PDA

View Full Version : இதழ் படிக்க வா!



M.Jagadeesan
23-07-2012, 06:36 AM
இதழ் படிக்க வில்லையா இன்னுயிரே என்றாள்
இதழ் படிக்கக் கண்ணாடி இல்லையே என்றேன்
இதழ் படிக்கக் கண்ணாடித் தேவையே இல்லை
இதழாலே இதழ்படி என்றுரைத்தாள் கள்ளி!

தேட வரவில்லையா காதலரே என்றாள்.
தேடுவதற்குத் தொலைத்த பொருள் எதுவோ என்றேன்.
தேடுவதற்குப் பொருள் தொலைக்கத் தேவையில்லை
தேடியே என்இடையைக் காண்பாய் என்றாள்.

அணைக்க வரவில்லையா ஆருயிரே என்றாள்
அணைப்பதற்குக் குளிர்ந்தநீர் வேண்டும் என்றேன்
அணைப்பதற்கு நீர்எதற்கு என்றே கேட்டாள்
அணைத்தாலே அணைகின்ற நெருப்புஇது என்றாள்.

ஆட வரவில்லையா அன்பரே! என்றாள்
ஆடுவதற்கு அரங்கம் எங்கே? என்றேன்.
ஆடுவதற்கு அரங்கம் நமக்குஏன் வேண்டும்?
ஆறடிக் கட்டிலே போதும் என்றாள்.

jayanth
23-07-2012, 08:50 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))ஆனாலும் கொஞ்சம் ஒவர்தான்...