PDA

View Full Version : கலைவேந்தனின் காதல் கதை பகுதி - பதின்மூன்று



கலைவேந்தன்
26-07-2012, 03:58 PM
பகுதி_பதின்மூன்று



அந்த இலக்கியப் பட்டங்கள்

அனைத்தும் அவனுக்கு

வேலை வாய்ப்பைத்

தரவில்லை---ஆம்

ஏழைக்கு வாய்ப்பேது??

அந்த தேவதையை

உயிர்ப்பித்த சிற்பிகள்

நல்லவர்கள் தாம் ஆனாலும்

அவர்கள் சமூகக் கயிற்றால்

ஆட்டிவைக்கப்பட்ட

தோல் பொம்மைகளே!

எந்தத் தகுதியின்மை

அந்தக் கவிஞனின்

மறுதலிப்புக்குக் காரணமோ?

சாதி வேலிதான்

பாதித்ததோ?

அவர்களின் ஆகாயமனங்கள்

குறுகிப்போனது

சாதி இருட்டினாலா?

அந்தக் கவிஞன் ஏழையானது

காதல் குற்றமோ?

அதன் தண்டனை

இரண்டு இதயங்களின்]

ஆயுள் அழுகையோ?

இயற்கை வெளியில்

இயங்கிப் பறக்கும்

இணைப்பறவைகள்

தங்களுக்குள் சாதிப்போர்வை

போர்த்துகிதறதா?

சுகமாய்த் திரியும் புள்ளிமான்கள்

திருமணத்திற்காக

அந்தஸ்து பேரம் பேசுகிறதா?

பல வண்ணங்கள் கொண்டாலும்

மயில்தோகை அழகல்லவா?

சந்திரனைத்தொட்டுவிட்டு

செவ்வாய்க்குத் திட்டமிடும்

ஆறறிவுப் பிறவிகள் மட்டும்

சாதி பார்ப்பதேன்? அந்தஸ்து தேடுவதேன்?

சாதி மாறினால்

இரத்த தர்மம்

பச்சை நிறத்தில் பரிணமிக்கிறதா?

ஏழையின் குருதி அசுத்தமானதா?

கீதம்
27-07-2012, 11:17 AM
சமூகக் கயிற்றால் ஆட்டிவைக்கப்படுகின்றனர் பொம்மைப் பெற்றோர்.

அப்பெற்றோரின் அன்புக் கயிற்றால் ஆட்டிவைக்கப்படுகின்றனர் பொம்மைப் பிள்ளைகள்.

காதல் மேவிய உள்ளக் கிடக்கைகளை கலங்கடிக்கும் வரிகளால் உணர்த்தும் கவிதைக்குப் பாராட்டுகள்.

கலைவேந்தன்
29-07-2012, 04:02 AM
உங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கீதம்..!

சுகந்தப்ரீதன்
10-08-2012, 06:34 AM
பல வண்ணங்கள் கொண்டாலும்

மயில்தோகை அழகல்லவா? ஆற்றாமையில் சீற்றத்துடன் வெளிபடும் வரிகளுக்கு இடையே மென்மையாக சமூகத்தின் மனசாட்சியை கீறிவிட்டு வருடிவிட்டு செல்லும் வலி(மை)மிகுந்த வரிகள்..!!

எல்லா கேள்விகளுக்கும் விடைகிட்ட போவது எந்நாளோ..?!