்ண முகத்தை
மதியென் றெண்ணி மயக்கம் கொண்டு
பூமிப் பந்தின் புறத்தே நிற்கும்.!


குறள்

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன்.

கருத்து: சந்திரனுக்கும், பெண்ணின் முகத்திற்கும் மாறுபாடு தெரியாததால் , விண்மீன்கள் தங்கள் இடங்களினின்றும் நிலைகலங்கி சுழல்கின்றன.

மதி
03-08-2012, 04:23 AM
அழகான கற்பனை...!!!

நிலவுக்கும் அவளுக்கும்
வேறுபாடில்லை
தடுமாற்றம்
நட்சத்திரக்கூட்டத்திற்கு மட்டுமா..
சில ஆண்களின்
ஜாதகக்கட்டங்களும் தான்..!

கலைவேந்தன்
03-08-2012, 04:25 AM
அழகான கற்பனையில் விளைந்த குறளும் அதற்கு அணி சேர்க்கும் ஐயாவின் கவிதையும் மிக அருமை.

செல்வா
03-08-2012, 04:53 AM
மூலத்திற்கு சற்றும் குறையாத மெருகோடு புதுக்கவிதை...

நல்லாருக்கு ஐயா.

கீதம்
03-08-2012, 05:01 AM
மதியைக் கண்டு மங்கையென்று மயங்கும் காதலர் மண்ணில்.

மங்கையைக் கண்டு மதியென்று மயங்கும் மீன் விண்ணில்.

என்னவொரு அழகான ரசனை!

தேர்ந்தெடுத்தக் குறளும், நேர்த்தியான கவிதையும் அருமை. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
03-08-2012, 05:17 AM
மதி ,கலைவேந்தன், செல்வா, கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .

jayanth
03-08-2012, 06:48 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/586930.gif (javascript:emoticonp(':கலக்கல்:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/586930.gif (javascript:emoticonp(':கலக்கல்:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/586930.gif (javascript:emoticonp(':கலக்கல்:'))

M.Jagadeesan
04-08-2012, 01:00 PM
ஜெயந்த் அவர்களுக்கு நன்றி!

seguwera
04-08-2012, 01:15 PM
குறளோடு பொருந்திய கவிதை நன்று.

M.Jagadeesan
04-08-2012, 02:11 PM
நன்றி சேகுவேரா!