PDA

View Full Version : வேரை மறந்த விழுதுகள் ..!



vasikaran.g
29-07-2012, 08:28 AM
கருவறையில் உலவவிட்டு ,
உணவறையை பகிர்ந்தளித்து ,
உணர்வுகளை ஒருங்கிணைத்து,
உறைவழியே -சுவாச
அறை செய்தளித்து ,
உதிரத்தை உறிஞ்ச
உரிமை கொடுத்து ,
உயிரை வளர்த்தவளை ,
திண்ணையில் உட்காரவைத்து ,
கண்ணில் குளம் தோண்டும்
கண்ணின் மணிகளுக்கு ,
சொல்லித் தெரிவதில்லை
சொந்த தாயின் அருமை .!

தன் நலம் கொன்று ,
மக்கள் நலம் பெரிதென்று
தன் வாழ்நாளை
தந்து மகிழ்ந்தவனை ,
கொன்று களிக்கின்றது
செல்ல பிள்ளைகள் .!!

கண்ணுக்குள் வைத்துக் காத்தவர்கள் ,
இன்னும் ஏன் மண்ணுக்குள்
போகவில்லை என்றொரு ஏக்கம் ,
கண்மணிகள் மணந்த
பெண்மணிகளின் பெருவிழிகளில் !!!

வயிற்றில் சுமப்பவளுக்காக ,
வயிற்றில் சுமந்தவளை ,
கயிற்றில் தொங்கவிடுகிறாயே ?
ஏய் மானிடா !
வளர்ந்தகதை மறந்ததேனடா ??

M.Jagadeesan
29-07-2012, 09:02 AM
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும்,தந்தையையும் தவிக்க விடுகின்ற பிள்ளைகளுக்கு சரியான சவுக்கடி.பாராட்டுக்கள் வசிகரன்!

கீதம்
29-07-2012, 11:17 PM
தங்கள் வாழ்க்கையின்பத்தைப் பணயம் வைத்துப் பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கிவிட்டவர்கள், பின்னாளில் அப்பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்படும்போது எழும் வேதனை சொல்லி மாளாது. அன்பொன்றைத் தவிர அவர்கள் எதிர்பார்ப்பது வேறெதுவும் இல்லையென்று அறிந்தபின்னும் அதை மறுதலிக்கும் பிள்ளைகளை என்ன சொல்வது? பெற்றோரை ஒதுக்கும் பிள்ளைகள் கட்டாயம் அறியவேண்டிய பாடம் கவிதையாய். பாராட்டுகள் வசிகரன்.

ஜானகி
30-07-2012, 01:57 AM
சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா இந்தச் சவுக்கடியை....? ஏதேனும் ஓர் உள்ளம் உணர்ந்தாலும் தமிழுக்கு வெற்றியே !

சுகந்தப்ரீதன்
30-07-2012, 03:03 PM
பழுத்த இலையை பார்த்து குருத்த இலை சிரித்த கதையிது...
இதில் வளர்ந்த வளர்த்த கதையெல்லாம் அது பழுக்கும்போது அதனதன் புத்திக்கு புரிந்திடும்..
அதுவரை நீங்கள் எதை எடுத்துசொன்னாலும் அது எட்டியே உதைத்திடும்..!!

தங்களின் ஆதங்கம் அருமை.. தொடருங்கள்..வசி..!!:icon_b: