PDA

View Full Version : திருடன் திருடன் திருடன்....ரங்கராஜன்
25-07-2012, 07:57 PM
திருடன் திருடன் திருடன்....


செவிப்பறை கிழியும் சத்தத்தில் ஒரு பாட்டு கேட்டது...

“சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம்....
நாங்க கூவத்துல குளிச்சோம் அட அடையாறு துணி துவச்சோம்..
பங்கிங்ஹாம்முல படகு வுட்டோம் அது ஒரு காலம்...
டேய்ய்ய்ய்ய்ய்ய
பங்கிங்ஹாம்முல படகு வுட்டோம் அது ஒரு காலம்...
இப்போ அத்தனையும் நாறிப் போச்சி இது ஒரு காலம்....
இது நம் காலம்....
சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம்....”

வணக்கம் உறவுகளே.....

நான் எத்தனையோ முறை நம் மன்றத்தில் கதைகள், சிறுகதைகள், உண்மை சம்பவங்கள், மனதை பாதித்த சம்பவங்கள் என்று நிறைய பதித்து இருக்கிறேன். ஆனால் தற்போது நான் பதிக்க போகும் சம்பவம் உண்மையில் எந்த விதமான எடிட்டிங் ஒர்க்கும் இல்லாமல், சுவாரஸ்யங்களை கூட்டாமல் அப்படியே சொல்லப்போகிறேன். ஏன்னென்றால் என்னை பாதி்த்த டிசைன்களிலே, தற்போது நான் விவரிக்கப்போகும் டிசைன் மிகவும் ஆச்சர்யமிக்க டிசைன். டிசைன் என்று நான் கூற வருவது நடைபெற்ற அந்த சம்பவங்களின் கோர்வையை.... உண்மையில் எனக்கு நடைபெற்றதிலே நான் பிரமித்த சம்பவம் இது.... இது நடைபெற்றது நேற்று இரவு..... நேற்றே பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். மூளை ஒத்துழைத்த அளவு உடம்பு ஒத்துழைக்க வில்லை. உடற்சோர்வு அதற்கு மேல் பசி.... அதனால் பதிக்கவில்லை...... ஆனால் இப்போது பதிக்க போகிறேன்.

அதற்கு முன்பு,.... நான் தரும் மூன்று பாட்டுகளை நீங்கள் கேட்டே ஆகவேண்டும்......எல்லாம் இரண்டு நிமிட பாடல் தான்.... அதை கேட்காமல் இந்த கட்டுரையை படித்தால் வேஸ்ட், காரணம் இந்த கட்டுரையின் நாடியே இந்த பாடல்கள் தான்....எரிச்சலாக இருந்தாலும் தயவு செய்து எனக்காக கேட்கவும் எல்லாம் 2 நிமிட பாடல் தான்.....

நேற்று நான் இரண்டாவது ஷிப்டு அதாவது மதியம் இரண்டு மணி டூ இரவு பத்து மணி ஷிப்டு. பத்து மணிக்கு முன்னாடி கிளம்பவே கூடாது..அதுதான் அலுவலக விதி.. நானோ அலுவலக விதிகளை மிதிப்பவன்..... சாரி மதிப்பவன்.... சரியாக 9.30 க்கு ஆபீஸில் இருந்து கிளம்பி விடுவேன். ஆனால் என் வேலை முழுவதும் பதினொறு வரை இருப்பதைப் போல செய்து விட்டு வருவேன். காரணம் அந்த ரயிலை விட்டால், அதன் பின் கடுப்பு, அரை மணி நேரத்திற்கு தான் ரயில் வரும்...... சோ சக ஊழியர்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொண்டு நான் கிளம்பி விடுவேன்..... என் வயிற்று நான் ஏதாவது கொட்ட வேண்டுமே அதனால் தான். அலுவலகம் வழியாக இருக்கும் பிரெட் ஆம்லெட் கடையை தாண்டி, சிக்கன், மீன் கட்லட் போடும் கடையை தாண்டி வந்தால், அத்தோ என்று ஒரு மியான்மர் உணவு கடை ஒன்றுள்ளது அதை அனைத்தையும் தாண்டி வருவதற்குள் என் வயிற்றில் பத்மா சுப்பிரமணியத்தின் பரதநாட்டியம் அரங்கேற ஆரம்பித்து, டாடி மம்மி வீட்டில் இல்லை பாட்டாக மாறி, அட்ற அட்ற நாக்கு முக்க நாக்கு முக்க பாடல் ஓலிக்க ஆரம்பித்து விடும்.

அதுவும் இந்த மியான்மர் உணவின் செய்முறை இருக்கிறதே..... அடேங்கப்பா அதை பார்த்தால் ஆம்பளையாக இருந்தாலும் மசக்கை வாந்தி கண்டிப்பாக எடுத்தே ஆகவேண்டும். அதில் சேர்க்கப்படும் பொருட்கள்...... கோஸ், முட்டை, நூடுல்ஸ், காய்கறிகள், மசாலா ஐடங்கள் இவை சைடு பொருட்கள் இதனால் நமக்கு எந்த பாதிப்பும் வராது..... இதற்கு பின் தான் பிரதான பொருட்கள் இருக்கிறது. இவை அனைத்தையும் வேக வைத்து விட்டு வருத்து, அதை கையை விட்டு பிசைவான் அந்த சமையல் மாஸ்டர், அப்போ மாஸ்டரின் வியர்வை, கையில் இருக்கும் அழுக்கு, வாயில் இருக்கும் பீடி துண்டின் சாம்பல், சாலையில் இருக்கும் தூசு, தேவைப்பட்டால் ஈசல் பூச்சி, அல்லது கருவண்டு அல்லது கொசு, மூட்டை பூச்சு......... சீசனுக்கு தகுந்தார் போல் பூச்சிகள் அந்த உணவில் கலக்கப்படும்..... உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேள், பூரான், தவக்களை, பாம்பு உள்ளிட்டவைகளும் அதில் கலக்க வாய்ப்பு உண்டு....... ஆனால் அப்படி கிடைக்க உங்கள் ராசியில் புதன் எட்டாம் இடத்தில் இருக்க வேண்டும்.......... எனக்கு ஏற்பட்ட பசி அந்த அத்தோ கடையை தாண்டும் போது நின்று விடும். வீட்டிற்கு போய் நல்ல உணவு சாப்பிட்டு விடலாம் என்ற முடிவு நான் வந்து விடுவேன். அப்போது என் வயிற்றில் வாசிக்கப்படும் இசை,

மானசசஞ்சரரே........பிரம்மனி மாாாாானசசஞ்சரேரேரேரேரேரேர..... என்ற அமைதியான கர்நாடக சங்கீதம் தான்.

ஓடி போய் ரயிலைப் பிடித்தேன். ஓடியதில் மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்தது. சே எதாவது ஓட்டலில் தினமும் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த அத்தோ சமைக்கும் நலபாக சமையல் காரனின் அபிநயங்கள் ஞாபகத்திற்கு வந்தது. இவன் வெளியில் இருந்து சமைப்பதால் அபிநயங்கள் தெரிகிறது..... ஸ்டார் ஓட்டலில் உள்ளே இருந்து செய்வதால் அபிநயங்கள் தெரிவதில்லை..... சோ சொந்த சமையலே பெஸ்ட்...... அதுவும் சமைக்க தெரிந்தவனுக்கு மற்றவர்களின் சமையலில் கண்டிப்பாக எதாவது குறை கண்டுபிடித்தே ஆக வேண்டிய கட்டாயமும் இருப்பதால் சொந்த சமையலையே நான் பெரிதும் விரும்புவேன்........ கல்யாணத்திற்கு பின்னர் எப்படியோ தெரியவில்லை...... வியர்வையுடன், அசதியுடன், மகிழ்ச்சியுடன்...... ஏன் மகிழ்ச்சி ஓரம் ஜன்னல் சீட்டு கிடைத்தது. அதுவும் ரயில் போகும் திசையில் ஜன்னல் சீட்டு கிடைப்பதற்கு குரு சுக்கர மேட்டில் இருந்து ஹாயாக சூப் சாப்பிட வேண்டும்...... என் ராசிக்கு குரு சூப் சாப்பிட்டார் போலும்,..... நான் சாப்பிடவில்லை இருந்தாலும் அவர் சாப்பிட்டார்......பரவாயில்லை.............. ஐஸ் குச்சியை சாப்பிட்டு முடித்தவுடன் கண் இமையில் வைத்தால், லேசாக ஒரு ஜில்னஸ் இருக்குமே அதைவிட குறைவான ஜில்னஸுடன் காற்று வீச ஆரம்பித்தது....... சென்னை இல்லையா........ அதன் திமிரை வேறு எப்படி தான் காட்டுவது.... வெட்பத்தையும், பற்றாக்குறையையும் தவிர.....

என்னைப் போல பசி மயக்கத்தில் இருந்தவர்கள், காக்கா கொத்தும் அளவிற்கு கழுத்து வரை சாப்பிட்டு நைட்டு ஷி்ப்டுக்கு போகிறவர்கள் என்று பாகு பாடு இல்லாமல் அனைவருக்கும் அந்த சில் காற்றால் கண்களை வருடியது. சில நொடிகள் நானும் உறங்கிப் போனேன் அப்போது தான்

செவிப்பறை கிழியும் சத்தத்தில் ஒரு பாட்டு கேட்டது...

“சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம்....
நாங்க கூவத்துல குளிச்சோம் அட அடையாறு துணி துவச்சோம்..
பங்கிங்ஹாம்முல படகு வுட்டோம் அது ஒரு காலம்...
டேய்ய்ய்ய்ய்ய்ய
பங்கிங்ஹாம்முல படகு வுட்டோம் அது ஒரு காலம்...
இப்போ அத்தனையும் நாறிப் போச்சி இது ஒரு காலம்....
இது நம் காலம்....
சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம்....” என்ற கானா பாட்டு....

திரியின் ஆரம்பத்தில் பதித்த அந்த பாடலை கேட்கவும்.....

http://s02.download.tamilwire.com/songs/__A_E_By_Movies/E/Chennai_Managaram.mp3

அலறி அடித்துக் கொண்டு என்னைப் போல இளைஞர்கள் சிலர் எழுந்தனர்....... சிலர் பதட்டப்படாமல் எழுந்தனர் அவர்கள் அனைவரும் புதிதாக கல்யாணம் ஆகியவர்களாக இருக்கும் போல.... சிலர் லேசாக கண்களை மட்டும் திறந்து பார்த்தனர்.... 10 வருடங்களுக்கு மேல் கல்யாணம் ஆனவர்கள் அவர்கள்.... சிலர் விழித்துக் கொண்டார்கள் ஆனால் கண்களை திறக்க வில்லை....... 30 வருடம் இருக்கும் போல..கல்யாணமாகி.... சிலர் தூக்கத்தில் இருந்து விழிக்கவே இல்லை அவர்கள் அனைவரும் சதாபிஷேகம் கொண்டாடியவர்கள்........

எனக்கு தூங்கும் போது எழுப்பினாலே பிடிக்காது. அதுவும் இப்படி அலறியபடி எழுப்பினால் பிடிக்கவே பிடிக்காது. அப்படி எழுப்பினால் நான் ஒரு தீவிரவாதி...... (மதிக்கு தெரியும்னு நினைக்கிறேன்)... துள்ளி குதித்து எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன்......... சென்னைக்கு பிறந்த ஒரு பையன், செம்பட்டை முடி, துணிகள் கொஞ்சம் சுத்தம், உடலிலோ சென்னையின் மொத்த அசுத்தம்.... வாயில் மாவோவோ, பான்பராக்கோ..... வயது 15 இருக்கும்,....கையில் கொரியன் மொபைல் செட்டு....... இந்த செட்டின் அருமை, அதனைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும்........ இப்போதெல்லாம் கிராமத்தில் பொண்ணு வயசுக்கு வந்தாலும், கல்யாணம், காதுகுத்து, கழுத்துல குத்து, வாயில குத்து உள்ளிட்ட எல்லா விஷேசங்களுக்கும் பழைய கோன் ஸ்ப்பீக்கருக்கு பதிலா இதை தான் உபயோகப்படுத்துகிறார்கள்..... அந்தளவு சவூண்டு பிச்சிக்கும்....இந்த கொரியன் மொபைலை ரயில் ஹாரனாக செட் செய்வதற்கு கொரியன் கம்பனியுடன் இந்தியன் ரயில்வே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறது...... பேச்சுவார்த்தை சுமூகமானால், டிராக்கில் அடிப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை பூஜியமாகும்.......ஆனால் டிராக் ஓரத்தில் வீடு இருப்பவர்கள் எல்லாரும் செவுடாகி போவார்கள்.........

என்னை பார்த்து அந்த பையன்....... என்ன என்பதைப் போல கேட்டான்...

சவுண்ட் கொற டா என்றேன்.

முடியாது..... என்ன பண்ணுவ.... என்றான்.

பொறம்போக்கு வந்தா அவ்வளவு தான்....... என்றேன்.

வா..... என்பதைப் போல தெனாவட்டாக தலையாட்டினான்.

எல்லாரும் தூங்கறாங்கல்ல.... சவுண்ட கொற டா $^$$%%#%...

இதென்னா ஊ ஊடா, மூடினு தூங்குடா $^$$%%#%...

இதை நான் எதிர்பார்க்கவில்லை........ முல்லை முல்லால் தான் எடுக்க வேண்டும்...சரிதான் ஆனால் அதே உவமையை காலில் சாணியை மிதித்தப்பின் சொல்ல முடியாது....சாணியை சாணியால் தான் எடுக்கவேண்டும் என்று....

சோ அமைதியானேன்.... ஓடிக்கொண்டு இருக்கும் ரயிலில் கதவு பக்கம் போய் நின்றேன்....... ஜில் காத்து அருமையாக இருந்தது.......டென்ஷன் போனது..... இந்த மாதிரி நான் ரயிலில் குளிர் காத்தை எப்போது கடைசியாக அனுபவித்தேன் என்று நினைத்தேன்...... காலெஜ் படிக்கும் போது, மதியம் இரண்டு மணி இருக்கும் செங்கல்பட்டை நோக்கி போய்க் கொண்டு இருக்கும் ரயிலில், நான் என் காதலியுடன் ரயிலில் சென்றுக் கொண்டு இருக்கிறேன்.... கன மழை பெய்வதற்கு சில நிமிடங்கள் முன்னால் அது........... காற்று ரயிலையே தூக்கி போட்டு விடும் போல இருந்தது. அவள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.... அவள் பக்கத்தில் நான் அவள் மீது பட்ட ஜில் காற்று என் மீது பட்டது.... அதில் அவள் வாசம் மற்றும் மூச்சுக் காற்று கலந்திருந்ததால் என் உடல் கொடைக்கானல் மலை உச்சியில் மிதப்பதைப் போல ஒரு உணர்ந்தேன்....என் மூக்கில் அந்த சுகமான வாசனை என் மூளையின் துணையுடன் இப்போது மீண்டும் கிடைத்தது....... சே மறுபடியும் வருமா அந்த காலம்.......... வேகமாக ஜில் காற்றில் எனக்கே தெரியாமல் என் கண்ணீர் கரைந்து போனது........ ச்சே இப்போ நாம் என்னடா வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டு இருக்கோம்........ பேசாமல் ஓடும் ரயிலில் இருந்து குதித்து விடலாமா என்று நினைக்கும் போது...........

அந்த சென்னையின் $^$$%%#% ஒரு கானா பாட்டை போட்டான்.

முத்தின மூச்சிக்கு எதுக்கு எம்மா காதலும்.... எதுக்கு காதலு...
அதனால தானே நமக்குள் நண்பா மோதலு.... நமக்குள் மோதலு..
நீயும் நானும் வாழ்ந்த கத பெருசு,... அந்த ஜோதி பொண்ணு காதல் ரொம்ப சிறுசு....
நீயும் நானும் வாழ்ந்த கத பெருசு,... அந்த ஜோதி பொண்ணு காதல் ரொம்ப சிறுசு....
மச்சான் பொண்ணுக்காக நண்பனை வெறுத்து கொள்ளாதே..... மச்சான் பொண்ணுக்காக நண்பனை வெறுத்து கொள்ளாதே.....
அவ ஆட்டி விட்ட பொம்மைப் போல ஆடாதே......மச்சான் ஆடாதே....
முத்தின மூச்சிக்கு எதுக்கு எம்மா காதலும்.... எதுக்கு காதலு...
அதனால தானே நமக்குள் நண்பா மோதலு.... நமக்குள் மோதலு.....

http://s02.download.tamilwire.com/songs/__A_E_By_Movies/E/Muthuna_Moonjikku.mp3

எனக்கு செம கடுப்பாகி போனது........ அதற்குள் நான் இறங்கும் இடம் வந்தது.... ரயிலில் இருந்து இறங்கி விட்டேன்....ரயில் கிளம்பும் வரை காத்திருந்து விட்டு... ரயில் கிளம்பும் போது அவனை கூப்பிட்டு போடா.........பொட்ட $^$$%%#%...என்றேன்.... ரயில் நகர்ந்தது....

அப்பாடி அவனை திட்டி விட்டோம்....... மனம் நிம்மதி அடைந்தது....... சில நொடிகளிலே அந்த நிம்மதி பறிபோனது........

