PDA

View Full Version : காதல், காதலில்,காதலால் ...



reena
24-07-2012, 09:39 AM
தெருவோரத்து சிறுதூசியாய் சிறிதாக இருந்தவள் நான்
காதலே ! உன் காதலால் - இன்று

சுனாமிக்கே சவால் விடும் பினாமியாய் ....

சிறுபிள்ளையும் கிள்ளிபரித்திடும் சிறுபுல்லாய் இருந்த்தவள் நான்
சாதனையே ! உன் சாதனையால் - இன்று

பெரும் பூகம்பமும் அசைக்க முடியா பூங்கம்பமாய் ...

சொட்டுத்தண்ணீர் சொட்டினாலே சுருண்டு படுக்கும் சீக்காளி நான்
சித்திரமே ! உன் விசித்திரத்தால் - இன்று

தானே புயலையும் கூட தானே பயந்துஒதுங்கசெய்திடும் புயலாய் .........

கீதம்
24-07-2012, 09:47 AM
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்.

இங்கே காதலர் பார்வைபட, மங்கைக்கு கடுகும் மலையாகிறது.

காதல் வீரியத்தைப் பறைசாற்றும் வரிகளுக்குப் பாராட்டுகள் ரீனா.

aasaiajiith
25-07-2012, 04:47 AM
"காதலிலும் போர்களத்திலும் எல்லாம் சாத்தியம் "
எனும் மேல்நாட்டு பொன்மொழிக்கு
வாழும் உதாரணமாய் .....

வாழ்த்துக்கள் .....

சுகந்தப்ரீதன்
25-07-2012, 03:04 PM
எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேங்குற மாதிரி இருக்குதுங்க..?!:lachen001:

காதலின் வன்மையை வம்படியாய் வெளிபடுத்தும் கவிவரிகள்...!! வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!