PDA

View Full Version : பிரிவு...



PremM
31-07-2012, 06:36 PM
ஆ:
கடிதம் ஒன்று போடு பெண்ணே,
கால் நூற்றாண்டு வாழும் இதயம்..

பெ:
காதலோடு கண்ணீரும் வந்தால்,
கனத்திடுமோ உந்தன் இதயம்?

ஆ:
உந்தன் கண்ணீரில் மூழ்கியேனும்,
எடையிழக்கும் எந்தன் இதயம்..

ஆ:
வசைகள் கேட்கும் நேரமெல்லாம்,
அங்கே உன் செவிகள் என் செய்யும்?

பெ:
இதழ்கள் இணையும் ஓசை மட்டும்
அந்தக் கணம் கடத்துவதுண்டு..

பெ:
என்னை உறக்கும் இரு தோள்கள்,
எங்கே இனி செல்லும்?

ஆ:
பறவைகளற்ற கூடுகளாய்
அழகொழிந்து நிற்க்கும்..

பெ:
என் கூந்தல் அலங்கரிக்கும்
உன் பூக்கள் இங்கே பூமியில் என் செய்யும்?

ஆ:
அவை புன்னகையின் விலை தேடி
தோட்டத்தில் மாண்டு இறக்கும்..

ஆ:
நாணம் ஏந்திய இரு விழிகள்,
பூமியில் பதுங்க காண்பேன்..
முத்தக் காயங்கள் காய்ந்தப் பின்பும்,
அவை வெளியே வர மறுக்கும்..
நாணங்கள் சூடிக் கொண்ட,
பெண்ணே உன் பூ விழிகள் இனி என் செய்யும்?

பெ:
இமைக் கதவடைத்தேன்,
இருளோடு புதைந்தேன்..
இருந்தும் நனைகின்றது,
விழிச் சாரலில்,
கன்னங்கள் கரைகின்றது..

பெ:
ஐவ்விரல் இரண்டு,
என் கரம் பற்றி,
நரைகள் மறந்தக் கதைகள் பேசி,
கவிதைகள் பகிர்வோம்,
இரவினை உண்போம்,
எனும் பல கனவுகள் இனி என்ன செய்யும்?

ஆ:
முள்ளறைகள் கட்டிக்கொண்டு
பூமியில் வாழ்வதேன்?
கல்லறைகள் கட்டிக்கொண்டு
சரித்திரத்தில் சேர்வோம் வா..
கனவுகள் ஆயிரம் காற்றினில் இருக்கும்,
விடியும் வரை அவை விண்ணில் மிதக்கும்,
நரைகள் பல கூடும் பெண்ணே,
என் நடைகள் தளரும் உன் முன்னே,
காற்றுக் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து
கனவுகள் ஆயிரம் தீர்ப்போம் வா..

சுகந்தப்ரீதன்
02-08-2012, 06:41 PM
ஏக்கத்தையும் எதிர்பாப்பையும் உரையாடலில் உறையவைத்து உணர்வை கொட்டிட்டீங்க...ப்ரேம்..!!:icon_b:

ரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ரேமோட கவிதை... அதே ஃப்ரேமோட...ஹா..ஹா..!!:lachen001:

அனுராகவன்
04-08-2012, 10:21 PM
நல்ல கவி பீரேம்..காதலை(பீரேம்) பற்றி உரையாடலாக....
நானும் ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல கவி கண்டேன்..:traurig001::lachen001:

PremM
12-08-2012, 05:58 PM
நன்றி தலைவா...

முதலில் நல்ல கவி என்று சொன்னதற்க்கு நன்றி..
ஆனா ரொம்ப நாளைக்கு பிறகுனு சொன்னது மட்டும் பொய் தானே?