PDA

View Full Version : நான் ரசித்த சில ஜோக்குகள்



மதுரை மைந்தன்
21-07-2012, 11:03 PM
கடவுளும் ஒரு மனிதனும் பேசிக்கொள்கிறார்கள்.

மனிதன் கடவுளிடம்: ஒரு மில்லியன் வருடங்கள் என்றால் என்ன?

கடவுள்: அது எனக்கு ஒரு நொடி.

மனிதன்: ஒரு மில்லியன் டாலர் என்றால் எவ்வளவு?

கடவுள்: எனக்கு அது ஒரு பைசா.

மனிதன்: எனக்கு ஒரு பைசாவை தாருங்கள்.

கடவுள்: ஒரு நொடியில் தருகிறேன்.

மதுரை மைந்தன்
21-07-2012, 11:09 PM
ஆசிரியர் மாணவனிடம்: நீ எழுதிய நாயைப் பற்றிய கட்டுரை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை இன்னொரு மாண்வனோடதாக இருக்கிறது.

மாணவன்: ஆமாம் இதுவும் அதே நாய்தான்

மதுரை மைந்தன்
21-07-2012, 11:10 PM
ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக ஒருவரை நியமித்தார்கள். மாண்வர்களை விளையாட்டுக்கள் மூலம் உடல் பயிற்சி தருவது அவருடைய பணி. முதல் நாலன்று அவர் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். அங்கே சில மாண்வர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பையன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தான். அவனருகே சென்ற உடல் பயிர்சி ஆசிரியர் அவனிடம் நீ ஏன் மற்றவர்களைப் போல் விளையாடக்கூடாது என்று கேட்டார். அதற்கு அந்த மாண்வன் சொன்னான் " நான் தான் கோல் கீப்பர்".

மதுரை மைந்தன்
21-07-2012, 11:13 PM
செய்தி: ஒலிம்பிக் போட்டிகளில் தாவிகுதிக்கும் போட்டியில் இந்திய வீரார் தங்க பதக்கத்தை தவறவிட்டார்.

சர்தார்ஜி: தாவி குதிக்கும்போது அவர் கழுத்திலிருந்த பதக்கம் எங்கேயாவது கழன்று விழுந்திருக்கும்.

மதுரை மைந்தன்
21-07-2012, 11:19 PM
ஒரு சிறுவனின் தாயார் கர்ப்பாமாக இருந்தார்.

சிறுவன் தாயாரின் வயிறை சுட்டி காட்டி இது ஏன் வீங்கியிருக்கு என்று கேட்டான்.

தாயார் சொன்னார் வயிற்றில் உன்னோட குட்டி தம்பி பாப்பா இருக்கான்.

மறுனாள் வகுப்பில் ஆசிரியர் " யாருக்கெல்லம் குட்டி தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள்?" என்று கேட்டர்.

சிறுவன் சொன்னான் " எனக்கு ஒரு குட்டி தம்பி இருக்கான். ஆனா அவனை எங்க அம்மா சாப்பிட்டுட்டா".

மதுரை மைந்தன்
21-07-2012, 11:24 PM
ஒரு தாதாவின் மகன் நேர்முக தேர்வுக்கு சென்று திரும்பினான். அவனிடம் தாதா தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டார். நேற்று நீங்க உங்க ஆட்கள்கிட்ட சொன்னதை கேட்டேன். நீங்க சொன்னீங்க " என்னை சேர்ந்தவர்கள் யாரும் வாயை திறக்க கூடாது"னு. அதான் தேர்வுல ஒரு கேள்விக்க் கூட வாயை திறக்கலை.

ராஜா
22-07-2012, 03:46 AM
ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக ஒருவரை நியமித்தார்கள். மாண்வர்களை விளையாட்டுக்கள் மூலம் உடல் பயிற்சி தருவது அவருடைய பணி. முதல் நாலன்று அவர் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். அங்கே சில மாண்வர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பையன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தான். அவனருகே சென்ற உடல் பயிர்சி ஆசிரியர் அவனிடம் நீ ஏன் மற்றவர்களைப் போல் விளையாடக்கூடாது என்று கேட்டார். அதற்கு அந்த மாண்வன் சொன்னான் " நான் தான் கோல் கீப்பர்".

ஹி..ஹி..

பள்ளிக்கூடம் உருப்பட்டுடும்..!

ராஜா
22-07-2012, 03:49 AM
செய்தி: ஒலிம்பிக் போட்டிகளில் தாவிகுதிக்கும் போட்டியில் இந்திய வீரார் தங்க பதக்கத்தை தவறவிட்டார்.

சர்தார்ஜி: தாவி குதிக்கும்போது அவர் கழுத்திலிருந்த பதக்கம் எங்கேயாவது கழன்று விழுந்திருக்கும்.

குண்டு எறியும் போட்டின்னா என்ன சொல்லியிருப்பாருன்னும் புரியுது..

ராஜா
22-07-2012, 03:52 AM
ஒரு தாதாவின் மகன் நேர்முக தேர்வுக்கு சென்று திரும்பினான். அவனிடம் தாதா தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டார். நேற்று நீங்க உங்க ஆட்கள்கிட்ட சொன்னதை கேட்டேன். நீங்க சொன்னீங்க " என்னை சேர்ந்தவர்கள் யாரும் வாயை திறக்க கூடாது"னு. அதான் தேர்வுல ஒரு கேள்விக்குக் கூட வாயை திறக்கலை.

இவர் வாயைத் திறக்காதது தெரிஞ்சும், அவிங்க எல்லாக் கேள்விகளையும் கேட்டுட்டுதான் ஓய்ஞ்சுருக்காய்ங்க.. என்ன ஒரு கடமை உணர்ச்சி..!

ராஜா
22-07-2012, 03:55 AM
கடவுளும் ஒரு மனிதனும் பேசிக்கொள்கிறார்கள்.

மனிதன் கடவுளிடம்: ஒரு மில்லியன் வருடங்கள் என்றால் என்ன?

கடவுள்: அது எனக்கு ஒரு நொடி.

மனிதன்: ஒரு மில்லியன் டாலர் என்றால் எவ்வளவு?

கடவுள்: எனக்கு அது ஒரு பைசா.

மனிதன்: எனக்கு ஒரு பைசாவை தாருங்கள்.

கடவுள்: ஒரு நொடியில் தருகிறேன்.

இதே ஜோக்கை ’சமீபத்தில்’கூட படித்ததாக நினைவு..!

ராஜா
22-07-2012, 03:57 AM
அனைத்துத் துணுக்குகளும் அசத்தல் அண்ணா..!

மதுரை மைந்தன்
22-07-2012, 09:35 AM
அனைத்துத் துணுக்குகளும் அசத்தல் அண்ணா..!

நன்றி ராஜா அய்யா!

மதுரை மைந்தன்
22-07-2012, 09:36 AM
ஒரு குஜராத்தி ஏழை இளைஞன். அவனுக்கு திருமணமாகவில்லை. அவனுடைய கண் பார்வையற்ற தாயாரை அவன் காப்பாற்ற வேண்டியிருந்தது. தனது குறைகளை சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.

அவனுடைய பிரார்த்தனைகளை கேட்டு இரங்கிய கடவுள் அவன் முன் தோன்றி " உன் கஷ்டங்களை தீர்க்க ஒரு வரம் தருகிறேன். ஆனால் ஏதாவது ஒன்றைத் தான் நீ கேட்கவேண்டும்" என்றார்.

அந்த இளைஞன் கேட்டான் " எனது மனைவி எங்களுடைய குழந்தையின் 2 கோடி பெறுமான நகைகளை எங்களுடைய பங்களாவின் கார் பார்க்கில் உள்ள மெர்சிடிசில் வங்கிக்கு சென்று அதை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதை எனது தாயார் பார்க்கவேண்டும்".

அவனுடைய வேண்டுகோளை கேட்ட கடவுள் சிரித்துக் கொண்டு தனக்குள் நினைத்துக் கொண்டார் " இந்த குஜராத்திகளிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள* வேண்டும்".

ராஜா
22-07-2012, 10:12 AM
ஹா.. ஹா..! சூப்பர் அண்ணா..!

ஒருவன் இறைவனிடம் வரம் கேட்டானாம்..

”எனக்கு ஒரு அரசு பதவி வேண்டும்.. என்னிடம் நிறைய பணம் புழங்கவேண்டும்.. என்னைச் சுற்றி பெண்கள் கூட்டம் எப்போதும் இருக்கவேண்டும்..!”

கடவுள் அருளினார்..

“ சரி மகனே.. நீ பல்லவன் ’மகளிர் மட்டும்’ பேருந்தில் நடத்துனராகக் கடவாய்..!”

நம்ம ஊரு சாமி அளவுக்கு அந்த ஊர் சாமி ஸ்மார்ட் இல்லே போல..!

மதுரை மைந்தன்
22-07-2012, 10:23 AM
ஹா.. ஹா..! சூப்பர் அண்ணா..!

ஒருவன் இறைவனிடம் வரம் கேட்டானாம்..

”எனக்கு ஒரு அரசு பதவி வேண்டும்.. என்னிடம் நிறைய பணம் புழங்கவேண்டும்.. என்னைச் சுற்றி பெண்கள் கூட்டம் எப்போதும் இருக்கவேண்டும்..!”

கடவுள் அருளினார்..

“ சரி மகனே.. நீ பல்லவன் ’மகளிர் மட்டும்’ பேருந்தில் நடத்துனராகக் கடவாய்..!”

நம்ம ஊரு சாமி அளவுக்கு அந்த ஊர் சாமி ஸ்மார்ட் இல்லே போல..!

ஹா ஹா ஹா...... சூப்பர் ராஜா அய்யா!

அனுராகவன்
04-08-2012, 09:36 PM
அருமையான துணுக்கள்,,
ரசிக்க கூடியதாக உள்ளது..
நன்றி...என் வாழ்த்துக்கள்...

jayanth
07-08-2012, 10:43 PM
மைந்தரே நீங்க ஜோக்கும் அடிப்பீங்களா...???
எல்லாமே சூசூசூசூசூப்பர்...!!!

M.Jagadeesan
08-08-2012, 12:41 AM
அனைத்து சிரிப்புகளும் அருமை! தொடர்ந்து மன்றத்தைக் கலக்குங்கள்!

seguwera
08-08-2012, 01:36 PM
நல்ல நகைச்சுவை

மதுரை மைந்தன்
15-08-2012, 12:30 PM
உலக நாடுகளில் உணவு பற்றாகுறையை பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் கேட்கப்பட்ட கேள்வி: மற்ற நாடுகளில் உள்ள உணவு பற்றாகுறையை நீக்க நேர்மையான தீர்வை பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன?

ஆய்வு தோல்வியடைந்தது. காரணம்:

* ஆப்பிரிக்காவில் இந்த கேள்வி எழுப்பிய போது அவர்களுக்கு 'உணவு" என்றால் என்ன என்று தெரியவில்லை.

கிழக்கு ஐரோப்பாவில் ' நேர்மை' என்றால் என்ன என்று தெரியவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் ' பற்றாக்குறை' என்றால் என்னவென்று தெரியவில்லை.

சீனாவில் 'அபிப்ராயம்' என்றால் என்னவென்று தெரியவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் 'தீர்வு' என்றால் என்னவென்று தெரியவில்லை.

அமெரிக்காவில் 'மற்ற நாடுகள்' என்றால் என்னவென்று தெரியவில்லை.

நாஞ்சில் த.க.ஜெய்
15-08-2012, 01:32 PM
படித்த நகைச்சுவை மீண்டும் படிக்கையில் :lachen001::lachen001::lachen001:

jayanth
15-08-2012, 04:53 PM
உலக நாடுகளில் உணவு பற்றாகுறையை பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் கேட்கப்பட்ட கேள்வி: மற்ற நாடுகளில் உள்ள உணவு பற்றாகுறையை நீக்க நேர்மையான தீர்வை பற்றி உங்களுடைய அபிப்ராயம் என்ன?

ஆய்வு தோல்வியடைந்தது. காரணம்:

* ஆப்பிரிக்காவில் இந்த கேள்வி எழுப்பிய போது அவர்களுக்கு 'உணவு" என்றால் என்ன என்று தெரியவில்லை.

கிழக்கு ஐரோப்பாவில் ' நேர்மை' என்றால் என்ன என்று தெரியவில்லை.

மேற்கு ஐரோப்பாவில் ' பற்றாக்குறை' என்றால் என்னவென்று தெரியவில்லை.

சீனாவில் 'அபிப்ராயம்' என்றால் என்னவென்று தெரியவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் 'தீர்வு' என்றால் என்னவென்று தெரியவில்லை.

அமெரிக்காவில் 'மற்ற நாடுகள்' என்றால் என்னவென்று தெரியவில்லை.


அருமை மைந்தரே... ஆனாலும் இது ஆணித்தரமான உண்மைதானே...

மதுரை மைந்தன்
31-08-2012, 10:09 AM
ஆசையா பூ வாங்கிட்டு வந்து குடுத்த உன் புருஷனுக்கு
குடிப்பழக்கம் இருக்குன்னு எப்படித் தெரிஞ்சுக்கிட்டே?
-
பூவைக் கையில் கொடுத்தப்போ, இந்தா டார்லிங்க்
‘மில்லிப் பூ’ன்னாரே…!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:10 AM
பாசுமதி அரிசி ஆணா, பெண்ணா..?
-
தெரியலையே…
-
இது கூடவா தெரியலை? பெண்தான்..!
பேரைப் பார்த்தாலே தெரியுமே, பா.சுமதி!
-

மதுரை மைந்தன்
31-08-2012, 10:11 AM
ஏன் உங்க கண்ணாடியை மாத்தணும்னு சொல்றீங்க?
-
நீங்கதானே என்னை விட என் மருமகளுக்கு பவர் அதிகம்னு
சொன்னீங்க…!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:13 AM
டாக்டர் உங்களை பார்க்க வந்தாலே உடம்பு
சரியாயிடுது…!
-
சரி சரி …நர்ஸைப் பார்க்காம, அதை என்னைப்
பார்த்து சொல்லுங்க!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:17 AM
காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான்
காதலிக்கிறது..?

காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்…!

காதலன்: அப்புறம்…?

காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!
-

மதுரை மைந்தன்
31-08-2012, 10:18 AM
குடியை மறக்க மருந்து தந்தேனே, இப்ப எப்படி இருக்கு?
-
குடிச்சதுமே, அது என்ன பிராண்டு’னு மறந்திடுது டாக்டர்..!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:19 AM
புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா..?
அப்படி என்ன புத்தகம் படிச்சார்?
-
முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படின்னனு புத்தகம்
படிச்சாராம்…!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:19 AM
என்னங்க இது, பெட்ல மாதிரைகளை அள்ளிப் போடுறீங்க?
-
படுக்கும்போது மாத்திரைகளைப் போட்டுக்கிட்டுப்
படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்…!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:20 AM
இது கொஞ்சம் சிக்கலான கேஸ்….
-
எதை வச்சு சொல்றீங்க டாக்டர்?
-
நான் பரீட்சையில் ஃபெயிலான சப்ஜெட்ல இருந்து
உங்களுக்கு நோய் வந்திருக்கு…!
-

மதுரை மைந்தன்
31-08-2012, 10:21 AM
நம்ம நாடாளுமன்றத்தை விட பெட்ரோலுக்கு
மவுசு அதிகம்…!
-
எப்படி?
-
ஒரு வருஷத்துல நாடாளுமன்றம் சில தடவைதான்
கூடுது, ஆனால் பெட்ரோல் விலை பல தடவை
கூடுதே…!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:22 AM
இது திருடன் ஓட்டுற பைக்…!
-
எப்படிக் கண்டு பிடிச்சே..?
-
ஹெட்லைட்திரு திருன்னு முழிக்குதே…!
-

மதுரை மைந்தன்
31-08-2012, 10:26 AM
ஏண்டி…கிளாஸூக்கு லேட்..?
-
ஒரு பையன் என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தான் டீச்சர்…!
-
அதனால் என்னடி?
-
அவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான் டீச்சர்..!

மதுரை மைந்தன்
31-08-2012, 10:27 AM
இதோ பாருடி…நான் சாமியாராகப் போறேன்…!
-
அடப்பாவி மனுஷா….’அந்த’ விஷயத்துல நான் உனக்கு
அப்படி என்ன குறைச்சேன்…?
-

மதுரை மைந்தன்
31-08-2012, 11:58 AM
சிகிச்சைக்கு வந்தவர் மன்னர்னு எப்படி சொல்றே?
-
முதுகுல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்னு சொல்றாரே..!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:03 PM
இந்தப்படத்துல ஒரு காட்சியில நீங்க நிர்வாணமா தலைகாட்ட
வேண்டியிருக்கும், சம்மதமா மேடம்?
-
போங்க சார்…தலையை மட்டும் காட்டுறது எப்படி நிர்வாணமாகும்?

மதுரை மைந்தன்
31-08-2012, 12:05 PM
பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்ஸூம், பாலியஸ்டர் வேட்டியும் ஒண்ணா…எப்படி?

-இடையிலே நிக்காது…!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:07 PM
டாக்டர்…எனக்கென்னவோ எப்பவும் பயமாயிருக்கு, தற்கொலை செஞ்சுக்கலாமான்னு தோணுது…!
-
அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…எங்கிட்டே வந்துட்டீங்க இல்லே, நான் பார்த்துக்கறேன்…!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:08 PM
அப்பா சொன்னாக் கேட்கணும், இல்லாட்டி நீ உருப்படவே மாட்டே..!
-
அதை இப்போ நினைச்சு என்ன பியோஜனம், தாத்தா சொல்லும்போது நீங்கள் கேட்டிருக்கணும்…!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:14 PM
ஆபரேஷனுக்கு ரொம்ப செலவாகுமா டாக்டர்?
-
நோ..நோ…டெட் சீப்!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:16 PM
நண்பனுக்கும் நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு?
-
நீங்க உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் இருந்தா, நண்பன் சொல்லுவான்
”சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா…!”
-
நல்ல நண்பன் சொல்லுவான்..”நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே…கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு…!”

மதுரை மைந்தன்
31-08-2012, 12:17 PM
ஏங்க நம்ம பையன் மோசமான படத்தோட ரெண்டு சி.டி வச்சிருக்காங்க…
-
வரட்டும் இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திடறேன்…!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:21 PM
“ஏங்க, அதான் நர்ஸ் சொன்னாங்கல்ல, இது ஒரு சின்ன ஆபரேஷன் தான், பயப்பட வேண்டாம்னு, அப்புறம் ஏன் இப்படி நடுங்கறீங்க.”
-
“அடி அசடு, நர்ஸ் சொன்னது நம்மகிட்ட இல்லடி, டாக்டர்கிட்ட…!.”

மதுரை மைந்தன்
31-08-2012, 12:23 PM
இவ்வளவு நாள் நல்லாப் பழகிட்டு ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கிறீங்க?
-
டாக்டர் சொன்னாரு…நெருங்கிய உறவுலே கல்யாணம் பண்ணக் கூடாதாமே…!

மதுரை மைந்தன்
31-08-2012, 12:26 PM
நாதஸ்ர வித்வான் போராட்டம் நடத்துறாங்களே, ஏன்?
-
எல்லாம் ஊதிய உயர்வு கேட்டுத்தான்..!
-

மதுரை மைந்தன்
31-08-2012, 12:27 PM
நீங்க இருக்கும் எடைக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் நல்லது…!
-
நடக்கிற காரியமா சொல்லுங்க சார்..!
-
நீங்க நடக்கலேன்னா சீக்கிரம் காரியம் நடந்துவிடும் தெரியுமா…?
-

jayanth
31-08-2012, 04:54 PM
படித்தேன்.ரசித்தேன்.சிரித்தேன் மைந்தரே...!!!

A Thainis
31-08-2012, 08:32 PM
நம்ம நாடாளுமன்றத்தை விட பெட்ரோலுக்கு
மவுசு அதிகம்…!
-
எப்படி?
-
ஒரு வருஷத்துல நாடாளுமன்றம் சில தடவைதான்
கூடுது, ஆனால் பெட்ரோல் விலை பல தடவை
கூடுதே…!