காரணம் அந்த பையன் ஓடும் ரயிலில் இருந்து காற்றில் பறவையின் இறகு பறந்து வருவதைப் போல லாவகமாக கீழே இறங்கி விட்டான்....

எனக்கு வியர்த்து விட்டது..... ச்சே இதை நாம எதிர்பார்க்கவே இல்லையே....... இறங்கிய வேகத்தில் என்னை நோக்கி ஓடி வந்தான்..... எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...

அழைப்பு வராத செல்லை எடுத்து, காதில் வைத்தபடி......

எஸ் சார், எஸ் சார், டுமாரோ ஐ வில் மேக் இட் சார், ஷுவர் சார், யா யா (அவன் அருகில் வந்து விட்டான்.......) யா யாயாயாயயா சார், கண்டிப்பா ஐ வில் டூ அந்த காரியம் சார்........(பதற்றத்தில் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் பேசினேன்...)

அவன் என்னையே முறைத்தபடி நின்றுக் கொண்டிருந்தான்....... நான் அவனை பார்க்கவில்லை....... பேசியபடியே.... வேகமாக நடந்தேன்.

என்னை விட வேகமாக நடந்து அவன் என் முன்னாடி வந்து நின்றான்.....

செல்லை வைடா..... என்றான்.

அவனை முறைத்தேன்....

என் செல்லை பிடிங்கி ஆஃப் செய்ய முயன்றான்.

ஏய் என்னடா திமிறா........... என்றேன்.

ஆமா திமிறு தான்..........எதுக்கு டா என்ன கெட்ட வார்த்தையில திட்டன......

நீ கூட தான் என்னை திட்டன....... என்றேன்....

நானா டா திட்ன..... நீ திட்ன அதுக்கு நான் பதில்லா நானும் திட்னே.....

நீ பாட்டு சத்தமா போட்டு கேட்ட அதனால நான் திட்ன.....

நீ தூங்கினியே நான் திட்னன்னா........ அதே மாதிரி தான் இதுவும்......

எனக்கு கோபம் தலைக்கேறியது.........பயம் விலகியது.....

டேய் த்தா, நான் யார் தெரியுமா.......மீடியா நனைச்சா........த்தா உன்ன உள்ள தூக்கி வச்சுடுவேன்............

அவன் அமைதியானான்....... எதுவும் பேசவில்லை........ ஒழுங்கா வீடு போய் சேரு..... உன் வயசுல இதெல்லாம் நான் எவ்வளவோ பார்த்துட்டேன்.....போடா ஒரு போன் செஞ்சா போலீஸ் இங்க வந்துடுவாங்க.......சின்ன வயசுலே செயிலுக்கு போய் செத்துற போற...... $^$$%%#%....... போடா... போ....

சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் இருட்டு டிராக் வழியா நடக்க தொடங்கினேன்..... திரும்பி பார்க்கவில்லை......... இருபது அடி நடந்திருப்பேன்......... தூரத்தில் ஒரு கானா பாட்டு கேட்டது......

“வா வா சென்டரலு செயிலையும் கண்டேன்.......
வா வா சென்டரலு செயிலையும் கண்டேன்.......
ஆளுகாட்டி நண்பன் ஒருவனாலே டேய்.....
ஆளுகாட்டி நண்பன் ஒருவனாலே டேய்.....
நான் செயிலையும் கண்டேன், பல வருத்தமும் பட்டேன்
செயிலையும் கண்டேன், பல வருத்தமும் பட்டேன்....
வா வா சென்டரலு செயிலையும் கண்டேன்.......”

http://s02.download.tamilwire.com/songs/__A_E_By_Movies/E/Vaa_Vaa_Centralu.mp3

கொஞ்சம் கொஞ்சமாக அந்த பாட்டு சத்தம் என் அருகே வருவதைப் போல தோன்றியது...... அதற்குள் நான் டிராக்கை தாண்டி வெளிச்சம் உள்ள சாலைக்கு வந்து விட்டேன்...... பாட்டு சத்தமும் வெளிச்சத்திற்கு வந்தது..... அதே சென்னையின் மகன் தான்............

டேய் நில்லுடா என்றான்..... திரும்பினேன்.

த்தா..... நீ போலீஸ் கிட்ட போகாம ஓய மாட்ட இருடா, என்று செல்போனை எடுத்தேன்...... அவன் அதை பிடுங்க வந்தான்...... இருவருக்குள்ளே போராட்டம்.........

திடீரென ஒரு பெண் அலறும் குரல் தூரத்தில் கேட்டது.... இருவரும் அமைதியானோம்.... சுற்றும் முற்றும் பார்த்தோம்...... யாரும் காணவில்லை..... மணி பத்தே முக்கால்.....ரயில் கடந்து போன சத்தத்தில் மறுபடியும் அந்த பெண் குரல் கேட்கவில்லை...... சிறிது நேரத்தில் அருகே இருக்கும் சப்வே வழியாக ஏறி ஒருத்தன் வேகமாக ஓடினான்....ரயிலை பிடிக்க ஓடினான்.

நான் மறுபடியும் திநகர் போலீஸ் நம்பருக்கு போன் செய்தேன்.....உடனே அந்த சென்னை மகன், மறுபடியும் என் போனை பிடுங்க முயன்றான். உடனே சப்வேயில் இருந்து ஒரு இளைஞன்

ச்சோர் ச்சோர் ச்சோர் என்று கத்திக் கொண்டே முன்னாடி சென்ற இளைஞனை நோக்கி ஓடினான்....

நாங்கள் இருவரும் எங்கள் சண்டையை மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தோம்....

அதைப் பார்த்தும் கேட்டும் சுதாரித்துக் கொண்ட நான், திருடன் திருடன் என்று கத்த ஆரம்பித்தேன். உடனே இந்த சென்னை மகன் என் கையை உதறி விட்டு ரயில் நிலையம் நோக்கி ஓட ஆரம்பித்தான். அவன் மூங்கில் கொம்பைப் போல மெலிசாக இருந்ததால், காற்றின் மேல் சவாரி செய்த படி வில்லில் இருந்து ஏவப்படும் அம்பைப் போல லாவகமாக காற்றை கிழித்துக் கொண்டு ஓடினான். நான் பீமன் மற்றும் அனுமார் கையில் இருக்கும்......( அந்த ஆயுதம் பேர் தெரியவி்ல்லை)...... அதனைப் பல இருந்ததால் கொஞசம் பொறுமையாக தான் ஓடவேண்டியது இருந்தது.

ஆனால் என் குரல் ஏழு ஊருக்கு கேட்கும்...... அதனால் திருடன் திருடன் திருடன் என்று கத்திக் கொண்டே ஓடினேன்.......வழியில் வந்தவர்கள் அனைவரும் கூட்டமாக ஓடத் தொடங்கினார்கள்.... கடைசியாக ஓடி வந்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும்

என்ன ஆச்சு என்ன ஆச்சு.... என்று விசாரித்தார்கள்....

பொண்ணுகிட்ட சங்கிலியை அறுத்துட்டு ஓடுறான்.... என்றேன்....மூச்சு வாங்க பேசமுடியாமல்.....

அவர்கள் என்னை விட வேகமாக ஓடினார்கள்....

என் பின்னாடி வந்தவர்கள்..... என்ன சார் உங்க செயினையா அறுத்துட்டான் என்றார்கள்..... ஓடிக்கொண்டே....

இல்ல சார், அந்த பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துட்டு, செயின், செல்போன் எல்லாத்தையும் தூக்கிட்டு போயிட்டான் சார்.....

அவர்களும் என்னை முந்திக் கொண்டு ஓடினார்கள்.... என்னால் அதற்கு மேல் ஓட முடியவில்லை.... என் நுரையீரல் குதிக்காலுக்கும், மூளைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தது.... தூரத்தில் திருடன் மாட்டிக் கொண்டதற்கான அறிகுறி தெரிந்தது..... அடிக்கிற சத்தம் கேட்டது....... அப்பாடி மாட்டினான் டா....... என்னை திட்ன இல்ல........இரு மவனே வரேன்........ என்று ஓட ஆரம்பித்தேன்...... பின்னாடி ஒரு வண்டி வரும் சத்தம் கேட்டது......

அண்ணே ணே ணே ணே இருனே நானும் வரேன்....... என்றேன்...... வண்டி நிறுத்தப்பட்டது....

அதில் தோற்றிக் கொண்டேன்...... சிறுத்தைப் போல சீறிப் பாய்ந்து என்னை நோக்கி வந்த வண்டி, என் எடை தாங்காமல் டயோரியா வந்த ஆமையைப் போல முக்கிக் கொண்டே நகர்ந்தது.

திருடன் மாட்டிய இடத்தை அடைந்தோம்........ திருடன் தலயாளி வீட்டில் நுழைந்ததைப் போல....... ரயில்வே போலீஸின் மே ஐ ஹெல்ப் யூ கவுன்டர் கிட்ட ஓடியதால் திருடன் பிடிப்பட்டு விட்டான். திருடன் முகத்தைப் பார்த்தேன்........ என்னிடம் வம்பு வளர்த்த சென்னையின் மகன் அல்ல அவன்.........

பெண்ணின் கத்தும் குரல் கேட்டவுடன், ஒருத்தன் ரயிலைப் பிடிப்பது போல ஓடினானே அவன் தான் திருடன்....

ஓடி வந்த களைப்பில் மூச்சு வாங்கி்க் கொண்டிருந்தான். அவனைப் பின்னாடியே துரத்திக் கொண்டு போன அந்த சோர் சோர் இந்திக்காரன் பளார் பளார் என்று கன்னத்திலும் வாயிலும் அடித்துக் கொண்டிருந்தான்......... ரயில்வே போலீஸ் அதை பார்த்துக் கொண்டிருந்தது........

நான் மூச்சு வாங்க....

சார் சார் நான் ப்ரஸ்ஸு, என்ன சார் ஆச்சு...... என்றேன்.....

என்னுடன் ஓடி வந்தவர்களும், எனக்கு முன்னும், பின்னும் ஓடிவந்தவர்களும்..... என்னை ஒரு மாதிரியாக பார்த்தனர்..... காரணம் நான் தான் திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு வந்தேன்...... செயின், செல்போன் உள்ளிட்ட உபகதைகள் அனைத்தும் என்னுடைய தே........சோ அனைவரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்........

அந்த பிடிப்பட்ட திருடன்............மூச்சு வாங்க சார் சத்தியமா நான் ரயிலுக்கு தான் ஓடிவந்தேன்..... நான் திருடன் இல்லை என்றான்........

உடனே அந்த இந்திக்காரன் அவன் வாய் மீதே இரண்டு குத்துவிட்டான். அதற்கு மேல் பிடிப்பட்டவனால் பேச முடியவில்லை........எனக்கு மிகவும் பாவமாகிப் போனது........ என்னிடம் வம்பு வளர்த்த அந்த சென்னையின் மகனை தேடினேன்....... கூட்டத்தில் காணவில்லை.........

அந்த இந்திக்காரன் மீண்டும் அந்த பிடிப்பட்ட பையனை அடித்தான்....... மனது பாரமாகிப் போனது..... அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன்...... வீட்டை நோக்கி அந்த நேர் தெருவில் நடக்க தொடங்கினேன்.......பலர் கூட்டத்தை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள்..... வருகிறவர்களிடம் எல்லாம்..........

திருடன் மாட்டிக்கிட்டான், அப்பாடி அவனை பிடிக்கிறதுக்குள்ள உயிரே போயிடுச்சு போங்க போங்க..... அங்க தான் இருக்கான் என்று வழி அனுப்பி வைத்தேன்........ அனைவரும் திருடனை பார்க்கும் ஆவலில் அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள்....

அப்போது ஒரு அப்பாவும் பொண்ணும் மட்டும் வந்து என்னிடம் நான் கேட்காமலே

தம்பி திருடன் மாட்டிக்கிட்டானா.......என்று பதற்றத்துடன் கேட்டார்.

ஆமா சார், அவனை நான்.......என்று சொல்லி முடிப்பதற்குள். அந்த திசையை நோக்கி அந்த பெரியவர் ஓட ஆரம்பித்தார்.

அந்த பெண் அப்பா அப்பா என்று கத்திக் கொண்டு பின்னாடியே ஓட ஆரம்பித்தாள்...........சிறிய பெண், வயது 16 தான் இருக்கும்........

என்னம்மா ஆச்சு என்றேன் அதை தடுத்து நிறுத்தி,

இல்ல சார், அந்த சப்வே வழியா வந்திட்டு இருந்தேன்னா, அவன் வந்து என்கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்தான் சார், அப்புறம் என் செயினை அறுத்துட்டு போயிட்டான் சார்.........என்றாள்.......

எனக்கு எங்கிருந்து வேகம் வந்தது என்று தெரியவில்லை......அனைவருக்கும் முன்னாலும்.... வேகமாக ஓடி கூட்டத்தை கலைத்து..........

தூ....... $^$$%%#% நீ அடிவாங்கறதையா நான் பார்க்காமயா போனேன்....

என்று எகிறிக் கொண்டு அவனை அடிக்க பாய்ந்தேன்.... ரயில்வே போலீஸ் என் சட்டையை பிடித்து......... என்னை பதிலுக்கு ரயில்வே போலீஸ் அடிக்க பாய்ந்தார்...அவர் கையை தடுத்து....

சார் யார் தெரியுமா பிரஸ்ஸு, என்னமோ அடிக்க வரீங்க......

பிரஸ்ஸுன்னா யாரை வேணும்னாலும் அடிப்பீங்களா.....

சரி அதவுடு, அக்யூஸ்ட் மாட்னால்ல, நடுரோட்டல அரை மணி நேரமா என்ன கிழிச்சிட்டு இருங்கீங்க.......அதுக்கு பதில சொல்லு.........

யோவ் உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைய்யா.....

அதே போல நீயும் என்னை கேட்க முடியாது........ போய் சிவில் போலீஸ வரசொல்லு..... நான் இங்கையே அக்கியூஸ்ட்டோட நிக்கிறேன்..... போ போய் போலீஸ கூப்பிடு.......

நீ அடங்க மாட்ட இரு போலீஸ கூப்பிடுறேன்....

அவனுக்கும் நான் அடங்கமாட்டேன் போய் கூப்பிடு......போ...

கோபம் கொந்தளிக்க அந்த திருடனை பார்த்தேன்......... அவன் வாயில் ரத்தம் ஒழுக... அழுதுக் கொண்டிருந்தான்.......... அவனை பார்த்தால் எனக்கு பாவமாகவே இல்லை அந்த ஒழுகும் ரத்தத்திற்கு காரணமாக நான் ஒரு குத்து கூட குத்தவில்லையே...... என்று வருத்தமாக இருந்தது.

யோவ் போலீஸ் இப்ப வந்துடுவாங்க..... நீ பேசாம இரு.......வந்தவுடன் உன்னை வச்சிக்குறேன்.... பிரஸ்னு நீ சீனா போடுற......

இப்போது ரயில்வே போலீஸின் கோபம் முழுவதும் திருடன் மீது இல்லை என் மீது தான் இருந்தது....... கூட்டம் பொறுமையாக அமைதியாக கலைந்து போனது......... இப்போது அங்கு நான், திருடன், இரண்டு ரயில்வே போலீஸார், இந்திக்காரன், இரண்டு ரயில் பயணிகள்... மட்டும் தான்

அதற்குள் அந்த அப்பாவும், பொண்ணும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தார்கள்...

நான் உடனே ரயில் போலீஸ் வாங்க வாங்க......, இவங்க கிட்ட தான் இந்த திருட்டு நாய் தப்பா நடந்துக்கிட்டு, செயினை அறுத்து இருக்கான்..... என்றேன்..... மேலும் அந்த பொண்ணை நோக்கி போம்மா போய் சொல்லு......என்றேன்......

அந்த பெண் திருடனின் கிட்ட போயிட்டு, திருடனின் முகம் பார்த்து, சார் இவர் இல்லை சார்........ என்று திரும்புவதற்குள்........ அந்த இந்திக்காரன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.......


உடனே அந்த பொண்ணும் அப்பாவும் ............சார் அவன் தான் அவன் தான் திருடன் என்றார்கள்........... போலீஸால் ஓட முடியவில்லை என்னால் சுத்தமாக நடக்க கூட முடியவில்லை....... அப்போது எங்களை தள்ளிக் கொண்டு அந்த இந்திக்காரனை நோக்கி ஒரு பையன் ஓடினான்...........அது வேறு யாருமில்லை நம்ம சென்னையின் மகன் தான்......... அவன் அந்த இந்திக்காரனை பிடித்த அழகு இருக்கே...... இதுவரை எந்த சினிமாவிலும் ஹீரோவின் அறிமுக காட்சியிலும் இந்த சீன் வைக்கப்படவில்லை.......... ரயில்வே படிக்கட்டில் வேகமாக ஏறிக் கொண்டிருந்த இந்திக்காரனை, அந்த சென்னைப் பையன் அவனை விட வேகமாக ஐந்து படிக்கட்டுகள் முந்தி, அவன் முன்னாடி போய் நின்று முகத்தில் ஒரு குத்து விட்டு, லைட்டாக இந்திக்காரனின் காலை இடறி விட்டான், 5 நொடிக்குள் அந்த இந்திக்காரன், இருபது படிகளில் இருந்து முதல் படிக்கு வந்தான்......... எழுந்து ஓட முயன்றவனை ஓடிச் சென்று முதல் அடி நான் தான் அடித்தேன், அதுவும் காதுக்கும், கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் (வர்மக்கலை புத்தகத்தில் படித்தது)..... நிலைக்குலைந்து போனான்.........

அவன் சட்டையை பிடித்தேன். நான் இழுத்த இழுப்பிற்கு சக்கரத்தில் க்ரீஸ் தடவிய கை வண்டியைப் போல....... நான் செல்லும் பாதையை நோக்கி மயக்கத்துடன் வந்தான். பொண்ணின் அப்பாவும், ரயில்வே போலீஸும் அவன் பாக்கெட்டை தேடினார்கள், போலீஸ் துழாவிய பாக்கெட்டில் செயின் மாட்டியது........ பெண்ணின் அப்பா, இந்திக்காரன் முகத்தில் காரி துப்பினார்......... வேறு என்ன செய்ய முடியும் வயதானவர்....., ரயில்வே போலீஸ் பூட்ஸால் இந்திக்காரன் முகத்தில் உதைத்தார்...........ரத்தம் கொட்டியது......... அதைப் பார்த்தவுடன், திருடன் என்று தர்ம அடி வாங்கி அந்த அப்பாவி இளைஞனின் நியாபகம் வந்தது, அவனை அழைத்து வந்து இந்திக்காரனை அடிக்க வைக்க வேண்டும் என்று அந்த இளைஞனை தேடினேன்...... அவனை காணவில்லை.......அதற்குள் போலீஸ் வந்து, இந்திக்காரனை பிடித்துக் கொண்டு சென்றது. அந்த சென்னைப் பையனை தேடினேன் அவனும் காணவில்லை....அந்த அப்பாவும் பொண்ணும் போலீஸுடன் சென்று விட்டதால், அந்த இடத்தில் வழக்கம் போல அனாதையாக நான்.. மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்..... வீட்டை நோக்கி நடந்தேன்........

என் வீட்டின் கேட்டிற்கு அருகே சென்ற போது அங்கு கூட்டமாக இருந்தது...... ஓடிச் சென்று பார்த்தேன், ஒரு பொண்ணு பிளாட்டின் கேட்டில் மோதியபடி முகத்தில் ரத்தத்துடன் கிடந்தாள். அவளை சுற்றியும் என் பிளாட் குடித்தினகாரர்கள்...... அவளை தூக்கலாம் என்று பக்கத்தில் போனேன், அவள் அருகே வாந்தி, பிராந்தி வாசனை...... தூர வந்து விட்டேன், முகத்தை பார்த்தேன், எனக்கு தெரிந்த சீ பிளாட்டில் உள்ளவர்களின் காலேஜ் படிக்கும் பொண்ணு அது........அவளை தூக்க மனம் வரவில்லை...... வீட்டை நோக்கி நடந்தேன்......... தகவலறிந்த அவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்து.....தலையில் அடித்துக் கொண்டு தெலுங்கில் அந்த பெண்ணை திட்டிக் கொண்டே ஆக்ரோஷமாக ஓடி வந்துக் கொண்டிருந்தனர்.....

வீட்டிற்கு வந்தேன், சாப்பிடவில்லை, பசிக்கவுமி்ல்லை.......இரவு 12 மணி ஆகிவிட்டது, அப்படியே படுத்து விட்டேன், தூங்கிக் கொண்டிருந்த என்னுடைய மூளையின் ஓரத்தில் அந்த பாடல் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.........

“சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம்....
நாங்க கூவத்துல குளிச்சோம் அட அடையாறு துணி துவச்சோம்..
பங்கிங்ஹாம்முல படகு வுட்டோம் அது ஒரு காலம்...
டேய்ய்ய்ய்ய்ய்ய
பங்கிங்ஹாம்முல படகு வுட்டோம் அது ஒரு காலம்...
இப்போ அத்தனையும் நாறிப் போச்சி இது ஒரு காலம்....
இது நம் காலம்....
சென்னை மாநகரம் ஒரு நாள் சிறப்பான நகரம்....”

http://s02.download.tamilwire.com/songs/__A_E_By_Movies/E/Chennai_Managaram.mp3

நன்றி....

மதி
25-07-2012, 08:29 PM
டேய்.. என்ன சொல்றதுன்னே.. தெரியல....

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி படம் பாத்துட்டு வண்டிய தனியா ஓட்டிட்டு வரும் போது சென்னையின் ராத்திரி வாழ்க்கை எப்படிபட்டதுனு யோசிச்சுக்கிட்டே வந்தேன்.. இந்த அளவுக்கு இல்லேன்னாலும் ஏதோ நான் பார்த்த சில விஷயங்கள எழுதலாமான்னு தோணுச்சு.. அப்புறம் எழுதணுமான்னு தோணுச்சு..

வந்து பாத்தா.. சென்னை மாநகரம் சிறப்பான நகரம்...னு இருக்கு... என்னத்த சொல்ல....

வழக்கம் போல சம்பவத்தைவிட உன் திரைக்கதை அட்டகாசம்.. சொல்லிய விதத்தை சொல்றேன்.. மவனே.. உனக்கென்ன மதியம் ஷிப்டு..

இவ்ளோ பெரிசா எழுதி படிக்கற ஆர்வத்தை தூண்டிட்டு.. காலையில எந்திரிச்சு... ஆபிஸுக்கு ஓடணும்.. :(

அப்புறம் உன்னை தூக்கத்தில் எழுப்பின விஷயத்தை யார்க்கிட்டேயும் சொல்லமாட்டேன்....:icon_b:

கீதம்
25-07-2012, 11:55 PM
அதிர்ச்சியில் உறைந்திருக்கிறேன். பிறகு கருத்திடுவேன்.

கீதம்
26-07-2012, 05:55 AM
மனிதர்களையும் செயல்களையும் அறிமுகப்படுத்தி, வாசிப்பவரையே எடைபோடச் சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் உன் பாங்கு சிறுகதைகளில் மட்டுமல்ல, அனுபவப்பதிவுகளிலும் அழகாய் வெளிப்படுகிறது. பாராட்டுகள் தக்ஸ்.

கொரியன் மொபைலின் பெருமையாகட்டும், பரதமாய் அரங்கேறி, குத்தாட்டமாய் மாறும் பசியின் கொடுமையாகட்டும், முள்ளை முள்ளால் எடுக்கும் யுக்தியில் முரண்படுவதாகட்டும்… எல்லாவற்றிலும் உன் எழுத்தின் ஆளுமை ரசிக்கத்தக்கதாய் உள்ளது. இப்படி zigzag ஆக கதை சொல்லும் நேர்த்தியை மிகவும் ரசிக்கிறேன்.

குச்சி ஐஸைத் தின்றுவிட்டு அதன் குச்சியை இமையில் வைத்துப் பார்ப்பதுபோல் ஒரு உவமை குறிப்பிட்டிருந்தாய், இதுவரை அப்படிச் செய்ததில்லை என்றாலும் அதன் சில்லிப்பை சிலாகிக்கையிலேயே அந்த உணர்வு பிடிபட்டுவிடுகிறது.

போலிகளைக் கண்டு ஏமாறிவிடக்கூடாது என்பதில் நமக்கெல்லாம் மிகுந்த எச்சரிக்கை. அந்த அதீத எச்சரிக்கை உணர்வால்தானோ என்னவோ போலி எது அசல் எது என்பதைக் கண்டுபிடிப்பதில் தடுமாறிவிடுகிறோம். அசலை அடித்துத் துவைக்கும் போலிக்கு ஆதரவாளராகவும் போய்விடுகிறோம்.

இதைப் போன்ற ரயில் பயணம் ஒன்றில் நிற்கவும் இயலாத சூழலில் இறைவனிடம் கையேந்தச் சொல்லி (http://www.tamilmantram.com/vb/showthread.php/19981-இறைவனிடம்-கை-ஏந்துங்கள்?highlight=)ஆசுவாசப்படுத்தியது அன்று ஒரு பாட்டு. இன்று மூர்க்கத்தையும் கழிவிரக்கத்தையும் தூண்டியிருக்கிறது ஒரு பாட்டு. பாடல்கள் பலவிதம். படிப்பினைகளும் பலவிதம்.

ஜானகி
26-07-2012, 06:06 AM
அது என்ன... உனக்கு மாத்திரம் இந்த மாதிரி ஏதாவது சம்பவம் நடக்கிறது...? நவகிரகங்கள் எல்லாம் ஒரே மேட்டில் இருக்கிறதோ...? ஒவ்வொரு சம்பவமும் உன் நல்ல உள்ளத்தைப் படம் பிடுத்துக் காட்டுகிறது...வாழ்த்துக்கள் !

