PDA

View Full Version : புகழ்சேர் செந்தமிழ் வாழியவே



A Thainis
01-08-2012, 10:00 PM
இறைவனோடும் இவ்விகத்தோடும்
இணைந்து தோன்றிட்டு
காலங்களை கடந்து வாழ்ந்திடும்
பண்பட்ட பழமை மொழி

அடர்காடுகளில் கரடுமலைகளில்
அலைந்து திரிந்திட்ட முதல் மனிதன்
இயற்கையோடு இணைந்து உறவாடி
வடித்திட்ட இயற்கை மொழி

சொல்யொன்றை உயிர் ஓவியமாய்
யுகமதில் வாழும் காவியமாய்
சிந்தனையை கடைந்து படைத்து
தீட்டிட்ட தொன்மை மொழி

தானே விதையுண்டு விருச்சகமாய்
வேரோடி ஆலமரமாய் தழைத்திட்டு
இலக்கண இலக்கியம் வளம் கொளுத்து
செழுத்திட்ட செம்மொழி

தெலுகு கன்னடம் துளு மலையாளம்
என இருபத்தொன்பது புதுமொழி விழுதுகள்
தன்னிலே ஈன்றெடுத்து பிறமொழி கலவாது
உயர்தனி தமிழ் தாய்மை மொழி

தமிழ் வேந்தர்களும் மாந்தர்களும்
சங்கங்கள் நிறுவிட சான்றோர்கள்
இயிற்றிட்ட வாழ்வியியல் நூற்களால்
கல்வி சிறந்திட்ட நெறியியல் மொழி

திருநூற்கள் குறளும் நாலடியும் சிலம்பும்
தெய்வ புலவன் திருவள்ளுவரையும்
தேன்கவி புலவன் கம்பனையும்
வரமாக பெற்றிட்ட சிறப்பு மொழி

தமிழகம் ஈழம் தன் தாயகத்தில்
மலேயா சிங்கை மொரிசு பிஜு
என புலம்பெயர்ந்த பன்னாட்டில்
தலைநிமிர்ந்து புகழ்சேர் உலக மொழி

கணிணியுகத்தில் தடம் பதித்து
அறிவியியல் மொழியாய் பரிணாமித்து
இணையத்திலும் புதுமை புரட்சி செய்து
நாளும் உயரும் நம் தாய் தமிழ் மொழி


- ஆ. தைனிஸ்

கீதம்
02-08-2012, 05:59 AM
தமிழ்மொழியின் சிறப்பையும் மேன்மையையும் எடுத்துரைக்கும் அழகான வரிகள். வாசிக்கும்போதே மனதில் செருக்குண்டாகிறது. இனிய கவிதைக்குப் பாராட்டுகள் தைனிஸ்.

சிறு விண்ணப்பம் - சொல்லொன்றை, விருட்சமாய், வாழ்வியல், அறிவியல் இவ்வார்த்தைகளில் சற்றே கவனம் செலுத்துங்களேன்.