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கடி

மதுரை மைந்தன்
01-09-2012, 08:49 AM
காக்கா ஏன் இந்தியா மேப்ப ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டிருக்கு?
-
ஏன்னா…அதுல வட இந்தியா இருக்கே…!

மதுரை மைந்தன்
01-09-2012, 08:50 AM
“”சார்! நாங்க வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்

ஆச்சரியமா இருக்கே?””"

இதுக்கே ஆச்சரியப்பட்டா… போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான்” “”

மதுரை மைந்தன்
01-09-2012, 08:51 AM
சாப்பிட்டு முடிச்சவுடனே உன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே, என்னவாம்?””"

இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமான்னு கண்ணீர் மல்க கேட்டார்…!

மதுரை மைந்தன்
01-09-2012, 08:53 AM
பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்””

இப்பவாது புரிஞ்சுக்கிட்டியே””"

பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது..?

மதுரை மைந்தன்
01-09-2012, 08:54 AM
படத்துல நிறைய மெசேஜ் இருக்குன்னு எப்படி சொல்றே?
-
ஹீரோவும் ஹீரோயினும் ஆளுக்கு ரெண்டு செல்போன் வச்சுக்கிட்டு, அப்பப்ப பார்த்துக்கிட்டே இருக்காங்களே…!

மதுரை மைந்தன்
01-09-2012, 08:55 AM
கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?
-
போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்…!

jayanth
01-09-2012, 10:01 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123'))

மதுரை மைந்தன்
02-09-2012, 09:32 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123')).....http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/596549.gif (javascript:emoticonp('123'))

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

மதுரை மைந்தன்
02-09-2012, 09:33 AM
என்னது,மாப்பிள்ளை ‘சீடை’ காண்பிக்கிறாரே…?
-
பின்னே…எத்தனை காலந்தான் மாப்பிள்ளை, ‘முறுக்கை’ காண்பிக்கிறார்ன்னு சொல்றதாம்..!

மதுரை மைந்தன்
02-09-2012, 09:39 AM
மின்சாரம் திருடினதா உன்மேல போலீஸ் ஒரு வழக்குப் போட்டதா சொன்னியே என்னாச்சு?
-
வழக்கு நம்பும்ம்படியா இல்லை’னு மின் கம்பி திருடியதா மாத்திப் போட்டுட்டாங்க…!

மதுரை மைந்தன்
02-09-2012, 09:40 AM
அப்பா! எங்க ஸ்கூலில் ‘தந்தையின் உழைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது?
-
நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…!

மதுரை மைந்தன்
02-09-2012, 09:42 AM
இருந்தாலும் அந்த டாக்டருக்கு ரொம்பதான் கடவுள் பக்தி!

எதை வெச்சு சொல்றே?

வயித்துல ஆபரேசன் முடிஞ்சதும் குடலை சுத்தி தாயத்து கட்டி விட்டாரே!

மதுரை மைந்தன்
02-09-2012, 09:42 AM
எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா, மாப்பிள்ளை சந்தோஷமா வச்சிக்குவார?
-
என்ன இப்படி கேட்டுட்டீங்க…அவர் ஏற்கனவே ரெண்டு பொணுங்களை சந்தோஷமா வெச்சிருந்தவர்தான்!

A Thainis
02-09-2012, 09:52 AM
:lachen001::lachen001:
அப்பா! எங்க ஸ்கூலில் ‘தந்தையின் உழைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது?
-
நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…!

:lachen001:சூப்பர் மதுரை மைந்தன்.

மதுரை மைந்தன்
03-09-2012, 10:49 AM
ஏங்க…உங்ககிட்டே கடன் வாங்க உங்க நண்பர் வந்திருக்காரு…
-
நான் வீட்டில் இல்லன்னு சொல்ல வேண்டியதுதான..?
-
அதெப்படி பொய் சொல்ல முடியும்…நீங்க பாத்திரம் தேய்க்கிற சத்தம் தெருவரை கேட்குதே…!

மதுரை மைந்தன்
03-09-2012, 10:51 AM
ஆச்சரியமாயிருக்கு, டெட்பாடிக்கு இன்னும் பல்ஸ் இருக்கே?
-
விடுங்க டாக்டர்…நீங்க பிடிச்சிருக்கிறது என்னோட கை…!

மதுரை மைந்தன்
03-09-2012, 11:14 AM
வாழ்க்கையிலே வரும்… போகும்…நிரந்தரமில்லை அது என்ன?

மின்சாரம் சார்…!

மதுரை மைந்தன்
03-09-2012, 11:14 AM
மன்னா, ராணியை எதிரி நாட்டு மன்னன் கடத்திச் செல்கிறான்..!

தொலைந்தான் எதிரி மன்னன்…!

மதுரை மைந்தன்
03-09-2012, 11:16 AM
இந்த டாக்டர் ஒரு இசைப்பிரியர்…!

இருக்கட்டுமே, அதுக்காக? என்ன பண்ணினார்?

ஆபரேஷனை முடிச்சிட்டு வரும்போது, ‘மங்களம்’ பாடிக்கிட்டே வர்றாரே நியாயமா..?

மதுரை மைந்தன்
03-09-2012, 11:17 AM
இனி மழை பெய்யும்போது இடியோட சத்தமே வராது..!

அது எப்படி?

நீ இன்னைக்கு பேப்பர் பார்க்கலையா? இடி – ‘மின்னல் தாக்கி சாவு’ன்னு

மதுரை மைந்தன்
03-09-2012, 11:18 AM
என்னோட மனைவி இறந்திட்டா, அழணும்னு நினைச்சாலும் அழுகையே வர மாட்டேங்குது…!
-
செத்தவ திரும்பி வந்திட்டதா நினைச்சுக்கோ…தானா அழுகை வரும்..!

மதுரை மைந்தன்
03-09-2012, 11:20 AM
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?
-
முழுகாம இருக்கா..!

மதுரை மைந்தன்
03-09-2012, 11:28 AM
காணாமல் போன உன் கணவரை விட்டுட்டு ‘உன்னைக் காணவில்லை’ன்னு பேப்பருல விளம்பரம் தர்றியே…எதுக்கு?
-
என் கணவரைப்பத்தி உனக்குத் தெரியாது! என்னைக் காணவில்லைன்னாலே அவர் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவாரு…அதுக்குத்தான்..!

M.Jagadeesan
03-09-2012, 11:33 AM
:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

மதுரை மைந்தன்
04-09-2012, 09:39 AM
என்னங்க ‘அன்னை இல்லம்’னு ஒரு பேப்பர்ல எழுதி தந்து கடன் கேட்கறீங்களே, ஒண்ணுமே புரியலையே?
-
உங்க விளம்பரத்துலே வீட்டின் பேரில் கடன் தரப்படும்னு எழுதியிருக்கே…அதான்..!

மதுரை மைந்தன்
04-09-2012, 09:40 AM
என்னங்க, கனவுல நாயா வருது..?
-
அதனாலென்ன, கையில நாலு அஞ்சு கல்லை வைச்சுக்கிட்டு தூங்குங்க…!
-

மதுரை மைந்தன்
04-09-2012, 09:41 AM
என்ன சார் புது வீட்டுக்கு சென்ட் அடிக்கிறீங்க?
-
இது வியர்வை சிந்திக் கட்டின வீடு..!

மதுரை மைந்தன்
04-09-2012, 09:42 AM
எப்பப் பார்த்தாலும் உருப்பட மாட்டேன்’னு என்னைத் திட்டுவியே, இப்ப நான் மந்திரி சம்பளம் வாங்கறேன்…!
-
எதுக்கடா அடுத்தவன் சம்பளத்த எல்லாம் வாங்கறே..?

மதுரை மைந்தன்
04-09-2012, 09:42 AM
டாக்டர் வலி தாங்கல, உயிரே போயிடுமோன்னு பயமா இருக்கு…!
-
பயப்பட்டாதீங்க…நான் எதுக்கு இருக்கேன்…ஆபரேஷன் பண்ணாம அப்படியெல்லாம் நடக்க விட்டுடுவேனா என்ன…?

மதுரை மைந்தன்
04-09-2012, 09:46 AM
கதை மதுரையிலே ஆரம்பமாகுது…!

சாமியார் சப்ஜெக்ட் வேணாங்க…!

மதுரை மைந்தன்
04-09-2012, 09:47 AM
டாக்டர் என் மனைவி சீரியலைப் பார்த்து அழறா..!

இது எல்லார் வீட்டிலேயும் நடக்கறதுதானே?

அதில்லே டாக்டர், சீரியல் பல்பைப் பார்த்துக்கூட அழறா…!

டாக்டர்: ??

மதுரை மைந்தன்
04-09-2012, 09:48 AM
எதிரி மன்னர் உங்களுடன் கிரிக்கெட் விளையாட வர மாட்டேன் என்று கூறிவிட்டார் மன்னா…!

ஹா….ஹா…நான்தான் அதிக, ‘ரன்’ எடுப்பேன் என்று பயந்து விட்டான்..!

மதுரை மைந்தன்
04-09-2012, 10:27 AM
எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க டாக்டர்..!

எல்லோரும் இதையே சொன்னா நான் யாருக்குத்தான் ஆபரேஷன் பண்றது..?

மதுரை மைந்தன்
04-09-2012, 10:28 AM
டாக்டர் என் கண்ணுக்கு எமன் தெரியறான்..!

கவலைப்படாதீங! நான் ஆபரேஷன் தேதியை தள்ளி போட்டுடறேன். அவன் ஏமாந்து திரும்ப போயிடுவான்..!

மதுரை மைந்தன்
04-09-2012, 10:29 AM
அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?

ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே..!

A Thainis
04-09-2012, 11:42 AM
:lachen001::lachen001:
அம்மா எப்போது ஐயா ஊர்ல இருந்து வருவாரு?

ஏன் ராப்பிச்சை இதை தினமும் கேட்குறே?

அவர் சமையல் சாப்பிட்டு பழக்கமாயிடுச்சே..!

சூப்பர், அதாங்க உண்மை ஆண்கள் சமையல்தான் சூப்பர், அதான் பெண்கள் எல்லாம் நல்ல சாப்பாடு சாப்பிட ஓட்டல் போறாங்க
:lachen001:

கலைவேந்தன்
04-09-2012, 03:07 PM
புதிய நகைச்சுவைகள் அனைத்தும் வாசித்தேன்.. மதுரை அண்ணா. அருமை எல்லாமே..

jayanth
05-09-2012, 04:16 AM
கலக்கு(ங்க)(றீங்க) மைந்தரே

மதுரை மைந்தன்
05-09-2012, 09:48 AM
இங்கு பின்னூட்டங்கள் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!

மதுரை மைந்தன்
05-09-2012, 09:52 AM
ஆபரேஷன்தான் சக்சஸ் ஆச்சே…பேஷன்ட்தான் பிழைச்சுக்கிட்டாரே, பின் ஏன் டாக்டர் வெளியே போக பயப்படுகிறார்?
-
உங்க மாமியார் பிழைச்சுக்கிட்டாங்கன்னு வெளியில் நிற்கும் மருமகள்கிட்டே எப்படிச் சொல்லுவதுன்னுதான் பயப்படுகிறார்..!

மதுரை மைந்தன்
05-09-2012, 09:54 AM
சாமியார் எதுக்கு கோபமா இருக்கார்?

ஆசிரமத்துக்கு வர்ற வழி பூரா யாரோ ‘பெண்கள் ஜாக்கிரதை’னு எழுதி வெச்சிருக்காங்களாம்..!
-

மதுரை மைந்தன்
05-09-2012, 10:02 AM
நம்ம டாக்டர் போற போக்கு சரியில்லை…

என்ன பண்றார்?

உறுப்பு தானம் பண்ண கடைசி வாய்ப்புன்னு ஆபரேஷன் தியேட்டர்ல எழுதிப் போட்டிருக்கார்..!

மதுரை மைந்தன்
05-09-2012, 10:05 AM
என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்…கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?
-
நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கறே…?

மதுரை மைந்தன்
05-09-2012, 10:07 AM
காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!

அது எப்படிடா மச்சான்?

நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!

எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்…!

jayanth
07-09-2012, 03:36 AM
சிரிப்போ சிரிப்பு...

சுகந்தப்ரீதன்
07-09-2012, 08:07 AM
என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்…கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?
-
நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கறே…?ஒவ்வொரு கல்யாணநாள்ளயும் பலிகொடுக்குறதா வேண்டிகிட்டேன் அத்தான் அதான்..!!

அப்ப முதல்பலி நாந்தானா..?!:fragend005:

மதுரை மைந்தன்
08-09-2012, 01:41 AM
நான் இப்பொழுதெல்லாம் அதிகமாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்..!
-
உனக்கு கல்யாணமான விஷயத்தை எனக்குச் சொல்லவே இல்லையே…!

மதுரை மைந்தன்
08-09-2012, 01:42 AM
நேற்று சினிமாவுக்கு மஞ்சள் பட்டுப்புடவையும், சிவப்பு ஜாக்கேட்டும் அணிந்து நமக்கு முன்னால் ஐந்து வரிசை தள்ளி ஒருத்தி உட்கார்ந்திருந்தாளே, கவனித்தீஙர்களா?
-
இல்லையே!
-
நன்றாயிருக்கிறது…நீங்கள் சினிமா பார்த்த லட்சணம்..!!

மதுரை மைந்தன்
08-09-2012, 01:43 AM
என்ன, உங்க மானேஜர் டேபிள் மேலே இருக்கிற டெலிபோன் எப்ப பார்த்தாலும் அடிச்சுனே இருக்கு…!
-
அவர் குறட்டை விடறது யாருக்கும் கேட்க கூடாதுன்னு ஒரு செட்டப்தான்..!

மதுரை மைந்தன்
08-09-2012, 01:44 AM
நீங்கள் ஏன் எப்போதும் உங்கள் மனைவியின் கைகளை பிடித்தபடியே இருக்கின்றீர்கள். அவ்வளவு அன்பா?

கணவன் : நீங்க வேற… நான் கையை விட்டுவிட்டா உடனே எதையாவது வாங்க கடைக்குச் சென்றுவிடுவாள்..!

மதுரை மைந்தன்
08-09-2012, 01:46 AM
கணவன் : நம்முடைய திருமண நாளை நீ எப்படி கொண்டாட விரும்புகிறாய்?

மனைவி : நான் இதுவரை போய் பார்க்காத இடத்திற்கு போக வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் : அப்படியா…. சரி அப்போ நம்ம வீட்டு கிட்சனுக்குப் போகலாம்

மதுரை மைந்தன்
08-09-2012, 01:47 AM
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதி ஆனார்?

சினேகிதி : அப்படியா… நல்ல விஷயமாச்சே..அதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்.

மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்…!

மதுரை மைந்தன்
08-09-2012, 01:50 AM
கணவன் மனைவி இருவரும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு கிணற்றுக்கு வந்தார்கள்.

கணவன் கிணற்றுக்குள் தலையை கவிழ்த்து தனது ஆசையைத் தெரிவித்தான். பின்னர் எழுந்து ஒரு பூவை கிணற்றுக்குள் போட்டான்.

மனைவியும் தனது ஆசையைக் கூற விரும்பினாள். கிணற்று அருகில் சென்று தலையை குனிந்தாள். மிக அதிகமாக குனிந்ததால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

உடனே அதிர்ச்சி அடைந்த கணவன்…நிஜமாகவே விருப்பம் பலிக்கிறது என்றான்…!

மதுரை மைந்தன்
08-09-2012, 01:53 AM
ஆச்சரியமாயிருக்கே…பத்து நிமிஷம் முன்னாடியே ஆபிசுக்கு வந்துட்டீங்க…!
-
மண்ணங்கட்டி! நேத்து என்னை தூக்கத்துலேயிருந்து எழுப்பாமல் கதவைப் பூட்டிட்டு போயிட்டாங்க…!
-

மதுரை மைந்தன்
08-09-2012, 01:56 AM
இவரோட நண்பன் தற்கொலை செஞ்சுக்கிட்டான். சாவுக்கு இவர்தான் காரணம்னு லெட்டர் எழுதி வெச்சுட்டான்…!
-
நான் அடிக்கடி கடி ஜோக் சொன்னேன் சார்,ஆனா இப்படி தற்கொலை செஞ்சுக்குவான்னு எதிர்பார்க்கலை சார்..!

மதுரை மைந்தன்
08-09-2012, 02:12 AM
ஒரு காம்பவுண்ட் சென்டன்ஸ் சொல்லு பார்ப்போம்…!
-
‘இங்கு நோட்டீஸ் ஒட்டக்கூடாது’ சார்..!

jayanth
08-09-2012, 03:01 AM
இவரோட நண்பன் தற்கொலை செஞ்சுக்கிட்டான். சாவுக்கு இவர்தான் காரணம்னு லெட்டர் எழுதி வெச்சுட்டான்…!
-
நான் அடிக்கடி கடி ஜோக் சொன்னேன் சார்,ஆனா இப்படி தற்கொலை செஞ்சுக்குவான்னு எதிர்பார்க்கலை சார்..!

நம்ம மன்றதில எத்தன பேர் உங்கள காரணமாக்கப் போறாங்களோ...!!!

நாஞ்சில் த.க.ஜெய்
08-09-2012, 03:18 AM
கணவன் இதே நடக்கும் நகைசுவைகள் ஒவ்வொன்றும் அருமை ...அனுபவம் பேசுகிறது போல மதுரை மைந்தன் அவர்களே..

மதுரை மைந்தன்
08-09-2012, 10:42 PM
அந்த இரண்டு பைத்தியங்களுக்குள் என்ன தகராறு?
-
ஒன்று தாஜ்மஹாலை விலைக்கு வாங்கியே தீருவேன் என்கிறது. மற்றது அதை விலைக்கு விற்க மாட்டேன் என்கிறது..!

மதுரை மைந்தன்
08-09-2012, 10:43 PM
நான் ஆறு மாதத்திற்கு முன்பு அவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதிலிருந்து அவன் இன்னமும் குடித்துக் கொண்டிருக்கிறான்..!
-
அப்படியா! அந்த சந்தோஷத்தை இன்னமும் கொண்டாடுகிறான் போலிருக்கிறது..!
-

மதுரை மைந்தன்
08-09-2012, 10:44 PM
அந்த வில்லன் நடிகர் ஏன் இந்த சைக்கிள் வேண்டாம் என்கிறார்?
-
ஏன்னா அது ஹீரோ சைக்கிளாச்சே..!

மதுரை மைந்தன்
08-09-2012, 10:45 PM
என்ன, உன் கணவர் இன்னிக்கு மொத்தமா 1062 வார்த்தை பேசினேன்னு சொல்லிட்டுப் போறார்..?
-
அவர் எப்பவும் வார்த்தையை அளந்துதான் பேசுவார்..!

மதுரை மைந்தன்
08-09-2012, 10:46 PM
கீதாவோட மாமியார் மாதிரியே உனக்கும் கிடைக்கணும்னு வேண்டிக்கிறியே…அவங்க அவ்வளவு நல்லவங்களா..?
-
ஊஹூம்…செவிடு..!

மதுரை மைந்தன்
08-09-2012, 10:48 PM
உன் கணவருக்கு ஞாபக சக்தி அதிகம்னு எப்படி சொல்றே?
-
இது வரை நீ ஏழு தடவை காபிதூள் கடன் வாங்கிட்டு திருப்பித் தரலையாம்…அவர்தான் சொன்னார்..!

மதுரை மைந்தன்
08-09-2012, 10:49 PM
என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டா.. உன் மனைவி எப்படி?
-
கிழியறதுக்கு முன்னாலேயே கோட்டை போட்டு எவர்சில்வர் பாத்திரம் வாங்கிடுவா.!

jayanth
09-09-2012, 03:28 AM
இங்கேயும் கடி...அங்கேயும் கடி... தாங்காது மைந்தரே...!!!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:41 AM
இங்கேயும் கடி...அங்கேயும் கடி... தாங்காது மைந்தரே...!!!

உங்க சர்தார்ஜி கடிகளை விடவா!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:42 AM
அந்த திருடனுக்கு ஓவர் தெனாவட்டுனு எதை வெச்சு சொல்றீங்க?
-
நாங்க பூட்டுல கை வெச்சாதான் நீங்க வீட்ல கால் வைக்க முடியும்னு சொல்றானே..!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:42 AM
குறுகிய காலத்துல நீங்க எப்படி ஆயிரம் கோடி சம்பாதிச்சீங்க..?
-
ஜட்ஜ் ஐயா…ஆர்வத்துல கேக்கறீங்களா? ஆதங்கத்துல கேக்கறீங்களா…?

