PDA

View Full Version : தொற்றிக்கொண்டே



PUTHUVAI PRABA
31-07-2012, 04:42 AM
நிரம்பி வழிந்தாலும் கூட
ஓடிப்போய் தொற்றிக்கொண்டு
படியிலே பயணிக்கும்
ஒர் பயணிபோல
வேலைச்சுமை பிதுங்கி வழிகிற
என் வாழ்க்கைப்பயணத்தில்
தொற்றிக்கொண்டே வருகிறது
உன் நினைவுகள்.

புதுவைப்பிரபா

aasaiajiith
31-07-2012, 04:54 AM
நல்ல வரிகள் !
யதார்த்தமானவையும் கூட .

வாழ்த்துக்கள் !

மதி
31-07-2012, 05:15 AM
நிரம்பி வழியும்
நினைவுகளோடு என்றும்
இந்த வாழ்க்கைப் பயணம்
தொடரும்
தொடரட்டும்..

நன்று புதுவைபிரபா!

PUTHUVAI PRABA
31-07-2012, 05:51 AM
ஆசைஅஜித், மதி அவர்களே
பாராட்டுதலுக்கு நன்றி

கீதம்
31-07-2012, 07:12 AM
தொற்றிக்கொண்டேனும் சேருமிடம் சேர்ந்துவிடுவதில் படுசமர்த்துதான் அவை.

மிகவும் ரசிக்கத்தக்க உவமை, உண்மையும் கூட.

பாராட்டுகள் புதுவை பிரபா.

ராஜா
31-07-2012, 08:27 AM
பேருந்து நிறுத்தம்வரை இறங்கா நினைவுகள்..

மூச்சை நிறுத்தும்வரை உறங்கா நினைவுகள்,..

படித்தவுடன் பசைபோல் மனதில் ஒட்டிக்கொள்வதில்தான் இருக்கிறது கவிதையின் வெற்றி.. நீங்கள் ஒரு வெற்றிகரமான கவிஞரே..!

பாராட்டுகள் பிரபா..!

PUTHUVAI PRABA
01-08-2012, 06:12 AM
மிகவும் ரசிக்கத்தக்க உவமை, உண்மையும் கூட.

பாராட்டுகள் புதுவை பிரபா.
- கீதம்-


படித்தவுடன் பசைபோல் மனதில் ஒட்டிக்கொள்வதில்தான் இருக்கிறது கவிதையின் வெற்றி.. நீங்கள் ஒரு வெற்றிகரமான கவிஞரே..!

பாராட்டுகள் பிரபா..!
-ராஜா-

ஊக்க வார்த்தைகளால் பாராட்டிய உறவுகள் இருவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

HEMA BALAJI
04-08-2012, 12:03 PM
மிகச் சாதாரணமான, அன்றாடம் பார்க்கக் கூடிய நிகழ்ச்சி ஒன்றை நயம்பட பொருத்தி கவிதையாக்கிய விதம் மிக அருமை புதுவை ப்ராபா அவர்களே. பாராட்டுகள்.

seguwera
04-08-2012, 01:08 PM
எட்டு வரியில் உணர்ந்து எழுதியிருக்கிறீர்
வாழ்த்துக்கள்