Mano.G.
27-07-2012, 12:58 AM
நீ ஒரு திரைக்கதை ஆசிரியனாக உறுவாகி வருகிறய், அதில் எள்லவும் சந்தேகமில்லை,
முன்பு கதைகளை மட்டுமே சொல்லிவந்த நீ
இப்போழுது இசையையும் இடத்திர்கேற்ப கொடுத்து
அசத்திவிட்டாய். நீ மேலும் வளர எனது ஆசிகள்

jayanth
27-07-2012, 03:32 AM
இதைப் படித்துவிட்டு எப்படி பின்னூடம் இடுவது என்று தெரியவில்லை... இருந்தாலும்..
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

கலைவேந்தன்
27-07-2012, 03:22 PM
என்னை அயரவைக்கும் படைப்புகள் என்பது வெகு சிலவே. அவற்றில் இதுவும் ஒன்று. இது என்னைப்பொறுத்தவரையிலும் மிகப்பெரிய பாராட்டு.. வேறென்ன சொல்ல..?

ரங்கராஜன்
29-07-2012, 08:46 AM
வணக்கம் உறவுகளே.....

என்னுடைய பழைய திரி எலி சனியன் திரி பதித்த சில நாட்களிலே இந்த திரியை நான் பதித்தேன்...... அதற்கு காரணம அந்த எலி செத்தவுடனே ஒரு நான்கு நாட்களுக்குள் நடைபெற்ற சம்பவம் என்பதால் அல்ல...... எலி சனியன் என்ற திரியை நான் நீண்ட நாளைக்கு பின்னர் பதித்தவுடன், அதற்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டும் மட்டும் தான்........... ஒருவேளை எலி சனியன் திரியை பதித்த பின்னர் எனக்கு பின்னூட்டம் கிடைக்காலம் இருந்திருந்தால்..... இந்த திருடன் திருடன் திரி கிடைத்திருக்காது...... பின்னூட்டம் என்பது புகழ்ச்சிக்கான டானிக் அல்ல, அது ஒரு அங்கீகாரம், இது எனக்கு நான் எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் புரியவில்லை....... ஆனால் இப்போதும் நான் அதை எதிர்ப்பார்ப்பது கிடையாது....... அப்புறம் ஏன் முன் கிடைத்த பின்னூட்டத்தினால் தான் அடுத்த திரியான திருடன் திருடன் என்ற திரியை எழுதினேன் என்று சொன்னாய்......என்று நீங்கள் கேட்கலாம்........சரி உங்களுக்கு புரிய வைக்கிறேன்....... என்னுடைய ஆரம்ப கால திரிகளில் இருந்து இப்போது வரை, நான் எழுதிய எந்த கருமாந்திரத்திலும் என் உறவுகளின் பின்னூட்டம் இருக்கும்......... நான் எழுதிய அந்த கருமாந்திரத்தில் இருந்து இந்த அளவு என்னை செதுக்கியதும் அவர்களின் பின்னூட்டம் தான்....... அதனால் தான் அவர்கள் கொடுக்கும் ஊக்கம் எனக்கு எந்தளவு தெம்பு தருகிறது என்றால், ஜானகி அம்மா அடிக்கடி கேட்கும் கேள்வியும் இதுதான்,....... டேய் மகனே உனக்கு மட்டும் எப்படிடா இந்தமாதிரியெல்லாம் நடக்குது........ நான் முன்னே குறிப்பிட்டிருந்த தெம்பு என்பது, என் உலகத்தை நான் கவனிக்க வேண்டும்......... நாம் எல்லாரும் நம்மை சுற்றி இருக்கிற உலகத்தை கவனிக்க வேண்டும்,..... அதற்காக நான் எல்லாரையும் வாட்ச்மேன் உத்தியோகம் பார்க்க சொல்லவில்லை......... இந்த திருடன் திருடன் கதையை படித்திருப்பீர்கள்..... நான் எதற்கு என் உண்மை சம்பவத்தில் நிகழ்ந்த அனைத்து கதாபாத்திரங்களையும் கூறுகிறேன் என்றால், அதில் எதோ ஒரு கதாபாத்திரம் நாமும் இருப்போம் என்பதை சுட்டிக்காட்டதான்.

என் உறவுகள் தரும் தெம்புக்கும், பின்னூட்டங்களுக்கும் நான் செய்யும் கைமாறு தான் உலகத்தை கவனிப்பது..... ஜானகி அம்மா கேட்ட கேள்விக்கான பதில் இதோ....... எனக்கு மட்டும் இல்லைம்மா, உலகத்தில் எல்லா உயிரினங்களுக்கும் ஓவ்வொரு நொடியும் எதாவது ஒன்று நடந்தே தீரும்...... அதை நாம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது.........

இந்த திரியை வாசித்து பின்னூட்டமிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, காரணம் நீங்கள் தான் என் அடுத்த படைப்பிற்கு பூஜை போட்டவர்கள்..... பின்னூட்டங்களை எதிர்ப்பார்கக்வில்லை என்று நான் கூறினாலும்,.......ஊந்து சக்தி பின்னூட்டங்கள் தானே.......எனக்கென்றில்லை அனைத்து கிரியேட்டர்களுக்கும்..........மேலும் படித்து விட்டு நேரமின்மையால் பின்னூட்டமிடாமல் போன அனைவருக்கும் என் நன்றிகள் உறவுகளே..........விரைவில் சம்பவங்கள் கிடைத்தால் விரைவில் சந்திக்கிறேன்..

முதல் முறையாக கலைவேந்தன் ஐயா அவர்கள் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகிறார்...... வணக்கமும் நன்றியும் ஐயா உங்களுக்கும்.... உங்களுக்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் என்று நினைக்காதீர்கள்....... காரணம் மற்றவர்கள் எல்லாரும் எனக்கு உறவுகள்.... தற்போது நீங்களுமும் தான்.....

நன்றி வணக்கம்....

சிவா.ஜி
29-07-2012, 06:20 PM
சூப்பர்....படிக்க படிக்க...அப்படியே கையைப் பிடிச்சு வலிச்சுக்குனே போற மாதிரி ஒரு எழுத்து. உனக்கே உரிய நக்கல், நையாண்டி....அசத்தலான உவமானம்...பின்னிட்ட தக்ஸ். பாவம் அந்த அடிவாங்கின ஆள். கடைசியில உன்கிட்ட சண்டை போட்ட பையனை ஹீரோவாக்கி...நீ ஹீரோவாயிட்ட. உண்மை மட்டுமே இருக்கிற இந்தப் பதிவு ரொம்ப அழகு.

சென்னையின் இரவுகள்ல...இப்படியும் சில ஈஸ்மென்கலர் இரவுகள். அதை அனுபச்சி...எழுதி...எங்களையும் அனுபவிக்க வெச்சுட்ட. உன்னோட இந்த அசத்தலான எழுத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் எழுது.....ரொம்ப நல்லாருக்கு.

தாமரை
30-07-2012, 01:48 PM
தற்போது நான் பதிக்க போகும் சம்பவம் உண்மையில் எந்த விதமான எடிட்டிங் ஒர்க்கும் இல்லாமல், சுவாரஸ்யங்களை கூட்டாமல் அப்படியே சொல்லப்போகிறேன். ஏன்னென்றால் என்னை பாதி்த்த டிசைன்களிலே, தற்போது நான் விவரிக்கப்போகும் டிசைன் மிகவும் ஆச்சர்யமிக்க டிசைன். டிசைன் என்று நான் கூற வருவது நடைபெற்ற அந்த சம்பவங்களின் கோர்வையை....

இந்த வரிகளில் தேங்கி இருக்கும் உண்மையை இந்தப் பின்னூட்டத்தின் பின்னால் மிக நுணுக்கமாக உணரலாம்.

இந்தச் சம்பவத்தில் மொத்தமா நாலுகேரக்டர்கள்..

ஒண்ணு தக்ஸ்..
ஒண்ணு சென்னை மகன்
ஒண்ணு அவசரமா ரயில் பிடிக்கும் அப்பாவி
ஒண்ணு வடவிந்திய வாலிபன்.


இதைப் படித்தவுடன் தக்ஸைக் கேட்டேன்..

என்னடா யார் மாட்னாலும் அடிக்கிறீங்களே யோசிக்கவே மாட்டீங்களா?

தக்ஸ் யோசிச்சான். ஒவ்வொரு கேரக்டர்லயும் தன்னை நிறுத்திப் பார்க்க ஆரம்பிச்சான்.

முதல் விசயம் பாட்டினால் உண்டான எரிச்சல்.

சென்னை மகனுக்கு நாம் மற்றவர்களை எரிச்சலூட்டுகிறோம் என்ற எண்ணமே இல்லை.

