PDA

View Full Version : ஆகத்து 15



A Thainis
02-08-2012, 10:05 AM
1947 ஆகத்து பதினைந்து
இரவு பணிரெண்டு மணியென்று
இந்திய திருநாட்டின் வானில்
விடுதலை சூரியன் விரிந்தது
சுதந்திர காற்றினை சுவாசித்து
இந்தியர் தலைநிமிர்ந்து நின்றனர்
விடுதலை போராட்ட தோழர்களின்
செந்நீரில் கண்ணீரில் புரட்சியில்
ஆங்கிலே ஆட்சி அகன்றது
அடிமை விலங்கொடித்த வீரர்களின்
தியாகத்திற்கு தலைவணங்கி நின்றனர்

மூவண்ணக் கொடி இந்திய திருக்கொடி
நீல வானில் உயர எழுந்திட - பல
இனம் மொழி சமயம் சார்ந்த
இந்திய திருநாடு வேற்றுமையில்
நாம் இந்தியர் நம்நாடு இந்தியத்திருநாடு
ஒற்றுமை மேலோங்க முழங்கிட
நம் உணர்வுகள் சிலிர்த்தன
நாட்டினை காத்திட இணைந்திட்ட
கரங்களில் ஒற்றுமை பூத்தது
இந்திய திருநாடு உலகில்
தலை நிமிர்ந்து நின்றது

- ஆ. தைனிஸ்

kulakkottan
02-08-2012, 02:48 PM
தேசப்பற்று உங்கள் கவிதையில் நிமிர்ந்து நிற்கிறது !
என்று அடிமட்ட குடிமகன் வாழ்க்கை நிமிர்கிறோதோ அந் நாட்டின் சுதந்திரத்திற்கு அர்த்தம் கிடைகிறது

A Thainis
14-08-2012, 07:43 PM
66 வது இந்திய திருநாட்டின் விடுதலை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
வறுமை அகன்று வளமையும்
அறியாமை நீங்கி அறிவொளியும்
ஊழல் அகன்று சேவையும்
பயங்கரவாதம் நீங்கி அமைதியும்
பாரபட்சம் நீங்கி சமத்துவமும்
வேற்றுமையில் ஒற்றுமை பேணவும் மனம் நிறை வாழ்த்துக்கள்.

Keelai Naadaan
15-08-2012, 03:25 AM
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ஜானகி
15-08-2012, 04:00 AM
போராடிக் கிடைத்த சுதந்திரத்தை சீராடிக் காப்போம் !

கலைவேந்தன்
15-08-2012, 05:53 AM
மென்மையான கவிதை மூலம் இந்திய விடுதலைநாளின் பெருமை வழங்கியமைக்கு பாராட்டுகள். இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..!

mgandhi
15-08-2012, 05:57 AM
http://a4.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/s480x480/529997_3052928582501_2028952693_n.jpg