PDA

View Full Version : குசலம்..!



மதி
02-08-2012, 06:29 AM
சாப்பிட்டாயா காலையில்
தினமும் விசாரிக்கும்
குசலங்கள் வரிசையில்
எந்த இடத்தில்
வெடித்தது இன்று
குண்டு!!

aasaiajiith
02-08-2012, 06:39 AM
யதார்த்தமான வரிகள் !

அதிலும், தமிழகம் அவ்வகை
குசல விசாரிப்புகளில் விடுபட்டிருப்பதில்
ஒரு, சிறு ஆறுதல் உண்டு ...

M.Jagadeesan
02-08-2012, 06:48 AM
மாதமும் மாரி மழை பொழிந்தது அக்காலம்!
மாதமும் குண்டு மழை பொழிவது இக்காலம்!

மதி
02-08-2012, 07:17 AM
என்னது நேற்று புனேயில் குண்டு வெடித்ததா...?
காலையில் ஆச்சர்யத்தைக் காட்டிய நண்பரால் தோன்றியது இது.

நன்றி அஜித் மற்றும் ஜகதீசன் ஐயா.!

கீதம்
02-08-2012, 07:29 AM
நிதர்சனம் உரைக்கும் கவிதை. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி வந்தால் அதுவும் பழகிப்போய்விடுகிறது. பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது வெறும் செய்தியாகிப் போய்விடுவது பரிதாபம். இன்னும் ஒரு படி மேலே சென்று முகப்புத்தகப் பக்கங்களில் கட்டைவிரல் உயர்த்திக் காட்டிப் பகிரப்படும் விருப்ப செய்தியுமாகிப் போகிறது.

மதி
02-08-2012, 07:35 AM
அதே அதே.... எல்லாம் பழகிப் போய்விடுகிறது..!!

கலைவேந்தன்
02-08-2012, 08:30 AM
சிறிது சிறிதாக உண்டால் நஞ்சும் கூட உடலுக்கு ஒத்துப்போய்விடுமாம். அதே நிலைதான் இன்றைய இந்திய நிலை. அதை சுருக்கமாய்ச் சொன்ன அழகான வரிகள். பாராட்டுகள்..!

சுகந்தப்ரீதன்
02-08-2012, 05:50 PM
எனக்கு குண்டு வெடித்ததைவிட அதிர்ச்சியாக இருக்கிறது.... மதி கவிதை எழுத தொடங்கியிருப்பது...?!:icon_rollout:

சிவா.ஜி
02-08-2012, 05:59 PM
ஆமா மதி....இப்ப இது சகஜமாகிவிட்டது....ஆனா....வருத்தமாவும் இருக்கு...எப்படி இருந்த நாடு இப்படியாகிடிச்சேன்னு....யதார்த்தமான வரிகள்....வாழ்த்துக்கள் மதி. (சுபிக்கு ஏற்பட்ட அதே ஆச்சர்யம் எனக்கும்...ஹி...ஹி...)

மதி
03-08-2012, 01:04 AM
நன்றி மக்களே...

சுபி மற்றும் சிவாண்ணா. இதில ஆச்சர்யப்படுறதுக்கு ஒன்றுமில்லை..!

jayanth
03-08-2012, 03:32 AM
குண்டு குசலம் விசாரிப்பு நன்று...

அமரன்
11-08-2012, 09:25 PM
குண்டு வெடித்தததா உங்கு என்று கேட்கும் காலம் வராத வரை நாம் வாழ்வோம் மதி..

காலையில் அழைக்காவிட்டால் கவலைப்படும் மனது உங்களைப் போல் எல்லாருக்கும் இருக்கட்டும். குண்டு வைப்போரையும் இனங்கண்டு அழைத்து குசலம் விசாரிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கலாமா..

jayanth
12-08-2012, 05:12 AM
குண்டு வெடித்தததா உங்கு என்று கேட்கும் காலம் வராத வரை நாம் வாழ்வோம் மதி..

காலையில் அழைக்காவிட்டால் கவலைப்படும் மனது உங்களைப் போல் எல்லாருக்கும் இருக்கட்டும். குண்டு வைப்போரையும் இனங்கண்டு அழைத்து குசலம் விசாரிக்கும் இயக்கம் ஒன்றைத் தொடங்கலாமா..

அமரன்...ஜமீந்தார் வீட்டுல கல்யாணமாம். உங்களப் பத்தியும் தப்பா ஏதோ பேசினாப்ல அரசல் புரசலா காதுல விளுந்துச்சு... விசாரிச்சு வையுங்க. அங்க போயி குண்டு போடலாம்.

ஆதி
17-08-2012, 11:29 AM
இன்று மீண்டும் ஒரு குண்டு வெடித்தது பூனாவில்

இந்த மாதத்தில் இது 2வது முறை, ஆறாவது குண்டு