PDA

View Full Version : விதை



A Thainis
01-08-2012, 10:08 PM
அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்
மண்ணுக்குள் நிகழ்வது மரணம்
என்பதை மாற்றி
மண்ணுக்கும் ஈரம் உண்டு - அங்கே
வாழ்வுக்கு மீண்டும் வழியுண்டு
என்ற புதிய நம்பிக்கை விதைத்திட்டாய்
மண்ணோடு போராடி மடிந்து மீண்டும்
விண்ணை காண விருச்கமாய் எழுந்திட்டாய்
தன்னை இழக்கும் வரை
தன்னலம் துறக்கும் வரை - தரணியில்
மறுவாழ்வுண்டு என்றே மெய்பித்தாய்

- ஆ. தைனிஸ்

கீதம்
01-08-2012, 10:50 PM
மண்ணுக்குள் முடிகிறது நம் வாழ்க்கை. மண்ணிலிருந்து எழுகிறது மரத்தின் வாழ்க்கை.

படிக்கத் தக்க வாழ்க்கைப்பாடம், வித்திலிருந்து விருட்சமாகும் சூட்சுமம்.

ஊக்கம் தரும் கவியாக்கம். பாராட்டுகள் தைனிஸ்.

சுகந்தப்ரீதன்
02-08-2012, 06:22 PM
விதைக்கொண்டு விதைத்திட்ட ஊக்கம் ஆல்போல் வாசகன் மனதில் ஆக்கம் பெறட்டும்..!!:)

தத்துவார்த்தமாய் யதார்த்தம் உணர்த்தும் கவிதைக்கு வாழ்த்துக்கள்... தைனிஸ்..!!:icon_b:

A Thainis
02-08-2012, 06:40 PM
சுகந்தப்ரீதன் பாச வார்த்தைகளை தொடுத்து
எனக்கு உற்சாகமூட்டும் தங்களுக்கு எனது இதய பூர்வமான நன்றிகள். உங்களது அரவணைப்பு எங்களை போன்ற புதிய தமிழ் மன்ற உறுப்பினர்களை மேலும் வளர்த்தெடுக்கும்.

கலைவேந்தன்
02-08-2012, 06:51 PM
அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்..

மண்ணுக்குள் நிகழ்வது மரணம்
என்பதை மாற்றி
மண்ணுக்கும் ஈரம் உண்டு - அங்கே
வாழ்வுக்கு மீண்டும் வழியுண்டு
என்ற புதிய நம்பிக்கை விதைத்திட்டாய்..

மண்ணோடு போராடி மடிந்து மீண்டும்
விண்ணைக் காண விருட்சமாய் எழுந்திட்டாய்

தன்னை இழக்கும் வரை
தன்னலம் துறக்கும் வரை - தரணியில்
மறுவாழ்வுண்டு என்றே மெய்ப்பித்தாய்

அருமை அருமை.. வார்த்தைகளின் வீரியத்தால் விதைப்பதற்கும் புதைப்பதற்குமான வேறுபாட்டினைப் புரியவைத்த அழகான கவிதை.. பாராட்டுகள் தைனிஸ்.

jayanth
03-08-2012, 08:39 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123'))

kulakkottan
03-08-2012, 09:08 AM
"அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்.."
பலரில் ஒருத்தர் தான் ஆக்க பூர்வமாய் செய்கிறார் என சுட்டி காட்டி விட்டீர்கள் !

இராஜிசங்கர்
03-08-2012, 09:51 AM
அனைத்தும் மண்ணில்
புதைக்கப்பட்டபோது - நீ
மட்டும் விதைத்துகொண்டாய்
மண்ணுக்குள் நிகழ்வது மரணம்
என்பதை மாற்றி
மண்ணுக்கும் ஈரம் உண்டு - அங்கே
வாழ்வுக்கு மீண்டும் வழியுண்டு
என்ற புதிய நம்பிக்கை விதைத்திட்டாய்
மண்ணோடு போராடி மடிந்து மீண்டும்
விண்ணை காண விருச்கமாய் எழுந்திட்டாய்
தன்னை இழக்கும் வரை
தன்னலம் துறக்கும் வரை - தரணியில்
மறுவாழ்வுண்டு என்றே மெய்பித்தாய்

- ஆ. தைனிஸ்

விதை - வாழ்ந்தால் மரம்
வீழ்ந்தால் உரம்

எங்கோ படித்தது நினைவு வருகிறது..
கருத்தான கவிதை..வாழ்த்துக்கள் நண்பரே

சிவா.ஜி
03-08-2012, 10:52 AM
விழுந்தால் விதையாக வீழ்வோமென விதைப்பதின் வீரியத்தைக் காட்டும் கவி வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

அனுராகவன்
03-08-2012, 04:24 PM
விதையின் விருட்ச்சம் போல நாம் எழுவோம்..
நல்ல கவி பாராட்டுக்கள்....

ஜானகி
04-08-2012, 10:36 AM
சத்தான விதை...முத்தான பாடம் !

தீபா
04-08-2012, 10:49 AM
வரிசையாக உங்கள் கவிதைகளைப் படித்ததில் நிறைய அறிவுரைகள் கிடைக்கின்றன. தத்துவநானி போல நிறைய எழுதுகிறீர்கள்.
விதைக்கு தண்ணீர் அல்லது ஈரம் தேவை.. அந்த ஈரத்திற்கு ஒரு பொருத்தமான உவமை கொடுத்திருக்கலாம்.

@ உங்கள் பெயரே வித்தியாசமாக இருக்கிறது. மெகஸ்தனிஸ் என்பது போல ஆ.தைனிஸ்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
தீபா

A Thainis
04-08-2012, 11:44 AM
தீபாவின் கருத்துகள் பாராட்டுக்களை கடந்து படைப்புகளை சிறந்த முறையில் திறனாய்வு செய்பவையாக உள்ளன, வாழ்த்துகள்.
நான் தத்துவஞானி யல்ல ஆனால் தத்துவயிலில் BA முடித்துள்ளேன். கடந்த ஆண்டுவரை கோவை காந்திபுரத்தில்தான் வசித்தேன்.