PDA

View Full Version : எளியவன் மனதில்



ஜான்
31-07-2012, 04:31 AM
இத்தனை யுகமாய்த்

தான்மட்டும் தனியே கிடந்து

மினுக்கிய வெளியில்

திடீரெனக்

குறுக்கும் நெடுக்குமாய்

மினுக்கித் திரிவது

விமானமா

செயற்கைக் கோளா

இன்னொரு விண்மீனா

ஒன்றும் புரியாமல்

சிமிட்டிக் கொண்டிருக்கிறது

ஒற்றை நட்சத்திரம் !

ஜான்
31-07-2012, 04:32 AM
எட்டு மணிக்கு
ரயிலைப் பிடிக்கவும்
எப்படியாவது
பிளைட்டைப் பிடிக்கவும்
இரண்டு காதிலும்
செல் போனுடனும்
இரவுக்குள் வீடு திரும்பவும்
எல்லா மனிதரும்
காற்றாய்ப் பறக்கையில்
யாரும் கவனிக்காமல்
யாருடனும் பேசாமல்
சோகமாய் வீசுகிறது
திசை தெரியாமல்
நகருக்குள் வந்துவிட்ட
ஆடிக்காற்று