PDA

View Full Version : நேத்து வரை



jayaprakash
28-07-2012, 04:18 PM
முகவெட்டில் மனம்வெட்டியவளே!
கண் திறந்து
நீபார்த்தால் நான்செத்தேன்
கண் மறந்து
நீபார்த்தால் நான்பிழைத்தேன்
விழியாலே உயிரெடுத்த
மாயம் தான் என்ன?
விழியாலே உயிர்கொடுத்த
மர்மம் தான் என்ன?
செல்லப் பார்வை பார்த்து
நேத்து வரை
என்னைச் செல்லாக் காசாக்கிவிட்டு
இன்று சொல்லாமல் போனதேனடி?

aasaiajiith
29-07-2012, 06:02 AM
செல்லாக்காசு தானே சொல்லிப்போனால் என்ன
சொல்லாமல் போனால் என்ன என கருதிருப்பரோ என்னவோ ?
( நகைச்சுவைக்கு மட்டும் )

நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் !

அமரன்
29-07-2012, 07:02 AM
காயமும் நீயே...
மருந்தும் நீயே..
மாயக்காரி..
நீதான் என் காதலி..

இல்லறம் இனிக்க இதுவும் ஒரு வழி..

அதை ஒத்தி எடுத்த கவி..

செல்லாக்காசாக்கிவிட்டு சொல்லாமல் போனாளே எனக் கவலைப்படாதீங்க ஜயப்பிரகாஷ்.

செல்லாக்காசுகளுக்கு இன்னொரு பெயருண்டு.... புதையல்.

இன்னும் எழுதுங்கள்.

மன்றத்தின் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்துகொள்ளுங்கள்.

jayaprakash
29-07-2012, 10:14 AM
வாசித்துப் பதில் போட்டவர்களுக்கு நன்றி.

கலைவேந்தன்
29-07-2012, 12:30 PM
சிறந்த முயற்சி. மேலும் சிறப்புற வாழ்த்துகள்.