PDA

View Full Version : தமிழ் மாதங்கள்



A Thainis
02-08-2012, 09:59 AM
தை பிறந்தால் வழி பிறக்கும்
தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்
மாசியில் மங்களம் சூடிடும்
புது வரவுகள் பொங்கிடும்
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா
தெருவெங்கும் தேரோட்டம்
சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க
சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்
வைகாசியில் வைபோகம்
மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்
ஆனியில் உச்சிவெயில் தணியும்
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்
உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்
ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும்
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்
புரட்டாசி விரதம் மாந்தரின்
மனதை பக்குவபடுத்த உதவிடும்
ஐப்பசி மழை அடை மழை
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்
கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு
ஒளிரிந்திட நமைகள் குடி புகுந்திடும்
மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்

- ஆ. தைனிஸ்

சுகந்தப்ரீதன்
02-08-2012, 05:31 PM
கலக்குங்க... கலக்குங்க...!!

திங்களின் தீண்டலில் தாங்கள் திங்கள்கள் மேல் காதல் கொண்டீரோ..?!:lachen001:

அமரன்
02-08-2012, 06:06 PM
மாதங்களின் சிறப்பை எடுத்துத் தொடுத்த கவிதை... பாராட்டுகள் தைனிஸ்.

லியோனில் நீண்டகாலமாக வசிக்கின்றீர்களா?

A Thainis
02-08-2012, 06:35 PM
அமரன் உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நான் கடந்த பத்து மாதங்களாகதான் லியோனில் வசிக்கின்றேன்.
உங்களது படைப்புகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கின்றன, தொடர்ந்து தமிழுக்கு சிறப்பும், உலகிற்கு சேவையும் செய்திடுங்கள்.

அமரன்
03-08-2012, 05:38 AM
நன்றி தைனீஸ்.


லியோன் வந்தால் வரவேற்க இனிய நண்பன் ஒருவன் கிடைச்சாச்சே..

jayanth
03-08-2012, 06:28 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

அனுராகவன்
04-08-2012, 10:43 PM
தை பிறக்கும் உங்கள் வாழ்வில் செல்வமும் பிறக்கும்....
நல்ல கலக்கல் கவி..

கீதம்
13-08-2012, 11:17 AM
தை முதல் மார்கழி வரை மென்னடை முதல் ஆக்ரோஷநடை வரை நடந்து நம்மோடு பழகும் தமிழ் மாதங்களின் சிறப்பை எடுத்துரைத்த வரிகளும் சிறப்பு. பாராட்டுகள் தைனிஸ்.

ஜானகி
13-08-2012, 03:02 PM
வசந்தமான ஒரு வருட சுற்றுலாவிற்கு நன்றி......வசந்தம் நீடிக்கட்டும் ! இதயம் மலர்ந்து சிரிக்கட்டும் !

A Thainis
13-08-2012, 03:41 PM
பாராட்டுக்கள் வழங்கிய கீதம் மற்றும் ஜானகி அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்