PDA

View Full Version : ஓர வஞ்சனை



இராஜிசங்கர்
25-07-2012, 09:53 AM
ஊனமுற்றவர் என்றால் நீ ஓடி வந்து உதவுவாயே
என்னிடம் மட்டும் ஏன் இந்த இறுக்கம்?
உன் விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் நொறுங்கி நிற்பவன் நான் என்பதால்
நானும் ஊனமுற்றவனே ......
உதவு மானே....
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்லி .....

மதி
25-07-2012, 10:47 AM
அது என்ன ஒற்றை சொல்?

இராஜிசங்கர்
25-07-2012, 10:54 AM
அது என்ன ஒற்றை சொல்?

'காதலா' என்ற அழைப்புங்க பாஸ்!!

நீங்கள் நல்ல கேள்வி நாயகன் போல?

மதி
25-07-2012, 10:56 AM
ஓ... சரி சரி..! அப்படியெல்லாமா கூப்பிடுவாங்க??

இராஜிசங்கர்
25-07-2012, 11:02 AM
ஓ... சரி சரி..! அப்படியெல்லாமா கூப்பிடுவாங்க??

கூப்பிட்டுப் போகட்டுமே..பாவம் சின்னஞ்சிறுசுகள்!!

மதி
25-07-2012, 11:03 AM
சின்ன வயசிலேயே காதலா??? கலாச்சாரக்காவலர்கள் கவனிக்க..!

இராஜிசங்கர்
25-07-2012, 11:06 AM
சின்ன வயசிலேயே காதலா??? கலாச்சாரக்காவலர்கள் கவனிக்க..!

http://www.desismileys.com/smileys/desismileys_6590.gif

M.Jagadeesan
25-07-2012, 11:51 AM
ஊனமுற்றவர் என்றால் நீ ஓடி வந்து உதவுவாயே
என்னிடம் மட்டும் ஏன் இந்த இறுக்கம்?
உன் விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் தொலைத்து நிற்பவன் நான் என்பதால்
நானும் ஊனமுற்றவனே ......
உதவு மானே....
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்லி .....

உன்விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் நொறுங்கி நிற்பவன் நான்

என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

இராஜிசங்கர்
25-07-2012, 12:12 PM
உன்விழிகள் இரண்டும் மோதிய விபத்தில்
இதயம் நொறுங்கி நிற்பவன் நான்

என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே!

மாற்றி விட்டேன்..நன்றி ஐயா

கீதம்
26-07-2012, 10:48 AM
அதானே? ஏனிந்த ஓர வஞ்சனை?

ஒற்றைச் சொல்லினும் வஞ்சியவளின் ஓரப்பார்வை ஒன்று போதாதோ? :)

அழகான வரிகளுக்குப் பாராட்டுகள் ராஜி.

இராஜிசங்கர்
26-07-2012, 12:55 PM
அதானே? ஏனிந்த ஓர வஞ்சனை?

ஒற்றைச் சொல்லினும் வஞ்சியவளின் ஓரப்பார்வை ஒன்று போதாதோ? :)

அழகான வரிகளுக்குப் பாராட்டுகள் ராஜி.

நன்றிக்கா

HEMA BALAJI
28-07-2012, 07:17 AM
நல்ல கவிதை.. பாராட்டுகள் ராஜி.

இராஜிசங்கர்
29-07-2012, 11:42 AM
நல்ல கவிதை.. பாராட்டுகள் ராஜி.

நன்றி மச்சி!!

ஷீ-நிசி
29-07-2012, 12:17 PM
உயிர் கரையும் ஒற்றை சொல் சொல்ல வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
29-07-2012, 12:27 PM
ஒரு வார்த்தை கேட்க ஓராயுள் காத்திருக்க அவ்வார்த்தை உன்வாயில் ஊனமுற்றபின் தானா வெளிவரவேண்டும் மானே..? ;)

நல்ல கவிதை ராஜி.

இராஜிசங்கர்
30-07-2012, 04:55 AM
நன்றி ஷீ-நிசி & கலைவேந்தன்

அமரன்
30-07-2012, 06:09 AM
புதிய வடிவக் காதல் கடிதம்..


அவளையும் கொஞ்சம் கவனியுங்கள்..


எங்கேனும் அடிபட்டிருக்கக் கூடும்.

இராஜிசங்கர்
30-07-2012, 06:23 AM
புதிய வடிவக் காதல் கடிதம்..


அவளையும் கொஞ்சம் கவனியுங்கள்..


எங்கேனும் அடிபட்டிருக்கக் கூடும்.


நன்றி அமரன்