மதுரை மைந்தன்
10-09-2012, 09:43 AM
ஆசிரமத்தை சோதனை பண்ண போனவங்ககிட்ட சாமியார் என்ன சொல்றாரு…?
-
நீங்கள் எதிர்பார்க்கும் வேறு எதுவும் கிடைக்காது, பலான சி.டி மட்டும்தான் கிடைக்கும்’னு சொல்றாரு..!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:44 AM
பேச்சாளர்:

பெரியோர்களே…தாய்மார்களே…என் உயிரினும் மேலான ஆறு லோடு தொண்டர்களே…!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:45 AM
பெண்ணோட அப்பா ஜாலி டைப்’னு எப்படி சொல்றே?
-
என்ன மாப்ள…ஃபிகர் பிடிச்சிருக்கானு கேட்டாரே…!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:46 AM
தாமஸ் ஆல்வா எடிசன் காலத்தில் மின்சார விளக்கு எரிவதைப் பார்த்த மக்களின் ஆச்சரியம் இன்றளவும் தமிழகத்தில் தொடர்வதுதான் ஆச்சரியம்!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:47 AM
பஸ்ல ரொம்ப கூட்டமா இருந்தா, பக்கத்தில் நிற்பவரிடம் ‘இந்த பஸ் துபாய் போய்ச் சேருமான்னு கேளுங்க…பத்தடி தள்ளியே நிப்பானுங்க!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:48 AM
டாக்டர்…அந்த பேஷன்ட் சரியான குடிகாரர் போலிருக்கு…!
-
எப்படிச் சொல்றீங்க?
-
மருந்தைக்கூட சோடா கலந்து கொடுக்கச் சொல்றாரு டாக்டர்…!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:49 AM
விக்கிபீடியா: எனக்கு எல்லாமே தெரியும்!
-
கூகுள்: ஆனா என்கிட்டதான் எல்லாமே இருக்கு…
-
இன்டர்நெட்: நான் இல்லாம நீங்களா…?
-
பவர்கட்: அங்க என்னடா சத்தம்…?
-
மூவரும் (கோரஸாக): சும்மா பேசிக்கிட்டு இருக்கோம், மாமா…!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:50 AM
ஏன் அந்த வீட்டில் பூட்டை உடைத்துத் திருடினாய்..?
-
பூட்டை உடைக்காம திருடுற அளவுக்கு இன்னும் தொழில் கத்துக்கலை எஜமான்…!

மதுரை மைந்தன்
10-09-2012, 09:54 AM
வீடுதான் கோட்டை மாதிரி இருக்குன்னு சொல்றியே, அப்புறம் ஏன் கவலைப்படுறே?
-
மழை பெய்தால் வீட்டைச்சுற்றி ‘அகழி’ மாதிரி தண்ணீர் தேங்கிடுதே..!

aren
11-09-2012, 06:12 AM
கீதாவோட மாமியார் மாதிரியே உனக்கும் கிடைக்கணும்னு வேண்டிக்கிறியே…அவங்க அவ்வளவு நல்லவங்களா..?
-
ஊஹூம்…செவிடு..!

இல்லை, அவள் புருஷனைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்பொகிறேன் என்று சொல்லியிருப்பார்கள்.

மதுரை மைந்தன்
11-09-2012, 08:54 AM
மகாராணி, எனக்குப் பதிலா நீதான் போருக்குப் போக வேண்டும்…!
-
இது மரபு இல்லையே?
-
உனக்கு சமைச்சுப் போடுறேன், துவைச்சுப் போடுறேன், இது மட்டும் மரபா..?

மதுரை மைந்தன்
11-09-2012, 08:55 AM
கல்யாணத்துக்கு வந்திருக்கிற நீங்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பொண்ணு வீட்டுக்காரரா..?

இல்லைங்க! நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரன்..!

மதுரை மைந்தன்
11-09-2012, 08:56 AM
ஆசிரியர்: அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யார்..?

மாணவன்: மொதல்ல தொலைச்சது யார்னு சொல்லுங்க சார்..!

மதுரை மைந்தன்
11-09-2012, 09:00 AM
கடைசி வரை என்னோடவே இருப்பியா மகேஷ்?
-
ம்ஹூம், இன்டர்வெல்ல தம் அடிக்கப் போவேன்…!

மதுரை மைந்தன்
11-09-2012, 09:01 AM
டிபன் நல்லாருக்கு…பொண்ணுதான் பிடிக்கலே..!
-
இட்லிக்கு ஊறப்போட்டிருக்கோம்…குடும்பத்தோட அப்படியே மரியாதையா உள்ளே வந்து மாவரைச்சுக் குடுத்துட்டுப் போங்க…!

மதுரை மைந்தன்
11-09-2012, 09:03 AM
டூ வீலர்ல உன் மாமியாரைக் கூட்டிகிட்டு போறப்ப மட்டும் கண்டிப்பா ஹெல்மேட் போட்டுப்பியாமே, அவ்வளவு அக்கறையா?
-
அதெல்லாமில்லை…வேகமா ஸ்பீட் பிரேக்கர்ல ஏறி இறங்கறப்ப அவங்க தலைல முட்டலாம்னுதான்…!

மதுரை மைந்தன்
11-09-2012, 09:04 AM
என்னங்க, சொர்க்கத்துல கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே..?
-
ஆமாம்! அதனால்தான் அது சொர்க்கம்..!

மதுரை மைந்தன்
11-09-2012, 09:05 AM
என்னங்க இது..! ட்யூப் லைட், குண்டு லைட் இதெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறீங்க..?

இனிமே லைட்டா சாப்பிடு, அப்பத்தான் உடம்பு நல்லாயிருக்கும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..!

சுகந்தப்ரீதன்
11-09-2012, 05:07 PM
நீங்க ரசிக்கிற ஜோக்ஸெல்லாம் சூப்பாராக்கீதுண்ணா..!!:)

aren
12-09-2012, 05:03 AM
என்னங்க இது..! ட்யூப் லைட், குண்டு லைட் இதெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறீங்க..?

இனிமே லைட்டா சாப்பிடு, அப்பத்தான் உடம்பு நல்லாயிருக்கும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..!

அடப்பாவமே!! இவரை என்ன செய்வது????

aren
12-09-2012, 05:04 AM
என்னங்க, சொர்க்கத்துல கணவன் மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே..?
-
ஆமாம்! அதனால்தான் அது சொர்க்கம்..!


அப்படிப் போடு. நாம் இருக்கும் இடத்திற்கு அவர்களும் வராமல் இருக்கவேண்டுமே? அதுக்கு என்ன வழி?

