PDA

View Full Version : நீரும் நெருப்பும்.



M.Jagadeesan
29-07-2012, 04:04 AM
பஞ்சும் நெருப்பும் பக்கத்திலே இருந்தால்
பற்றியே எரியும் என்பார் உலகியலார்.

ஆனால்

நீரோடு நீர்கலந்து எரிகின்ற காட்சியினை
ஊரார் கண்டு வியந்தே நின்றனரே!

மங்கையவள் பெயரோ மாசில்லா " கங்கை"
மன்னவன் பெயரோ வற்றாத " கிருஷ்ணா"

பேருந்து நிறுத்தத்தில் அருகருகே இருவர்
பேருந்து வந்தது ; ஏறினர் இருவரும்.
பேருந்தின் உள்ளே கங்கை அமர்ந்திருக்க
தொங்கிய நிலையில் கிருஷ்ணா பயணிக்க
சதிராடும் கண்கள் சங்கமம் ஆனதால்
மிதிலைக் காட்சியங்கே மீண்டும் நடந்தது.

பேருந்து நின்றது ; இறங்கினர் இருவரும்
கங்கையும், கிருஷ்ணாவும் கைகோர்த்து சென்றனர்
நீரோடு நீர்கலந்து எரிகின்ற காட்சியினை
ஊரார் கண்டு வியந்தே நின்றனர்!

கலைவேந்தன்
29-07-2012, 12:37 PM
ஆஹா.. அருமையான காட்சியை கண்முன் கொண்டுவந்தீர்கள் ஐயா.. நீரும் நெருப்பும் என்ற தலைப்புக்குப்பதிலாய் நீரு நீரும் என்றே கூட இருந்திருக்கலாமோ..?

கங்கையும் கிருஷ்ணாவும் கலந்திட்டாற் போலே கங்கையும் காவிரியும் ஒருமிப்பது என்னாளோ..?

அழகான கவிதைக்கு பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
29-07-2012, 01:10 PM
கலைவேந்தன் பாராட்டுக்கு நன்றி!

கீதம்
29-07-2012, 11:36 PM
நீரும் நீரும் இங்கே காதல் தீயால் கொதித்து சூடேற, ஆவியாகும்வரை இது நீடித்திருந்தால் அழகுதான்.

பேரைக் கொண்டு படைத்த மாறுபட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
30-07-2012, 01:04 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

சுகந்தப்ரீதன்
30-07-2012, 02:59 PM
கண்கள் கண்ட காட்சியை அழகிய உவமைகள் கொண்டு உயிர்பித்த உங்களின் கவிவரிகள் மனதை கவர்கிறது..!! தொடருங்கள் ஐயா..!!:)

(ரொம்ம்ம்ம்ம்ம்ப..நுணுக்கமா கவனிப்பீங்க போலிருக்கே...)

M.Jagadeesan
30-07-2012, 03:26 PM
சுகந்தப்பிரீதன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.