PDA

View Full Version : கலைவேந்தனின் காதல் கதை பகுதி - பத்து



கலைவேந்தன்
26-07-2012, 03:55 PM
பகுதி_பத்து



இன்னுமொரு ஐந்து நாடள்

இடியாய் வந்தது...

அவளின் குடும்பம் சுற்றுலா போனது...

பெங்களூர் நகரம் இவளது வரவால்

மேலும் குளிர்ந்தது...

பிருந்தாவனத்தில் காதல் கனவுகளுடன்

காதலன் நினைவுகளுடன்

உலா வந்தது அந்த

திருவாரூர்த் தேர்!

மைசூர் அரண்மனையில்

மகாராஜாவாய் அவனையும்

மகாராணியாய்த் தன்னையும்

பதவிப் பிரமாணம் செய்வித்து மகிழ்ந்தாள்...

அவளது மகிழ்ச்சியில்

இவன் மனம் நெகிழ்ந்தது...



அன்றொருநாள்-----

கல்லூரிப் பழமரம் தேடி

களிப்புடன் வந்த பறவைகள்

தங்கள் கூட்டுக்குப் பறக்குமுன்

பிரிவு உபசாரவிழா நடத்தியது...



இந்த காதல் பறவைகள்

சுமக்கவியலாத சோகத்தையும்

விளக்க இயலாத விசாரத்தையும்

ஒருங்கே சந்தித்தன...

ஒரு வகுப்புப் பறவைகள் அனைத்தும்

உள்ளம் திறந்து கூவின!

வகுப்புச் சட்டசபையில்

காதல் பிரேரணையை

வாழ்க்கை உறுப்பினர் அரங்கேற்றினர்..

மற்றக் குயில்களும் இவர்களுக்கு

வாழ்த்துப்பா இசைத்தனர்...

புகைப்படம் எடுக்கும்போதும்

உள்ளங்களைப் போலவே

ஒன்றி நின்றனர்....

அந்தக் கவிஞனின் மறக்கவியலா

மனக்காட்சிகளில்

இதுவும் ஒன்று!!

சுகந்தப்ரீதன்
10-08-2012, 06:19 AM
கல்லூரியைவிட்டு பிரியும்போது சும்மா திரிஞ்சவங்களுக்கே அம்மாம்வலி வலிக்கும்போது காதலர்களுக்கு எம்மாம்வலி வலிச்சிருக்கும்ன்னு புரியுது..!!

எழுத்தோடையில் மடைதிறந்த வெள்ளமாய் பாய்கிறது உங்கள் மனக்காட்சிகள்...!!:icon_b: