PDA

View Full Version : மலர்களே வாழ்த்துகள்



A Thainis
01-08-2012, 10:12 PM
காலையில் விரிந்து
மாலையில் வதங்கும் மலர்களே
நம் வாழ்க்கை ஒரு நாள்தானே
என்ற சோகம் கொள்ளாமல்
ஒரு நாளே பெரும் யோகம்
இதுவே எங்களுக்கு போதும்
பூத்து குலுங்குவோம் நாள்பொழுதும்
என்றே மனநிறைவு மகிழ்ச்சியில்
புன்னகை இதழ்களை அகல விரித்து
நறுமணம் வீசிடும் பூக்களே
மகிழ்ச்சி வாழ்த்துகள் மலருங்கள்
உங்களின் நம்பிக்கையில் நானும்
புது வாழ்க்கை பாடம் பயின்றேன்

-ஆ. தைனிஸ்

கீதம்
01-08-2012, 10:44 PM
விந்தை மலர்கள்தாம். பூத்துக் குலுங்கி நம்மை மகிழ்விப்பதோடு வாழ்க்கைப்பாடத்தையும் கற்றுத்தரும் அவற்றுள் சில வாழ்நாளுக்குப் பிறகும் தங்கள் பெயர் நிலைக்கும்படி காயாகி, பழமாகி, விதையாகி, விருட்சமாகும் சாதனையை என்னவென்று சொல்வது? கற்றுக்கொள்ள நிறையவே உண்டு மலர்களிடம்.

அழகான கவிச்சிந்தனை. பாராட்டுகள் தைனிஸ்.