PDA

View Full Version : கதிரவன்



A Thainis
02-08-2012, 09:55 AM
காரிருளை கதிரவன் எரித்து
மரகதவொளி வெள்ளத்தில்
கிழக்கே முகம் பதித்து
உதய சூரியனின் எழுந்தேற்றம்
இரவொன்றை பகலாக்கி
நம்பிக்கை ஒளியேற்றி
புதிய நாளை புலரவைக்கும்
ஆதவனின் அருட்சுடர்

வாழ்வில் இருளகற்றி
இகமெங்கும் ஒளிவீசி
உற்சாகமும் உழைப்பும்
பகலவன் நல்கிடும் பரிசு
காலக் கடிகாரமாய்
பூமியெங்கும் சுழன்று
உயிரினங்கள் வாழ்ந்திட
வழிகாட்டும் வானவன்

- ஆ. தைனிஸ்

கீதம்
04-08-2012, 11:42 AM
சூரியன் இல்லையென்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? நமக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்? யோசிக்கவைத்தக் கவிதை. பாராட்டுகள் தைனிஸ்.

அனுராகவன்
04-08-2012, 10:07 PM
கதிரவன் இன்றி நிலவு இல்லை...அந்த மாதவன் இன்றி ஒரு உயிரும் இல்லை...ஆ. தைனிஸ் கவி இன்றி நாங்கள் இல்லை..

நன்றி... பாராட்டுகள் தைனிஸ்......

A Thainis
05-08-2012, 07:59 AM
சூரியன் இல்லையென்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்? நமக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்? யோசிக்கவைத்தக் கவிதை. பாராட்டுகள் தைனிஸ்.

கீதம் உங்களது பாராட்டுக்கு நன்றி, ஏனென்றால் நீங்கள் பயன்படுத்துகின்ற சொற்கள் பண்பட்டதகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கின்றன, வாழ்த்துக்கள்.

A Thainis
05-08-2012, 08:06 AM
கதிரவன் இன்றி நிலவு இல்லை...அந்த மாதவன் இன்றி ஒரு உயிரும் இல்லை...ஆ. தைனிஸ் கவி இன்றி நாங்கள் இல்லை..

நன்றி... பாராட்டுகள் தைனிஸ்......

அச்சலா, அசத்தலான வாழ்த்து வார்த்தைகள் தொடுத்து என்னை உற்சாகபடுத்தும் உங்களது பாச வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
உங்களை போன்ற நல்ல நண்பர்களால் தமிழும், உலகமும் என்றும் நின்று செழிக்கும்

கலைவேந்தன்
05-08-2012, 08:15 AM
கதிரவன் துதி மிக அருமை..!

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.

என்னும் இளங்கோவின் வரிகள் நினைவுக்கு வந்தன. பாராட்டுகள் தைனிஸ்.