PDA

View Full Version : என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..?



கலைவேந்தன்
02-08-2012, 06:32 PM
அமரனின் அன்புக்கட்டளைப்படி இது மீள்பதிவு.

முதல் படி:

இணையத்தில் கீழ்க்கண்ட முகவரிக்குச் சென்று

http://software.nhm.in/products/writer ஒரு எம்பிக்கும் குறைவான NHM Writer 1.5.1.1 என்னும் தமிழ் எழுதியையும் அதனுடன் கூடிய வழிகாட்டியையும் ( மேனுவல் ) தரவிறக்கி கணிணியில் சேமித்துக் கொள்ளவும்.

மேனுவலை பொறுமையுடன் வாசித்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும்.

கலைவேந்தன்
02-08-2012, 06:33 PM
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.
NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?



NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.
******************************************************************************************************************************
****http://lh5.ggpht.com/kmdfaizal/SQXXSZm-gOI/AAAAAAAAAFQ/yZDqLf6WLeM/image_thumb3.png*********************************

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXU3d2I5I/AAAAAAAAAFY/aynpplZW2rc/image_thumb12.png****************************************************************************************

2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXX7WV4EI/AAAAAAAAAFg/L9Zd0pcykc8/image_thumb13.png

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXb75J5UI/AAAAAAAAAFo/GbpeCS_UkFY/image_thumb141.png

4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXdgp6fzI/AAAAAAAAAFw/rwfa-dVffjI/image_thumb15.png

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXg5zaL4I/AAAAAAAAAF4/aMWGCXwFmaM/image_thumb17.png

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXjY9wirI/AAAAAAAAAGA/d0EcowjEB0U/image_thumb18.png

பிறகு இன்ஸ்டால் செய்யப்படும்..

http://lh4.ggpht.com/kmdfaizal/SQXXmaAlYXI/AAAAAAAAAGI/ggNIXsUHetI/image_thumb20.png

கலைவேந்தன்
02-08-2012, 06:34 PM
NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXnpPq00I/AAAAAAAAAGQ/j_7Q4WVuO4c/image_thumb22.png


தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.


http://lh3.ggpht.com/kmdfaizal/SQXXpeZ4SSI/AAAAAAAAAGY/Ybx3Bkp7zr8/image_thumb221.png

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

http://lh4.ggpht.com/kmdfaizal/SQXXsSetGtI/AAAAAAAAAGg/nNLHtGcfytY/image12_thumb1.png

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

http://lh6.ggpht.com/kmdfaizal/SQXXupRCt9I/AAAAAAAAAGo/Hlx-upNeZy0/image_thumb5.png

கலைவேந்தன்
02-08-2012, 06:38 PM
மேலும் ஐயங்கள் இருப்பின் இங்கே தெரிவித்தால் விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

A Thainis
02-08-2012, 06:45 PM
திரு. கலைவேந்தன் உங்களது இணையம் சார்ந்த இந்த தமிழ் பணி, புதிய உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் பெரும் உதவி, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

கலைவேந்தன்
02-08-2012, 06:53 PM
பயனுறச்செய்யும் பணிகளுக்காகவே படைத்தனன் இறைவன் மனிதனை..! மிக்க நன்றி தைனிஸ்.

சிவா.ஜி
02-08-2012, 06:58 PM
சிறந்த பணிக்கு மிக்க நன்றி நண்பா.

கலைவேந்தன்
02-08-2012, 07:09 PM
மிக்க மகிழ்ச்சி சிவா..!

அமரன்
03-08-2012, 05:36 AM
அன்பு கலை..அகமார்ந்த நன்றி. தமிழ் தட்டச்சில் தடுமாறும் நெஞ்சங்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.

த.ஜார்ஜ்
09-08-2012, 04:49 PM
NHM Writer win 7 ல் இயக்க முடியவில்லை. இயக்குவதற்கான வழிமுறை வேறு ஏதாவது இருக்கிறதா?

