PDA

View Full Version : அன்பே ஆருயிரே

இராஜிசங்கர்
30-07-2012, 07:53 AM
அழகுக்கிளியே!
ஆசைமயிலே!
இன்னும் கொஞ்ச நேரம் இசைத்திடு குயிலே!
ஈரம் ஏற்றி வைத்தாய் என் நெஞ்சுக்குள்ளே!
உயிரும் உருக வைத்தாய் உன் செவ்விதழ் மொழியாலே!
ஊர் உறவுகள் மறந்துபோகிறேன் உன் சொல்வனப்பின் சுவையினிலே!
எண்ணி எண்ணி ரசித்தேன் உன் நேசத்தை!
ஏன் இன்னும் கடத்துகிறாய் நேரத்தை!
ஐம்புலனும் தவிக்குதடி தாகத்தில்!
ஒயிலாய் நீ வந்தால் ஒருங்கிணையும் உன் வார்த்தையில்!
ஓடி வா உயிரே உயிர் நிறைக்க!
ஔவை மொழிப்படி வாழ்வமைக்க!

சிவா.ஜி
30-07-2012, 11:30 AM
ஆத்திச்சூடிகள் பல....இந்த காதல் ஆத்திச்சூடி....அழகாய் அமைந்திருக்கிறது.

உயிரெழுத்து வரிசையில் வரிகள் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்ம்மா.

இராஜிசங்கர்
30-07-2012, 11:47 AM
ஆத்திச்சூடிகள் பல....இந்த காதல் ஆத்திச்சூடி....அழகாய் அமைந்திருக்கிறது.

உயிரெழுத்து வரிசையில் வரிகள் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்ம்மா.

நன்றிங்க அண்ணா

M.Jagadeesan
30-07-2012, 12:20 PM
ஆத்திச்சூடியில் காதலியை ஏத்திப்பாடிய தங்களின் கவிதையை ரசித்தேன்!!

இராஜிசங்கர்
30-07-2012, 12:21 PM
நன்றிங்க ஐயா

சுகந்தப்ரீதன்
30-07-2012, 03:30 PM
அடி ஆத்தி... என்று ரசிக்க வைக்கிறது உயிரெழுத்து கொண்டு உரைத்த ஆத்திச்சூடி..!!:)

ஆயுதத்தை கண்டால் காதலி கலங்கிடுவாள் என்று கவனமுடன் ஆத்திசூடியில் ஃ தவிர்த்தீரோ..?!:lachen001:

ரசனையுடன் கூடிய நல்லதொரு முயற்சி... பாராட்டுக்கள்...!!:icon_b:

jayanth
30-07-2012, 05:57 PM
"நியூ வேவ் ஆத்திச்சூடி"...
என்னவென்று சொல்வதம்மா இக்கவிதை அழகை...
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

இராஜிசங்கர்
31-07-2012, 04:38 AM
அடி ஆத்தி... என்று ரசிக்க வைக்கிறது உயிரெழுத்து கொண்டு உரைத்த ஆத்திச்சூடி..!!:)

ஆயுதத்தை கண்டால் காதலி கலங்கிடுவாள் என்று கவனமுடன் ஆத்திசூடியில் ஃ தவிர்த்தீரோ..?!:lachen001:

ரசனையுடன் கூடிய நல்லதொரு முயற்சி... பாராட்டுக்கள்...!!:icon_b:
மிக்க நன்றி சுகந்தப்ரீதன்

இராஜிசங்கர்
31-07-2012, 04:39 AM
"நியூ வேவ் ஆத்திச்சூடி"...
என்னவென்று சொல்வதம்மா இக்கவிதை அழகை...
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

http://www.desismileys.com/smileys/desismileys_6498.gif..............

aasaiajiith
31-07-2012, 05:01 AM
இனி, ஆங்கிலோ இந்தியர்களும் ஆத்திச்சூடி
பயில்வர் போலும் ???

வாழ்த்துக்கள் !

இராஜிசங்கர்
31-07-2012, 05:05 AM
இனி, ஆங்கிலோ இந்தியர்களும் ஆத்திச்சூடி
பயில்வர் போலும் ???

வாழ்த்துக்கள் !

எப்படியாவது தமிழ் வளர்ந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே!! நன்றி aasaiajiith...

aasaiajiith
31-07-2012, 05:10 AM
தமிழின் வளர்ச்சி தவிர்க்கமுடியாதது !

தொடரட்டும் உங்கள் தமிழ் வளர்ச்சிப்பணி !!

வாழ்த்துக்கள் !

கீதம்
31-07-2012, 07:08 AM
படிப்படியாய் அதிகரிக்கும் உயிர்க்காதலின் வீரியத்தை அழகாக உணர்த்திய உயிரெழுத்துக் கவிதை.

சிற்றோடையாய்த் துவங்கி சிறுநதி, பெருநதியென வளர்ந்து வேகம் கூட்டிச் சென்று முடிவில் சமுத்திரத்தில் சங்கமிக்கும் நீரோட்டம் போல... அவள் அழகில் குரலில் லயித்து, நேசத்தை ரசித்து, புலனடக்கமின்றித் தவித்து, ஓடிவந்துவிடு என்று அழைத்து முடிவில் வாழ்க்கை சாகரத்தில் சங்கமிக்கத் துடிக்கும் உணர்வோட்டம்.

பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
31-07-2012, 07:28 AM

மிக்க நன்றி கீதாக்கா