PDA

View Full Version : கலைவேந்தனின் காதல் கதை பகுதி - பதினொன்று



கலைவேந்தன்
26-07-2012, 03:56 PM
பகுதி_பதினொன்று

எததனையோ ஏக்கக் கனவுகளுடன்

தேர்வுகளுக்குப் படித்தனர்...

ஒருவருக்கொருவர்

உரையாடிஉரையாடி

தேர்வு நாட்களை

வசந்த ஊஞ்சலில் வைத்துப் பார்த்தனர்...

இறுதித் தேர்வன்று அவன்

உறுதி இழந்து உருகிவிட்டான்..

அவள் மறுநாள்

தனது சொந்த ஊரைச்

சிறப்பிக்கப் போகிறாள்...

கல்வி பயின்ற மண்ணை விட்டு

கால் பிரிய மனமில்லை...

கவிஞனின் நினைவு அவள்

காலைச்சுற்றி வந்தது...

அவள் தழுது கூறினாள்:

'' எங்கிருந்தாலும் நாம்

ஒன்றாகவே சுவாசிப்போம்...

நான்.....

தாய் வீடு செல்லும்

உங்கள் மனைவி!!

விரைவில் உங்கள் இல்லம் கண்டு

உயிர் பிழைப்பேன்!!

அது வரை

உறுதிக் கயிற்றால் உங்கள்

உடலைக்காப்பேன்...

நீங்கள் என் உயிரைக் காருங்கள்!

நாற்றங்காலின் முழுச்சம்மதம்

கிடைத்தாலும் அல்லவெனினும்

இந்தப் பயிர் உங்கள்

வயலுக்கே சொந்தம்''

இப்படிக்கூறி

இதயத்தை இறுக்கிகொண்டு

அவள் விடை பெற்றாள்....

கீதம்
27-07-2012, 11:06 AM
'' எங்கிருந்தாலும் நாம்

ஒன்றாகவே சுவாசிப்போம்...

நான்.....

தாய் வீடு செல்லும்

உங்கள் மனைவி!!

விரைவில் உங்கள் இல்லம் கண்டு

உயிர் பிழைப்பேன்!!

அது வரை

உறுதிக் கயிற்றால் உங்கள்

உடலைக்காப்பேன்...

நீங்கள் என் உயிரைக் காருங்கள்!

நாற்றங்காலின் முழுச்சம்மதம்

கிடைத்தாலும் அல்லவெனினும்

இந்தப் பயிர் உங்கள்

வயலுக்கே சொந்தம்''

இப்படிக்கூறி

இதயத்தை இறுக்கிகொண்டு

அவள் விடை பெற்றாள்....

ஆழ்மனக்காதலின் முழுவீச்சையும் ஆற்றாமையோடு புலப்படுத்தும் வரிகள். இதைவிடவும் வேறெப்படி ஒரு பெண் தன் நிலையை அறுதியிட்டுரைக்க இயலும்?

மனம் தொட்ட வரிகள். பாராட்டுகள்.

கலைவேந்தன்
29-07-2012, 04:00 AM
ஆம் கீதம். அந்த வரிகள் வார்த்தை பிறழாமல் அவளுடையவை தான். அதனால் தான் தனது நிலையை இத்தனை அறுதியிட்டு உறுதியாக அவளால் சொல்ல முடிந்தது. காலம் ஊழ் வேறு நினைத்தது என்பது வேறுகதை. ஆயினும் மன உறுதி பிறழாமல் இறுதி வரை இருக்கத்தான் அவளும் முனைந்தாள்.. ஆனால்..?

உங்களின் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி கீதம்.