PDA

View Full Version : மிருகமாய் நீயும் மாறு



kulakkottan
31-07-2012, 04:54 AM
https://m.ak.fbcdn.net/a4.sphotos.ak/hphotos-ak-ash4/s720x720/488184_469043929781190_1723404010_n.jpg
கேட்டால் தருவதற்கு -வள்ளல் இல்லை இங்கு
தட்டி தான் கேட்க வேண்டும் அதுவும் உரக்க !

காத்திருந்தால் மலர ஈரமில்லை பாரில்
கையதனை ஓங்கித்தான் எல்லாமே இங்கு!

வீழ்பவன் ஆளபடுவான்-மிருகமாய் நீயும் மாறு
வீழும் அதிகாரம் உந்தந காலடியில் ௧

நல்லவனாய் நீ வாழ இது ஒன்றும் புண்ணிய பூமி இல்லை
வல்லவனாய் நீ இல்லாவிட்டால் நீயும் இங்கே மண்தான் !

aasaiajiith
31-07-2012, 04:58 AM
நிழற்படத்திர்க்கும், கவிதைக்கும் இத்தனை முரண்பாடா ?
ஒருவேளை முரண்பாட்டு கவிதையோ ?


நல்ல வரிகள் !

kulakkottan
31-07-2012, 05:01 AM
இலக்குக்கா ,கடும்கொள்கை வைக்கும் போது இயற்கை குணம் மாறது !மனிதனுக்கு மனிதனாய் மிருகத்துக்கு மிருகமாய் !இந்த பாலகர்களுக்கு மிருக குணம் வர இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை

aasaiajiith
31-07-2012, 05:08 AM
எழுத்துக்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால்
பொருள் பிறழ்வு நேராது , புரிதலின் குறையும் குறையும் !

(புதுப்பதிவர் எனும் அக்கறையினில்)

kulakkottan
31-07-2012, 05:13 AM
வரிகளை சுட்டி காட்டினால் இன்னும் மகிழ்வேன் நண்பரே

M.Jagadeesan
31-07-2012, 05:16 AM
கேட்காதே! தட்டிப் பிடுங்கு !!
காத்திருக்காதே! கையை ஓங்கு!!
வீழாதே! வீழ்த்து!!
நல்லவனாய் இருக்காதே! வல்லவனாய் இரு!!

போன்ற நீதிகளை வலியுறுத்தும் கவிதை ! பாராட்டு.

aasaiajiith
31-07-2012, 05:20 AM
இலக்குக்கா ,கடும்கொள்கை வைக்கும் போது இயற்கை குணம் மாறது !மனிதனுக்கு மனிதனாய் மிருகத்துக்கு மிருகமாய் !இந்த பாலகர்களுக்கு மிருக குணம் வர இன்னும் கொஞ்சம் அனுபவம் தேவை

கீதம்
31-07-2012, 07:20 AM
அழும் குழந்தைதான் பால்குடிக்குமாம். எப்போதுமே அழுதுகொண்டிருக்கும் குழந்தைக்கோ அதன் பசியும் அறியப்படாமல் போகும்.

எல்லோருமே இவ்வழி நடந்தால் எவருக்குமே எதுவும் கிட்டாமலும் போகக்கூடும் அல்லவா? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டல்லவா?

கவிதைக் கருத்தில் எனக்கு பெரும் சிலாக்கியம் இல்லை என்றாலும் எழுதிய விதத்தில் மனம் கவர்கிறது. பாராட்டுகள்.

அனுராகவன்
31-07-2012, 05:31 PM
பாப்பா பாடும் பாட்டு..
ஆகா அருமை...
சிக்கு புக்கு.....

சிவா.ஜி
31-07-2012, 06:05 PM
முட்டி போட்டுக் கேட்டா கிடைக்காது...தட்டிக் கொட்டிக் கேட்டா கிடைக்கும்ன்னு சொல்றீங்க....வீரம் அவசியம்தான்....அதே சமயம் விவேகமும் கலந்திருந்தால்...காயமின்றி காரியமாற்றலாம்.

வாழ்த்துக்கள் நண்பரே.

