PDA

View Full Version : மின்வெட்டு

இராஜிசங்கர்
25-07-2012, 09:56 AM
காபி, டீ குடிப்பதில்லை - காலையில் பால் வாங்க வரிசையில் நிற்க வேண்டும் என்பதால்
மாத தவணை செலுத்தி பைக் ஒன்று வாங்கினேன் - பேருந்துக்குக் காத்திருக்க வேண்டி இருப்பதால்
இருக்கும் வரை எதற்கும் காத்திருந்ததில்லை
இன்று இறந்த பின் வரிசையில் காத்திருக்கிறேன் என் உடலை எரிப்பதற்காக
காரணம் எட்டு மணி நேர மின்வெட்டு.

மதி
25-07-2012, 10:26 AM
அழகான கவிதை...!

கீதம்
25-07-2012, 10:41 AM
கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் எள்ளல் எல்லாம் கலந்த உணர்வைத் தூண்டும் கவிதை. இதுதான் வாழ்க்கை என்றும் உணர்த்திப்போகிறது.

மற்றெல்லா இடங்களிலும் நின்றபடி காத்திருக்கவேண்டும். இங்கே கிடந்தபடி... :frown:

இராஜிசங்கர்
25-07-2012, 10:43 AM
அழகான கவிதை...!

நன்றி மதி அவர்களே

இராஜிசங்கர்
25-07-2012, 10:44 AM
கொஞ்சம் பரிதாபம், கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் எள்ளல் எல்லாம் கலந்த உணர்வைத் தூண்டும் கவிதை. இதுதான் வாழ்க்கை என்றும் உணர்த்திப்போகிறது.

மற்றெல்லா இடங்களிலும் நின்றபடி காத்திருக்கவேண்டும். இங்கே கிடந்தபடி... :frown:

சரியாச் சொன்னேங்க அக்கா

சுகந்தப்ரீதன்
25-07-2012, 01:40 PM
மின்வெட்டு பிணத்தைக்கூட பேசவைக்கும் போலிருக்கு...

கவிதையில் வெளிபடுத்திய ஆதங்கம் அருமை... ஆனால் அதை உயிருள்ள பொருளில் உருவேற்றி வெளிபடுத்தியிருக்கலாமென்று தோன்றுகிறது..!!

சாகாமல் சன்மார்க்கம் சேர்ந்திருந்தால் மின்வெட்டையும் வென்றிருக்கலாமே..?! காரணம் சாகாதவனே சன்மார்க்கியாம்..!!:)

நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள்..!!:icon_b:

M.Jagadeesan
26-07-2012, 01:20 AM
காபி, டீ குடிப்பதில்லை - காலையில் பால் வாங்க வரிசையில் நிற்க வேண்டும் என்பதால்
மாத தவணை செலுத்தி பைக் ஒன்று வாங்கினேன் - பேருந்துக்குக் காத்திருக்க வேண்டி இருப்பதால்
இருக்கும் வரை எதற்கும் காத்திருந்ததில்லை
இன்று இறந்த பின் வரிசையில் காத்திருக்கிறேன் என் உடலை எரிப்பதற்காக
காரணம் எட்டு மணி நேர மின்வெட்டு.

திருப்பதியில் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்த அனுபவம் இல்லையோ?

வித்தியாசமான சிந்தனைகளால் கவிதை எழுதும் இராஜிசங்கருக்கு வாழ்த்துக்கள்.

jayanth
26-07-2012, 03:10 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifhttp://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifhttp://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif

ராஜா
26-07-2012, 04:17 AM
காத்திராத வாழ்க்கை எவர்க்கும் அமைவதில்லை..

கருவறையில் காத்திருந்தவர்கள்தானே நாமெல்லாம்..?

எனினும்..

வித்தியாசமான கோணத்தில் அங்கதம் காட்டும் கவிதைக்கு ஒரு சபாஷ்..!

:icon_b:

இராஜிசங்கர்
26-07-2012, 04:48 AM
மின்வெட்டு பிணத்தைக்கூட பேசவைக்கும் போலிருக்கு...

கவிதையில் வெளிபடுத்திய ஆதங்கம் அருமை... ஆனால் அதை உயிருள்ள பொருளில் உருவேற்றி வெளிபடுத்தியிருக்கலாமென்று தோன்றுகிறது..!!

சாகாமல் சன்மார்க்கம் சேர்ந்திருந்தால் மின்வெட்டையும் வென்றிருக்கலாமே..?! காரணம் சாகாதவனே சன்மார்க்கியாம்..!!:)

நல்லதொரு கவிதை... வாழ்த்துக்கள்..!!:icon_b:
பின்னூட்டத்திற்குநன்றி சுகந்தப்ரீதன்

இராஜிசங்கர்
26-07-2012, 04:50 AM
திருப்பதியில் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்த அனுபவம் இல்லையோ?

வித்தியாசமான சிந்தனைகளால் கவிதை எழுதும் இராஜிசங்கருக்கு வாழ்த்துக்கள்.

இல்லைங்க ஐயா..திருப்பதிக்கு போனதில்லை..எனக்கு பணக்காரசாமிகள் என்னவோ பிடிப்பதில்லை..

பின்னுட்டத்திற்கு நன்றிங்க ஐயா..

இராஜிசங்கர்
26-07-2012, 04:51 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifhttp://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gifhttp://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif

http://www.desismileys.com/smileys/desismileys_6636.gif,.....

இராஜிசங்கர்
26-07-2012, 04:52 AM
காத்திராத வாழ்க்கை எவர்க்கும் அமைவதில்லை..

கருவறையில் காத்திருந்தவர்கள்தானே நாமெல்லாம்..?

எனினும்..

வித்தியாசமான கோணத்தில் அங்கதம் காட்டும் கவிதைக்கு ஒரு சபாஷ்..!

:icon_b:

நன்றிங்க ராஜா

அமரன்
30-07-2012, 09:37 PM
மின்வெட்டுக்கு ஒரு மின்னல் வெட்டு போட்டிருகிறீர்கள்.

பாராட்டுகள்

இராஜிசங்கர்
31-07-2012, 04:37 AM
மின்வெட்டுக்கு ஒரு மின்னல் வெட்டு போட்டிருகிறீர்கள்.

பாராட்டுகள்

நன்றிங்கஅமரன்...

aasaiajiith
31-07-2012, 05:15 AM
ஒரு குறிப்பிட்ட காரணத்தின் பொருட்டு
இடைக்கால தடை யில் இருந்தேன் பின்னூட்டம் இடுவதில்
இப்போது அத்தடை நீங்கியமையால் இனி
தடையில்லா பின்னூட்டம் தொடரும் ....

குறிப்பாக அந்த பணக்கார கடவுள்கள் குறித்த கருத்து , குருத்து ....

நல்ல வரிகள் !
வாழ்த்துக்கள் !

இராஜிசங்கர்
31-07-2012, 05:18 AM

இடைக்காலத் தடை நீங்கியமைக்கு வாழ்த்துக்கள் அஜித்

ஜான்
01-08-2012, 02:36 AM
எளிய வரிகளில் சற்று கனத்த விஷயம்

நன்று ராஜி சங்கர்

இராஜிசங்கர்
01-08-2012, 04:20 AM
எளிய வரிகளில் சற்று கனத்த விஷயம்

நன்று ராஜி சங்கர்

மிக்க நன்றி ஜான் அவர்களே