PDA

View Full Version : வேளை நல்ல வேளை



இராஜிசங்கர்
25-07-2012, 10:00 AM
என் கடிகாரத்திற்குத் தான் உன் மீது
எத்தனை காதல்! கடைசியாய் உன்னைப்
பார்த்த நிமிடங்களைக் கடந்து
இயங்க மறுக்கிறது..

M.Jagadeesan
25-07-2012, 10:08 AM
என் கடிகாரத்திற்குத் தான் உன் மீது
எத்தனை காதல்! கடைசியாய் உன்னைப்
பார்த்த நிமிடங்களைக் கடந்து
இயங்க மறுக்கிறது..


பேட்டரி தீர்ந்து போனாலும் கடிகாரம் இயங்காது !

இராஜிசங்கர்
25-07-2012, 10:21 AM
பேட்டரி தீர்ந்து போனாலும் கடிகாரம் இயங்காது !

அருமை...அருமை...அழகான உண்மையைக் கண்டுபிடித்துக் கூறிய அய்யா அவர்களுக்கு இந்தக் கோப்பையைப் பரிசளிக்கிறோம்..http://www.desismileys.com/smileys/desismileys_0147.gif


பின் குறிப்பு:
----------------
சும்மா விளையாட்டுக்குத் தான்.. சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம்..

மதி
25-07-2012, 10:24 AM
உறைந்த நிமிடங்களா...?? இல்லை கல்லாய் சமைந்து போனதாலா???

கடைசியாய் உன்னைப் பார்த்த நிமிடங்கள்ன்னா.. கடிகாரம் மட்டுமா உறைந்து போனது..?? தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. விளக்குவீரா???

இராஜிசங்கர்
25-07-2012, 10:42 AM
உறைந்த நிமிடங்களா...?? இல்லை கல்லாய் சமைந்து போனதாலா???

கடைசியாய் உன்னைப் பார்த்த நிமிடங்கள்ன்னா.. கடிகாரம் மட்டுமா உறைந்து போனது..?? தவறாய் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. விளக்குவீரா???

கடைசியாய் அவனைப் பார்த்த நினைவிலேயே அவள் இருக்கிறாள்...எண்ணம் செயல் பேச்சு எல்லாம் அவன் என்றான பின் கடிகாரம் ஓடாமல் நின்றது கூட அவனைப் பார்த்த சந்தோசத்தில் கொஞ்சம்..மீண்டும் என்று பார்க்கப் போகிறோமோ என்ற ஏக்கத்தில் கொஞ்சம் என்று நினைக்கிறாள்..

விளக்கம் திருப்தியளித்த நண்பா?

மதி
25-07-2012, 10:53 AM
எல்லாம் அவனான பின் கடிகாரம் உறைந்தது கூட உறைத்திருக்கக்கூடாதே...? சரியாக உறையவில்லையோ?

அப்புறம் கடிகாரம் ஓடினா தான் மீண்டும் அவனைப்பார்க்க முடியும்னு கடிகாரத்திடம் சொல்லுங்கோ..!!

சும்மா தமாசுக்கு...

இராஜிசங்கர்
25-07-2012, 10:56 AM
எல்லாம் அவனான பின் கடிகாரம் உறைந்தது கூட உறைத்திருக்கக்கூடாதே...? சரியாக உறையவில்லையோ?


சும்மா தமாசுக்கு...

அனுபவமில்லைங்க பிரதர்!! அதனால் இந்தக் கேள்விக்கு இப்போதைக்கு பதில் இல்லை,...

மதி
25-07-2012, 10:57 AM
அடடே...!!! அனுபவம் வாய்க்கட்டும்...!!

இராஜிசங்கர்
25-07-2012, 10:58 AM
அப்புறம் கடிகாரம் ஓடினா தான் மீண்டும் அவனைப்பார்க்க முடியும்னு கடிகாரத்திடம் சொல்லுங்கோ..!!


கடிகாரமே 'ஓடி' விடு..இவர் தொல்லை தாங்க முடியவில்லை...http://www.desismileys.com/smileys/desismileys_0264.gif

இராஜிசங்கர்
25-07-2012, 11:00 AM
அடடே...!!! அனுபவம் வாய்க்கட்டும்...!!

http://www.desismileys.com/smileys/desismileys_0110.gif.....

மதி
25-07-2012, 11:00 AM
கடிகாரமே 'ஓடி' விடு..இவர் தொல்லை தாங்க முடியவில்லை...http://www.desismileys.com/smileys/desismileys_0264.gif

பரவாயில்லை... இனி தொல்லை கொடுக்கல..!

இராஜிசங்கர்
25-07-2012, 11:00 AM
பரவாயில்லை... இனி தொல்லை கொடுக்கல..!

சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன் பாஸ்!!

மதி
25-07-2012, 11:04 AM
விடுங்க மேடம்.. நானும் சீரியஸா தான் சொன்னேன்.!!! யாரும் வந்து என்னடா அரட்டைன்னு அடிக்கறத்துக்குள்ள ஓடிப்போகிறேன் நான்...!

இராஜிசங்கர்
25-07-2012, 11:07 AM
விடுங்க மேடம்.. நானும் சீரியஸா தான் சொன்னேன்.!!! யாரும் வந்து என்னடா அரட்டைன்னு அடிக்கறத்துக்குள்ள ஓடிப்போகிறேன் நான்...!

சரிங்க சார்...நன்றி வணக்கம்