கலைவேந்தன்
10-08-2012, 05:31 AM
அப்படி எல்லாம் இல்லையே ஜார்ஜ்.எனக்கு விண்டோஸ் 7 இல் நன்றாக இயங்குகிறதே. நான் மேலே சொன்ன வழிமுறை எந்த ஓ எஸ்ஸுக்கும் பொருந்துமே. பிரச்சினை வருகிறது என்றால் அதை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு சி க்ளீன் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள். சரியாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் எக்ஸ் பி விண்டோஸ் ஆகியவற்றில் சோதனை செய்யப்பட்டதே. லினக்ஸ் பற்றி தெரியவில்லை. நான் லினக்ஸ் பயன்படுத்துவது இல்லை.

மீண்டும் முயன்று பார்த்து சொல்லுங்கள் ஜார்ஜ். என்ன எர்ரர் செய்தி வருகிறது என்பதையும் கூறுங்கள்.

அன்புரசிகன்
10-08-2012, 05:57 AM
NHM Writer win 7 ல் இயக்க முடியவில்லை. இயக்குவதற்கான வழிமுறை வேறு ஏதாவது இருக்கிறதா?

உங்கள் கணினியில் எந்த பூச்சி கொல்லி (antivirus :D) இருக்கு??? எனக்கு ஏறத்தாள 6 மாசத்துக்கு முன்னம் நடந்தது. ட்ரேஞ்சன் என்று சொல்லி இதனுடய சில கோப்புக்களை அழித்துவிட்டது. பின்னர் அவர்களுடன் தொடர்புகொண்டதால் புதிய patch ஒன்றை அனுப்பினார்கள். அதன் பின் சரியாக இயங்குகிறது. என்னுடையது கணினியில் இருப்பது McAfee.

சிலவேளை Alt பொத்தான் சரியாக இயங்காவிட்டாலும் இந்த பிரச்சனை வரும். விசைப்பலகையை கவுட்டுப்போட்டு ஒரு தட்டு தட்டுங்க.. :D :D :D

த.ஜார்ஜ்
10-08-2012, 10:14 AM
>நீங்கள் சொன்னபடி அழித்துவிட்டு புதிதாய் நிறுவிய பின் சரியாகி விட்டது கலை. தகவலுக்கு மிக்க நன்றி.

>அன்பு தகவலுக்கு நன்றி

SathyaThirunavukkarasu
16-08-2012, 05:22 AM
தகவலுக்கு மிக்க நன்றி

கலைவேந்தன்
16-08-2012, 06:22 AM
தங்களுக்கும் பயனுள்ளவகையில் அமைந்ததற்கு மிக்க நன்றி சத்யா..

shreemurali
18-12-2012, 04:41 AM
தமிழ் மன்றத்திற்க்கு என் நன்றி

ஜான்
19-12-2012, 04:14 AM
என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன்....

என்னிடம் இருப்பது windowsxp ....பைரேட்டட் இல்லாத நயம் ஒரிஜினல்....ஆனால் என்னால் செயல்படுத்தவே முடிவதில்லை.....access violation code என்று லட்சக்கணக்கில் ஒரு நம்பர் வருகிறது....

வைரஸ் கொள்ளியை செயலிழக்க வைத்துக் கூட முயன்றுவிட்டேன்

கலைவேந்தன்
19-12-2012, 04:52 AM
1. ஒருமுறை அன் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் என் எச் எம் ரைட்டரை.

2, சி க்ளீனர் இருந்தால் அல்லது க்ளேரி யுடிலிட்டீஸ் இருந்தால் டெம்பரரி மற்றும் ரிஜிஸ்ட்ரி எண்ட்ரியை க்ளீன் செய்யுங்கள்.

3. சி க்ளீனர் முதலானவை இல்லை என்றால் சி ட்ரைவின் ப்ராப்பர்ட்டீஸில் சென்று டிஸ்க் க்ளீனர் பயன்படுத்தி வேண்டாத டெம்ப் ஃபைல்களை அகற்றுங்கள்.

4. ஒருமுறை ரிஸ்டார்ட் செய்துவிட்டு மீண்டும் என் எச் எம் ரைட்டர் நிறுவுங்கள்.

கண்டிப்பாக இது பயன் தரும்.

ஜான்
20-12-2012, 04:40 PM
நன்றி அண்ணா

பாண்டி
25-12-2012, 02:42 PM
எனக்கும் இப்போது வேலை செய்கிறது

bharathichandran
05-05-2018, 12:28 PM
திரு. கலைவேந்தன் உங்களது இணையம் சார்ந்த இந்த தமிழ் பணி, புதிய உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் பெரும் உதவி, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.