PDA

View Full Version : மழை... சில நேரம் மௌனம்... சில நேரம் கூச்சல்...



thamizhkkaadhalan
24-07-2012, 06:46 PM
மழை...

பூமியின் போக்கை எண்ணி,
வானம் வடிக்கும் ஒரு சொட்டுக் கண்ணீர்...

இரவின் கிரணங்களாய் இருந்த முதிர்ந்திட்ட முகில்கள்,
பகலாய்ப் பொழியும் பன்னீர்த் துளிகள்...

ஆவியாய்ப் போன துளிநீரெல்லாம்,
உயிர் கொண்டுவந்த மந்திரத்துளிகள்...

ஈர்ப்புவிசையிருந்தும் இடைவெளிகொண்ட பூமிக்கு,
வானம் கொடுக்கும் ஈரமுத்தங்கள்...

இரக்கமில்லாத மனிதர்களுக்காய்-மரங்கள்,
இறக்கும் முன் சிந்திய இரத்தத் துளிகள்...

என்குல உழவர்கள் மண்ணின் மீதெழுதிய ஆயிரம் மனுக்களுக்கு,
வானம் விடுத்த ஆறுதல் கடிதம்...

கடலின் உப்பை ருசித்துவிட்டு, பின் பூமியின் மீது
கார்முகில் துப்பிய எச்சில் துளிகள்...

வானம் பிரிந்து, காற்றில் தவழ்ந்து,
பூமியைத் தோற்கடிக்கப் புறப்பட்ட அம்புகள்...

கோழை மனிதரெல்லாம், குடைக்குள் போனதனால்,
அகதியாய் வீ்ழ்ந்த அந்தரத் துளிகள்...

எப்படிச் சொல்வது..?

மழை... சில நேரம் கனவு... சில நேரம் கானல்நீர்...

சுகந்தப்ரீதன்
25-07-2012, 03:23 PM
அன்பரே... இந்த கவிதையை நீங்கள் ஏற்கனவே வேறொரு தலைப்பில் மன்றத்தில் பதிந்திக்கிறீர்கள்..!!

சிந்தாத சில துளிகள்... (http://www.tamilmantram.com/vb/showthread.php/29623-சிந்தாத-சில-துளிகள்)

ஒருசில வரிகளில் மட்டும் மாற்றம்..!!

thamizhkkaadhalan
01-08-2012, 01:16 AM
நன்றி சகோ... மறுபதிப்பு செய்யாமல் மறுபடியும் பதிப்பு செய்துவிட்டேன்...
எப்படி நீக்குவதென்று அறிவுருத்துக...

ஜான்
01-08-2012, 02:03 AM
மழை...

ஈர்ப்புவிசையிருந்தும் இடைவெளிகொண்ட பூமிக்கு,
வானம் கொடுக்கும் ஈரமுத்தங்கள்...

வானம் பிரிந்து, காற்றில் தவழ்ந்து,
பூமியைத் தோற்கடிக்கப் புறப்பட்ட அம்புகள்...

கோழை மனிதரெல்லாம், குடைக்குள் போனதனால்,
அகதியாய் வீ்ழ்ந்த அந்தரத் துளிகள்...


...

ரசித்துப் படித்தேன்

அன்புரசிகன்
01-08-2012, 03:04 AM
நன்றி சகோ... மறுபதிப்பு செய்யாமல் மறுபடியும் பதிப்பு செய்துவிட்டேன்...
எப்படி நீக்குவதென்று அறிவுருத்துக...

தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php/12198-தமிழ்-மன்ற-வழிகாட்டி) > உங்கள் பதிவுகள் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269707&postcount=8)

இங்கு காட்டியவாறு உங்கள் பதிவை திருத்தலாம். திரியின் தலைப்பையும் (title) மாற்றலாம்.