கலைவேந்தன்
31-07-2012, 06:17 PM
வன்முறையை உபதேசிக்கும் இக்கவிதையின் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. ரௌத்திரம் கொள் என்று பாரதி சொன்னதன் உட்பொருள் வேறு. மோதி மிதித்து முகத்தில் உமிழச்சொன்னது பாதகரைக் கண்டால்..

ஆனால் இக்கவிதையில் ( அதற்கென இடப்பட்ட படத்திலும் கூட ) வன்முறையை இளைய தலைமுறைக்கு வசியமாய் சொல்லும் தீவிரவாதிகளின் பகட்டுப்பேச்சுப்போல்தான் உள்ளதாய்ப் படுகிறது.

மன்னிக்கவும். இதுபோன்ற கவிதைகளை ஊக்குவித்தலும் கூட தவறெனச்சொல்வேன்..

ஜான்
01-08-2012, 02:40 AM
சேகுவேரா வா?

அப் படத்திற்கு இதுபோல்தானே எழுத முடியும் ?

kulakkottan
02-08-2012, 01:35 AM
எல்லாவேளையும் சாத்வீகம் சரிவராது !
சில வேளை சில மொழிகளில் பேச வேண்டும் என்பதை தான் சொல்ல வந்தேன் !
வாழ்த்துக்கு நன்றி

kulakkottan
02-08-2012, 01:48 AM
எல்லாவேளையும் சாத்வீகம் சரிவராது !
சில வேளை சில மொழிகளில் பேச வேண்டும் என்பதை தான் சொல்ல வந்தேன் !
எல்லாவேளையும் சாத்வீகம் சரிவராது !
சில வேளை சில மொழிகளில் பேச வேண்டும் என்பதை தான் சொல்ல வந்தேன் !
வாழ்த்துக்கு நன்றி -சிவா.ஜி,அச்சலா ஆசியாஜஈத்
M.ஜெகதீசன்
கீதம்

கலைவேந்தன் -அண்ணா பாலகருக்கு வன்முறை புகட்டல் தவறு என்பதை ஒத்து கொள்கிறேன் !
ஆனால் சே குவேரா நோயாளியிடம் மருத்துவராய் ,சர்வாதிகாரியிடம் விடுதலையில் தீவிரவாதியாய் இருந்தார் அவர் படந்துக்கு கவிதை எழுதினாலும் அதில்,ஒரு புரட்சி தொக்கு நிற்கும் .
பாலகரை கொத்தாய் கொல்லும் உலகில் ஆயிரம் பலகறை காக்க ஒரு தீவிர வாதம் தப்பு இல்லை
(தன் கொள்கையில் எதற்கும் விலை போகாமல் போராடும் போராளிகளுக்கு அதிகாரம் இட்டு கட்டிய பெயர் தான் தீவிர வாதம் )


ஜான்
அண்ணா சே பற்றி நன்றாக புரிந்து வைத்து கொண்டு இருக்கிறீர்கள்

kulakkottan
02-08-2012, 01:49 AM
நான் இம் மன்றத்துக்கு புதியவன் நடைமுறை பிழைகளுக்கு மன்னித்து சுட்டிக்காட்டவும்

aasaiajiith
02-08-2012, 04:30 AM
எழுத்துக்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால்
பொருள் பிறழ்வு நேராது , புரிதலின் குறையும் குறையும் !

(புதுப்பதிவர் எனும் அக்கறையினில்)


வாழ்த்துக்கு நன்றி -சிவா.ஜி,அச்சலா ஆசியாஜஈத்
M.ஜெகதீசன்
கீதம்


இதை சொன்னதற்க்கா இந்த குதறல் ????

aasaiajiith
02-08-2012, 04:33 AM
இருந்தும் சொல்வேன் ....

எழுத்துக்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால்
பொருள் பிறழ்வு நேராது , புரிதலின் குறையும் குறையும் !

(புதுப்பதிவர் எனும் அக்கறையினில்)

kulakkottan
04-08-2012, 01:33 AM
மன்னித்து கொள்ளுங்கள் இது தற்செயலாய் கவன குறைவாய் நடந்த பிழை !
ஆசை அஜித் !aasaiajiith!
தலை பெயர் வந்ததாலோ என்னோமோ சிறு தடுமாற்றம் போலும் !

aasaiajiith
04-08-2012, 04:47 AM
தல போல வருமா ??

வாழ்த்துக்கள் !!