PDA

View Full Version : காமமும், நாணமும்



M.Jagadeesan
02-08-2012, 06:12 AM
தலைவியின் உள்ளத்திலே காமத்திற்கும் ,நாணத்திற்கும் இடையே போராட்டம் நடக்கிறது.முதலில் நாணம் பேசுகிறது.பிறகு காமம் பேசுகிறது.

நாணம்:

காமம் பெண்ணுக்கு அழகல்ல
காமம் பெண்ணுக்கு ஏமம் தராது
கழிமிகு காமத்தால்
கற்பை இழந்தாள் அகலிகை!
எழில்மிகு மூக்கை
இழந்தாள் சூர்ப்பனகை!
நாணமென்னும் நகையணிந்து
பேணவேண்டும் பெண்கள் தம்மை!
தமிழகத்துப் பெண்களின் தலையாய
சொத்தே தலைகவிழ்க்கும் நாணம்தானே!

ஆகவே

காமமே! கடுகிப்போ! இவள் நெஞ்சில்
கடுகளவும் உனக்கு இடமில்லை!

என்று நாணம் சொல்ல ,கடுப்படைந்த


காமம்:

வாழ்க்கை என்னும் மாபெருங் கடலில்
இல்லறப்படகு இனிதாய்ச் செல்ல
காமம் என்னும் துடுப்பு வேண்டும்.
ஆண்பெண் சேர்க்கையின்றி அவனி ஏது?
அந்த
ஆண்டவனையே நான் விட்டு வைக்கவில்லையே!
கரும்பு வில்கொண்டு காமன் விடும் மலர் அம்புகளை
இரும்பு இதயம் இருந்தாலும் தடுக்க இயலாதே!
துரும்பு நீ! தூரப் போ! இல்லையெனில்
தூக்கியெறிவேன்! நினைவில் கொள்!

தலைவி:

இருவருக்கு என் உள்ளத்தில் இடமில்லை!
காமம் இருந்தால் நாணத்திற்கு இடமில்லை
நாணம் இருந்தால் காமத்திற்கு இடமில்லை.
ஒருவர் மட்டுமே ஒண்டிக் கொள்ளலாம்.


குறள்:

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே!
யானோ பொறேனிவ் விரண்டு.

நல்ல நெஞ்சே! நீ நாணத்தைக் காப்பாற்ற நினைத்தால் , காமத்தை விடுவாயாக! காமமே பெரிதென்று நினைத்தால் நாணத்தை விட்டுவிடுவாயாக! என்னால் ஒருசேர இரண்டையும் தாங்கமுடியாது.

கீதம்
02-08-2012, 07:40 AM
பெண்ணின் மனக்குரலை இருவரிக்குறள்களில் பதிவு செய்த வள்ளுவரை வியப்பதைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை. பெண்ணுளத்தினுள்ளும் புகுந்து அவர்தம் எண்ணங்களையும், ஏக்கங்களையும் மிக மிகத் துல்லியமாய் வெளிப்படுத்திய குறளை, அதற்கேற்றக் கவிதை வரிகளால் அழகுற விளக்கிய தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
02-08-2012, 07:49 AM
கீதம் அவர்களின் நயமிகு பாராட்டுக்கு நன்றி!

கலைவேந்தன்
02-08-2012, 08:34 AM
காமம் புகுந்த மனதில் நாணத்திற்கிடமில்லை.
நாணம் வந்துதித்தால் காமம் கடந்துபோம்..

இந்த எளிய தத்துவத்தை அழகாய் விளக்கிய குறளுக்கேற்ப எழில்மிகு கவிதை படைத்த ஐயாவுக்கு பாராட்டுகளும் நன்றியும்..!!

M.Jagadeesan
02-08-2012, 08:37 AM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி கலைவேந்தன்!

சுகந்தப்ரீதன்
02-08-2012, 05:42 PM
நாணயமான விடத்து நாணத்தை விடுவதற்க்கு.. மதில்மேல் பூனையாய் குழப்பமெதற்க்கு..?!:confused:

வள்ளுவரின் வாய்மொழிக்கொண்டு உதித்திட்ட உங்கள் கவிதை அழகு ஐயா..!!:)

அமரன்
02-08-2012, 06:04 PM
அருமை.

மங்கையர் மனதை அறியும் கலை வள்ளுவனுக்கு வாய்த்தது எப்படியோ?