நாம் ஏன் எரிந்து விழுகிறோம் என்கிற காரணத்தை தக்ஸ் அழகா ஆழமா இண்ட்ரடக்*ஷன்ல சொல்லிட்டார். மன அழுத்தம்.. நேரம் மற்றும் தேவைகளுக்கு எதிராக நடக்கும் போட்டி.

பசித்தால் கோபம் கோபமா வரும் எனக்கு. எத்தனையோ அழுத்தங்களில் வாழ்பவர்களுக்கு உண்டாகும் எரிச்சல்.

சென்னை மகன் கவலை இல்லாத இந்தத் தலைமுறை இளைஞன்.

பொறுப்புகளைச் சுமந்துள்ளோர்க்கும், பொறுப்புகளை அறியாதோருக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியை அழகாகக் காட்டுவது இது.

ஒரு குறிப்பிட்ட சம்பவம் இருவருக்கும் பகை வளர்க்கிறது. இன்னொரு குறிப்பிட்ட சம்பவம். இருவரும் ஒரே மாதிரி செயல்படுகிறார்கள்.

எது தப்பு என்பதில் தெளிவாகும் இருக்கும்பொழுது இருவரும் ஏறத்தாழ ஒரே மாதிரி செயல்படுகிறார்கள். சென்னை மகனும் இப்படி வேலைக்கு ஓடி அலுத்து களைத்து பசித்த வரும்பொழுது இப்படித்தான் செயலபடுவார். தக்ஸ் ஜாலியாக இருக்கும் பொழுது அப்படித்தான் செயல்படுவார் என்பதை எதிர்பார்க்கலாம்.

ஆரம்ப டிசைனில் காட்டப்பட்டு இருக்கும் இருவரும் ஏறத்தாழ இரு காலகட்டங்களில் இருக்கும் ஒருவரே...

சரி இனி மெயின் பிச்சருக்கு வருவோம்.

ச்சோர் ... ச்சோர் என்ற சத்தம் யாரோ ஓடறாங்க யாரோ துரத்தறாங்க..

உடனே பிடிச்சி அடி என்பதில் சற்றே மன வருத்தம்தான்.

பாவம் அந்த அப்பாவி..

அப்பாவி பேரில் என்ன தப்பு?

அப்பாவி ஒரு சராசரி இந்தியக் குடிமகன்.

தன்னுடைய அவசரம் அவனுக்கு. அவனுக்குப் பின்னால் திருடன் திருடன் என்ற சத்தம் கேட்குது.. இருந்தும் தன் காரியமே கண்ணாக இரயில் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை தக்ஸ் மாதிரியோ அல்லது சென்னை மகன் மாதிரியோ அவரும் திரும்பி திருடனைப் பிடிக்கணும் என்று பார்த்திருந்தால் ஒரு வேளை அடிபட்டிருக்க மாட்டார்.

நம்மெதிரே ஒரு திருட்டு நடப்பது தெரியும்பொழுது நாம் கண்டுக்காம இருந்தா நாளைக்கு நமக்கும் இப்படி எங்கயாவது தர்ம அடி கிடைக்கும் என்பதைக் காட்டும் கேரக்டர்.

அதைவிடுங்க. ஒரு திருடன் மாட்டினான் அப்படின்னு கேட்டாவே மனசு கொதிச்சி கை அடிக்க ஓங்கிடுது. அதிலும் நடந்த சம்பவம் மனசை ரொம்பவுமே பாதிக்கிற விஷயம். அப்படீங்கும்போது நமக்கு வரும் கோபம் மிக அதிகமாகவே இருக்கும்.

இதற்குக் காரணம் அந்தச் சம்பவம் மாத்திரமே இல்லை என்ற கருத்து எனக்குத் தோன்றுகிறது.

தினம் தினம் பல சம்பவங்களைப் பார்த்து, கேட்டு, படித்து மன அளவில் நாம் அழுத்தத்தில் இருக்கிறோம். அவையும் சேர்ந்துதான் நம்மை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்துவிடுகின்றன.

இதைப் படித்தவுடனே தக்ஸிற்குப் ஃபோன் செய்து கேட்ட கேள்வி இதுதான்.. ஏண்டா இப்படி எதுக்கெடுத்தாலும் அடிச்சிருவீங்களான்னு கேட்டேன்.

அதன் பின்னால தான் தக்ஸிற்கு அந்த அப்பாவி இளைஞனின் இடத்தில் தான் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசிக்கத் தோன்றி இருக்கிறது. கூடவே இந்திக்காரனை அடித்த அடி அவன் திரும்பும் போது தொண்டையில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றும் யோசிக்க வைத்திருக்கிறது.

பிடித்தது சரி. அடித்தது சரியா?

இந்தக் கேள்வி நல்லவங்க மனசில் எழும். கண்டிப்பாக எழாம இருக்காது. ஆனால் நிறைய யோசிக்க வேண்டியது இருக்கு.

கெட்டதைப் பார்த்துக் கொதிக்கறவங்களை நாம என்னிக்குமே சந்தேகப்படுவது இல்லை. அதை மிகச் சரியா நாடிபிடிச்சி ஆக்டிங் கொடுத்த இந்திக்காரர்..

அதை நான் ஏற்கனவே அனுபவப்பட்டாச்சு.. இன்னும் சில பேரும் அனுபவப்பட்டிருக்கலாம். அனுபவ்ம் மனிதனை மாற்றிக் கொண்டே இருக்கிறது.

அதுசரி.. இந்தக் கேள்விக்கு பதில். அடிக்கலாமா கூடாதா?

அடிக்கக் கூடாது என்றும் சொல்லுது அடிக்கணும் என்றும் சொல்லுது இந்தச் சம்பவம்.

யோசித்துப் பார்த்தால் தப்பு செய்யாதவங்க சில வகைப்படுவாங்க

1. நேரம் கிடைக்காதவங்க
2. பயப்படறவங்க
3. இழப்பால் மனசு உண்மையாக பாதிக்கப்பட்டவங்க
4. நல்லவங்களா இருக்கணும்னு நினைக்கறவங்க.

இங்க நடைபெற்ற தவறைப் பாருங்க. பண்பாட்டை மதிக்கும் யாருக்கும் அடக்க முடியாத கோபம் வரும். கூடவே அந்த தவறைச் செஞ்சிட்டு தெனாவெட்டா இன்னொருத்தரை மாட்டி விட்டு அவரையும் பேச விடாம அடிச்சி ஒரு மிகப் பெரிய நாடகத்தையே நடத்திய கர்வம்..

அடிக்காம எவனையோ திருடன் என்று பிடிச்சவுடன் அவன் நழுவி இருக்கலாம். ஆனாலும் கர்வம்.. எதனால் கர்வம்.. ஒரு பெண்ணை மானபங்கப் படுத்தினால் அவள் தேடி வரமாட்டாள் என்ற கர்வம்.

கூடவே யாரும் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.. போலீஸ் வந்ததும் கூட்டத்துடன் கலந்து நழுவி விடலாம் என்ற நம்பிக்கை. இத்தனையையும் தூளாக்கியது ஒரு செய்தியாளரின் உண்மை உணர்வு.

செய்தியாலனின் கடமை அதுதான். ஒரு கட்டத்தோடு சரி போதும் என விலகாமல் ஒரு முடிவைக் கண்ட பின் நகருவது மிக முக்கியம்.

சரி கேள்வி அடிக்கறது சரியா? தப்பா?

கண்ணை மூடிகிட்டு உடனே அடியில் இறங்குவது தப்புதான்.

அந்த முதல் ஐந்து நிமிசம் நாம் நம்மோட கட்டுப்பாட்டில் இருக்கவே மாட்டோம். அப்போது உண்டான கோபம் மட்டுமல்ல. இதுக்கு முன் நமக்குள் அழுந்திக் கிடக்கும் அத்தனைக் கோபமும் வெளிவரும் நேரம் அதுதான். அது பீறிட்டு வெளிப்படும் பொழுது நம்மால் எதையும் யோசிக்க முடியாது,

ஆனால் எந்த வித தண்டனையும் இல்லாமல் பிடிச்சு போலீஸ் கையில் கொடுத்து விட்டுப் போகலாம் என்றால்..

ஒரே மாதத்தில் அதே ஆள் இன்னொருவரிடம் தன் கைவரிசையைக் காட்டுவதை இன்னொரு இடத்தில் காண்கிறோம். பயம் விட்டுப் போகிறது.

பொதுமக்கள் மத்தியில் குற்றச் செயலை ஒருவன் தைரியமாகச் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் இரண்டு. ஒன்று தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை. மாட்டினாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம். சமாளிக்க முடியாமல் மாட்டிக் கொண்டாலும் நீதி விசாரணை முறையில் சாட்சிகள் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை.. அப்படியே வந்தாலும் சின்ன திருட்டுக்குத் தண்டனை மிதமானது என்ற தைரியம். போலீஸே இதனால்தான் பலமுறை மாட்டும் திருடர்களை அடித்துவிட்டுத்தான் விசாரிக்கவே ஆரம்பிக்கிறார்கள்.

