PDA

View Full Version : மே 1



A Thainis
02-08-2012, 10:07 AM
உறவுகளை பிரிந்து
உணர்வுகளை துறந்து
உறக்கத்தை மறந்து
உரிமைகளை இழந்து
இரவென்று பகலென்று அறியாது
காலமெல்லாம் இயந்திரமாய்
உழைத்து உருக்குலைந்த
உழைப்பாளிகளின் உணர்வுகள்
உயிர்பெற்ற பெரும் திருநாள்

வாய்முடி மவுனித்த தொழிலார்களின்
உணர்வுகள் தோழமையாய் கொப்பளிக்க
வெடித்தது பிரெஞ்சு புரட்சி - அது
சிக்காகோ பேரழுச்சியாய் எழுந்திட
அகிலெங்கும் அதிர்வலைகள் தாக்கிட
தகர்ந்தது முதலாளித்துவ போக்கு
விடிந்தது தோழர்களுக்கு விடுதலை
இணைந்த கரங்களின் உரிமைகள் செங்கொடியாய்
நீல வானில் சீறிபறக்க குருதி சிந்தி
தவமிருந்து எழுந்தது இத்தியாக திருநாள்

உழைக்க உறவாட உறங்கிட - என
நாளொன்றை மூன்று எட்டு
மணித்துளிகளாய் பிரித்திடுவோம்
உழைப்பவர் உரிமைதனை காத்திட்டு
ஒரு சேர வாழ்ந்திடுவோம்
மே ஒன்று நமது நாளென்று
போற்றுவோம் தொழிலாளர் நலமென்று
பாரிஸ் மாநாடு பாரெங்கும் பறைசாற்றி
உலகமே தோழமை கொண்டிடும் திருநாள்

- ஆ. தைனிஸ்

ராஜா
02-08-2012, 10:11 AM
மே ஒன்று நமது நாளன்று

நாளென்று..?

கீதம்
02-08-2012, 10:22 AM
உழைப்பாளர்களின் பெருமையைப் பறைசாற்றும் அருமையான கவிதை. உழைக்க, உறவாட, உறங்கிட என நாளொன்றைப் பிரித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டிய வரிகளுக்குப் பாராட்டுகள். தினமொன்று வைத்து திருநாள் போல் கொண்டாடுவதை விடவும் தினமும் உழைப்பைக் கொண்டாடும் தொழிலாளர்களைப் போற்றுவோம்.

மே முதல் தினத்தைத் தொழிலாளர் தினமாய்க் கொண்டாடும் நாடுகள் சிலதாம். உலகின் பல நாடுகள் வெவ்வேறு நாளில்தான் கொண்டாடுகின்றன. ஆஸ்திரேலியா ஒரே நாடான போதும், தொழிலாளர் தினத்தை ஒவ்வொரு மாகாணமும் வெவ்வேறு நாளில் கொண்டாடுவது வேடிக்கையான செய்தி.

A Thainis
30-04-2013, 07:12 AM
உழைப்பால் உயர்வோம், உழைப்பவரைப் போற்றுவோம், உழைப்பை மதிப்போம், மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
01-05-2013, 01:04 AM
உழைப்பாளிகளின் பெருமை சாற்றும் மே தினக் கவிதை நன்று. தைனிஸ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.