PDA

View Full Version : ஒரு நடிகையின் பேட்டி..



HEMA BALAJI
22-07-2012, 12:34 PM
http://1.bp.blogspot.com/-t5M3mHPa9cQ/UAe2A5JMCuI/AAAAAAAAAzc/MOMIhxrFZes/s400/frz.jpg



அது ஒரு நடிகையின் பேட்டி..

நடு நடுவே அப் பெரிய நடிகரைப் பற்றிய
சிலாகிப்பும் நெகிழ்ச்சியுமாக
ஆனந்தக்?!.. கண்ணீருடன்
அவரின் எளிமையும்
தயாள தாராள குணமும்
பத்தி முழுவதும் விரவிக் கிடந்தன..

அக்கண்ணீருக்குப் பின்னே
உறைந்திருந்த ரத்தத் துளிகள்
மறைக்கப் பட்டு
புனைவாக ஒரு சரித்திரம்
அச்சாக்கப் பட்டிருந்தது...

கீதம்
22-07-2012, 01:26 PM
உண்மைகள் திரைக்குப் பின்னால் தள்ளப்பட்டால்தானே அவளால் திரைக்கு முன்னால் முகம் காட்ட இயலும்.

அவள் உலகைப் புரிந்துகொண்டவள். அதனால்தான் அவலங்களை புனைவுகளால் பூசி மறைக்கிறாள்.

மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் ஹேமா.

கலைவேந்தன்
22-07-2012, 03:34 PM
இக்கவிதை நிதர்சனத்தை அப்பட்டமாகக் கூறி இருக்கின்றது. எத்தனையோ நடிகைகளின் கண்ணீர் அரிதாரத்தால் மறைக்கப்படுகிறது.

அருமையான கவிதைக்கு வாழ்த்துகள் ஹேமா.

HEMA BALAJI
24-07-2012, 06:47 AM
உண்மைகள் திரைக்குப் பின்னால் தள்ளப்பட்டால்தானே அவளால் திரைக்கு முன்னால் முகம் காட்ட இயலும்.

அவள் உலகைப் புரிந்துகொண்டவள். அதனால்தான் அவலங்களை புனைவுகளால் பூசி மறைக்கிறாள்.

மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் ஹேமா.

உண்மைதான். பாராட்டுகளுக்கு நன்றி கீதம்...

HEMA BALAJI
24-07-2012, 06:48 AM
இக்கவிதை நிதர்சனத்தை அப்பட்டமாகக் கூறி இருக்கின்றது. எத்தனையோ நடிகைகளின் கண்ணீர் அரிதாரத்தால் மறைக்கப்படுகிறது.

அருமையான கவிதைக்கு வாழ்த்துகள் ஹேமா.

நன்றி கலை அண்ணா...

vasikaran.g
29-07-2012, 08:11 AM
நடிகையின் பேட்டி..மனதில் ரணம் ..

அமரன்
30-07-2012, 09:18 PM
புதுமுக நடிகை எனில்
மனம் முழுதும் புழுங்கும் எனக்கு..
பழைய முகமெனில்..

அரிதாரம் பூசாமாலே
அவதாரம் எடுக்கும் அற்புத நடிகை
அவளென்பேன்..

மறுபக்கம் இருண்டிருக்கும் கவிதை..

பாராட்டுகள் ஹேமாபாலாஜி.

HEMA BALAJI
31-07-2012, 01:20 PM
நடிகையின் பேட்டி..மனதில் ரணம் ..

பின்னூட்டத்துக்கு நன்றி வசிகரன்..

HEMA BALAJI
31-07-2012, 01:22 PM
புதுமுக நடிகை எனில்
மனம் முழுதும் புழுங்கும் எனக்கு..
பழைய முகமெனில்..

அரிதாரம் பூசாமாலே
அவதாரம் எடுக்கும் அற்புத நடிகை
அவளென்பேன்..

மறுபக்கம் இருண்டிருக்கும் கவிதை..

பாராட்டுகள் ஹேமாபாலாஜி.
நன்றி அமரன்...