எனவே பலர் எதிரில் தப்பைச் செய்ய தைரியம் கொடுத்தது இந்த நடைமுறை (நடக்காத முறையை ஏன் நடைமுறைன்னு சொல்றோம்னு யோசிக்கணும்)

இங்கே பார்த்தால் மனசு அமைதிப்பட நாலு சாத்து சாத்தினா என்ன என்றே தோணுது. அந்தப் பெண்ணாக அவளின் உறவினனாக எந்த இடத்திலும் நம்மால் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாது, ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை செய்ததைக் கவனிக்கவும்.

"பெண்ணின் அப்பா, இந்திக்காரன் முகத்தில் காரி துப்பினார்......... வேறு என்ன செய்ய முடியும் வயதானவர்....., "

அறுவெறுப்பு - இயலாமை இவற்றின் வெளிப்பாடு.. ஆமாம் எல்லோராலும் இயலாதுதான். என்னால் கூட இயலாதுதான். அதுதானே இவர்களின் வலிமை.

"100 குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நம் சட்டத்தின் அடிப்படை"

ஆனால் உண்மையில் யோசித்தால்..

10 அப்பாவிகள் தண்டிக்கப்பட்ட பின்னரே ஒரு குற்றவாளி தண்டிக்கப்படுகிறான் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

இப்போ குடுக்காமல் போனால் அடுத்த முறை அதே குற்றத்தை அதே ஆள் செய்வதைப் பார்த்தால் நாமே மிகப் பெரிய தவறைக் கூடச் செய்யக் கூடும்.

உணர்ச்சி வசப்பட்டு தவறும் செய்யக் கூடாது. அதே சமயம் நமது மனமும் அழுத்தத்திற்கு ஆளாகக் கூடாது.

இதை பேலன்ஸ் செய்யறது கஷ்டம்தான்.

பாருங்களேன். ஒரு திருட்டு நடந்ததது. ஒரு அலறல். ஒருத்தன் ஒடுறான். பின்னாலே திருடன் திருடன் என்று சொல்லிகிட்டு ஒருத்தன். ஒரு பொறுப்பில்லா பையன் ஓடுகிறான். பின்னால் தக்ஸ் திருடன் திருடன் எனக் கத்துறார்.

தக்ஸ் எதிர்பார்த்தது சென்னை மகன் பிடிபட்டு அடிவாங்குவான் என. வடநாட்டுக்காரர் அப்பாவியை அடிச்சார். சென்னை மகன் அப்ப நழுவினான். காரணம் தக்ஸ் அங்க எதிரி.

ஜஸ்ட் சீன் மாறுது வடநாட்டுக்காரன் ஓடுகிறான். அதே சென்னை மகனும் தக்ஸூம் சேர்ந்து பிடிக்கிறாங்க. எதிரிகள் நண்பர்களானது ஏன்? எப்படி? அடிப்படை அந்த நேரத்தில் அந்தப் பெண் இருவருக்கும் சகோதரியாக இருந்திருக்கிறாள். அதான்.

இவங்களை நம்பித்தாம்பா நாங்க தைரியமா குடும்பத்தோட வெளிய போறோம்னு நான் சொல்லுவேன்.

அதனால் தண்டனை கொடுப்பது தப்பில்லைன்னு தோணுது. ஆனால் சற்று நிதானம் வேணும்.

கடைசியில் இன்னொரு பொண்ணு. முகம் சுழிக்க வைத்த பொண்ணு.

ஆக இது மிகப் பெரிய அனுபவம்தான். நல்ல கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க வைப்பதுதான்

சுகந்தப்ரீதன்
30-07-2012, 02:02 PM
ஒரு மனிதனின் மனம் நாடும் உலகிற்க்கும் யதார்த்தத்தில் அவன் எதிர்கொள்ள நேரும் உலகிற்க்கும் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டி…விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவற்றை எல்லாம் கடந்துதான் இங்கே வாழவேண்டியிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி செல்லும் பதிவிது..!!

நல்லதொரு அனுபவ பகிர்வுக்கு நன்றி தக்ஸ்..!! அடுத்த அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உங்களுடன் நாங்களும்..!!:)

Mano.G.
31-07-2012, 12:42 PM
தாமரை தம்பி போல இந்த பதிவை இப்படி பிரிச்சி
ஆரய்ந்து விமர்சனம் பண்ண தாமரை தான் வரவேண்டும் வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
31-07-2012, 02:22 PM
தாமரையின் அலசலை பலமுறை வாசித்தேன். அசத்தல். எப்படி இப்படி எல்லாம்னு கேட்கத்தோணுது. பார்க்கப்போனால் எமக்குள்ளும் இத்தனை அலசல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுக்கு சொல்வடிவம் தருவது தான் சிறந்த கலை. அந்த கலையம்சம் தாமரையிடம் உள்ளது.

தக்ஸ் என்கிற ரங்கராஜனுக்கும் தாமரைக்கும் மீண்டும் பாராட்டுகள்..!!

kulakkottan
02-08-2012, 03:26 PM
நடந்த சம்பவம் என்றாலும் கற்பனை கொண்டு சென்ற விதம் சலிப்பின்றி நீண்ட பதிவை வாசிக்க கூடியதாய் உள்ளது !பாடல்கள் இன்னும் பிரமாதம்!

அனுராகவன்
04-08-2012, 10:47 PM
கதை கதைக்க சிறப்பான கானம்..சென்னையில் இப்படி காலையில் செல்லும் போது...அப்பப்பா..முடியாது..
நல்ல கற்பனை நண்பா...

வெற்றி
06-08-2012, 01:13 PM
இலக்கியம் .

த.ஜார்ஜ்
09-08-2012, 04:43 PM
சில நாட்களுக்கு முன் இந்த பதிவை படித்துவிட்டு, என்ன சொல்வதென்று தெரியாத வெற்று மனதோடு கடந்து விட்டேன்.அன்றிரவு குப்புற படுத்து உறக்கம் வராமல் புரண்டு, பின் வந்த அரைகுறையான உறக்கத்தில் கனவாக அதுவே ஆக்கிரமித்ததும் எதேச்சையானதா.. என்று தெரியவில்லை.
ஹாஸ்யத்துக்காக எழுதப்பட்ட சில வரிகளை நீக்கிவிட்டால் இது ஒரு அழுத்தமான பதிவு.
முறையாக பயன்படுத்தத் தெரியாதவர்கள் கையில் தொழில் நுட்பம் சிக்கினால்.. மற்றவர்கள் நிம்மதியிழந்து போக நேரிடும் என்பதற்கு ஒரு சின்ன அடையாளம்தான் அந்த செல்போன் பாட்டு விவகாரம்.
பொது நன்மைக்காக குரல் கொடுப்போரை நசுக்கும் வன்முறை கலாச்சாரத்தின் ஒரு துளியை இந்த நிகழ்விலும் காண முடிந்தது.
கெட்டவர்கள் நல்லவர்கள் போல் நடிக்கும் நடிப்பில் கிறங்கி, உண்மை உணரும் முனைப்பில்லாமல் நாம்தான் தீர்ப்பிட்டு விடுகிறோம் போலிருக்கிறது.
அனுபவங்களே நல்ல பாடங்கள். நிறைய படியுங்கள். எங்களோடும் பகிருங்கள்.
[அடிக்கடி இப்படி ஓடும் வாய்ப்பு கிடைக்கட்டும். உடம்பு இளைக்குமாம்ல.. :)]

Ravee
10-08-2012, 05:36 AM
அருமை தகஸ் .... என் பேருந்து பயணங்கள் என்ற தலைப்பில் இன்னும் என் டைரியில் குறித்து வைக்கப்பட்ட ( தூங்கிக்கொண்டு இருக்கும் சம்பவங்களின்) கோர்வைகளை இங்கே உன் அருமையான நடையில் ரசித்தேன் .... :icon_b:

அமரன்
11-08-2012, 08:38 PM
வாசிக்கும் ஒவ்வொருவரையும் பட்டறிய வைக்கும் பதிவு..

வழக்கம் போல தாமரை அண்ணாவும் சம்பவ இடத்தில் நட்மாடி இருக்கார்.

arun
17-10-2012, 03:09 PM
ஒரு திரில்லர் படம் போல காட்சிகளை அடுத்தடுத்து கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் ! படிக்கும்போது எனது முகத்திலும் பல முக பாவனைகள் ! மனிதர்களுக்குள்ளும் இதே பாவனைகள் தானே ஒளிந்து கிடக்கிறது ?

பாராட்டுக்கள் தக்ஸ்