PDA

View Full Version : இணையதளம்



A Thainis
01-08-2012, 10:06 PM
அகன்ற உலகம் - இதில்
காணும் அத்தனையும்
நம் விழித்திரைக்குள்
விரிந்திடும் அதிசியம்
வலைபூக்கள் சேமிப்புக்குள்
சென்றுவிட்டால் - நம்
தேடல் வேட்டையில் முடிவேது
அள்ள அள்ள குறையாமால்
ஊரிடும் இணணய உலகம்
கைக்குள் இவ்விகத்தை
நமக்கு காணிக்கையாக்கும்
அபூர்வ அறிவு சொர்க்கம் - இது
அறிவியல் உலகின் உன்னதம்

- ஆ. தைனிஸ்

kulakkottan
02-08-2012, 02:11 AM
இணையத்தோடு தமிழும் வளருது என்று உங்கள் கவிதையால் பதிந்து விட்டீர்கள் இணையபக்கத்தில் ...

கீதம்
02-08-2012, 03:30 AM
இணையம் சிலருக்கு வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது, சிலருக்கு நரகமாக்குகிறது. ஒரு கத்தியைப் போல், ஒரு தீப்பந்தத்தைப் போல் பயன்பாட்டில் இருக்கிறது அதன் நன்மையும் தீமையும். இணையம் வழியே அறிவின் சொர்க்கம் திறக்கும் வழிசொல்லும் கவிதைக்குப் பாராட்டுகள் தைனிஸ்.