A Thainis
12-09-2012, 06:58 AM
:lachen001::lachen001::lachen001::lachen001:
என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்…கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?
-
நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கறே…?

:lachen001:
சூப்பர்

மதுரை மைந்தன்
12-09-2012, 09:34 AM
உங்க படத்துல எதுக்கு சம்மந்தமே இல்லாம ஒருத்தர் வந்து பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்றாரு..?
-
நாளைக்கு யாரும் என் படத்துல கதையே இல்லைன்னு சொலக்கூடாது பாருங்க…அதான்!

மதுரை மைந்தன்
12-09-2012, 09:35 AM
எங்க கிளினிக்ல இதுவரைக்கும் ஒரு பேஷன்ட்டையும் டாக்டர் கைவிட்டதில்லை…
-
அப்படியா?
-
ஆமா…நர்ஸூங்கதான் நிறைய பேரை கை விட்டிருக்காங்க..!
-

மதுரை மைந்தன்
12-09-2012, 09:36 AM
அந்த டாக்டர் இதற்கு முன்பு ரேஷன் கடையில் வேலை பார்த்திருப்பார்னு நினைக்கிறேன்…!
-
ஏன், என்னாச்சு?
-
என்னிடம், எடையைக் குறை, எடையைக் குறை’ என்கிறாரே..!
-

மதுரை மைந்தன்
12-09-2012, 09:39 AM
தலைவர் கிட்ட பொது அறிவு கேள்வி கேட்டது தப்பா போச்சா…ஏன்?
-
நம் நாட்டின் தேசிய விலங்கு எதுன்னு கேட்டால் கை விலங்குன்னு சொல்றார்..!

மதுரை மைந்தன்
12-09-2012, 09:42 AM
எப்படி இருக்கார் உங்க தலைவர்?
-
வீடு விட்டால் ஜெயிலு, ஜெயிலு விட்டால் வீடு என்று ஏதோ அவர் பாட்டுக்கு இருக்கார்..!
-

கீதம்
13-09-2012, 12:11 AM
சிலநாட்களாய் வாசிக்கத் தவறியிருந்தவற்றை இன்றுதான் வாசித்தேன். வாய்விட்டு சிரிக்கச் செய்த நகைச்சுவைகளுக்கெல்லாம் லைக் போட்டுவிட்டேன். சில அடப்பாவி ரகம், சில ஐயையோ ரகம், சில அட ரகம், சில ஆஹா... ரகம். இப்படி ரகம் ரகமாய் ரசிக்கத்தக்க நகைச்சுவைகளை வழங்கிக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றியும் பாராட்டும் மதுரை மைந்தன் அண்ணா. தொடர்ந்து சிரிக்கவையுங்கள்.

jayanth
13-09-2012, 02:40 AM
ஜோக்குகள் எல்லாமே கிச்சு கிச்சு...

கலைவேந்தன்
13-09-2012, 04:10 AM
விடுபட்ட எல்லா ஜோக்குகளையும் வாசித்தேன்.. அசத்தல்.. தொடருங்க..!

மதுரை மைந்தன்
13-09-2012, 11:41 AM
யோவ்..எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச்சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே?
-
நீங்கதானே தலைவரே…எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க…!

மதுரை மைந்தன்
13-09-2012, 11:42 AM
எதுக்குடா மளிகைக்கணக்கு, லாண்டரிக் கணக்கு எல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே?
-
எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதிக்கிட்டு வரச் சொன்னாங்க…!

மதுரை மைந்தன்
13-09-2012, 11:48 AM
அப்பா கோபமாகப் பையனிடம் கேட்டார், “ஏண்டா. எல்லாப் பாடத்திலேயும் சைபர் வாங்கியிருக்கே”

“அப்பா, அது சைபர் இல்லேப்பா, என் மார்க்கையெல்லாம் பார்த்து டீச்சர் ‘ஓ’ போட்டிருக்காங்க!”

மதுரை மைந்தன்
13-09-2012, 11:52 AM
ஏம்மா, உன் புருஷன் மண்டை உடைஞ்சு ரத்தம் வர்ற வரைக்கும் நீ என்ன செஞ்சுகிட்டு இருந்தே?
-
அவரை அடிச்சிக்கிட்டே இருந்தேன் டாக்டர்..!

மதுரை மைந்தன்
13-09-2012, 12:00 PM
பிழைக்கறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்ன்னு சொன்னியே யாருக்கு என்னாசு?
-
டாக்டருக்குத்தான்.இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்..!
-

chettai
14-09-2012, 05:33 AM
அருமையான நகைச்சுவை துணுக்குகள். படித்து ரசித்தேன். நன்றி மதுரை மைந்தரே.

மதுரை மைந்தன்
14-09-2012, 09:04 AM
மூச்சு விடவே கஷ்டமா இருக்கு டாக்டர்…!
-
வயசான காலத்துல கஷ்டமான வேலையை ஏன் செய்யறீங்க..?

மதுரை மைந்தன்
14-09-2012, 09:05 AM
கால் வலின்னுதானே சொன்னேன். கையை கெட்டியா பிடிக்கிறீங்களே…டாக்டர்..!
-
போன வாரம் பீஸ் கொடுக்காம போன மாதிரி இப்பவும் போயிடக் கூடாதுன்னுதான்..!

மதுரை மைந்தன்
14-09-2012, 09:10 AM
அறிவாளிக்கும் முட்டாளுக்கும் என்னடா வித்தியாசம்?
-
அறிவாளி கேட்டதைச் சொல்வான், முட்டாள் சொல்றதைக் கேட்டுக்குவான்…!

மதுரை மைந்தன்
14-09-2012, 09:11 AM
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன் - இது காதல்
-
சரக்கு இருந்தால் சொல்லி அனுப்பு
சைட் டிஷ்ஷோடு வருகிறேன் – இது நட்பு

மதுரை மைந்தன்
14-09-2012, 09:14 AM
சின்ன ஆபரேஷனுக்கு எதுக்கு டாக்டர் இவ்வளவு பெரிய கத்தி?

ஆபரேஷன் பெயிலியர் ஆயிட்டா, உங்க சொந்தக்காரங்ககிட்டே இருந்து நான் தப்பிக்கத்தான்..!
-

மதுரை மைந்தன்
14-09-2012, 09:15 AM
தலைவரோட நாலு மணி நேரப்பேச்சை ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியா உட்கார்ந்து கேட்கறாங்களே…?
-
அப்படின்னா தலைவர் எவ்வளவு செலவு பண்ணியிருப்பார்னு நீயே பார்த்துக்கோ…!

chettai
15-09-2012, 06:15 AM
தலைவரோட நாலு மணி நேரப்பேச்சை ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியா உட்கார்ந்து கேட்கறாங்களே…?
-
அப்படின்னா தலைவர் எவ்வளவு செலவு பண்ணியிருப்பார்னு நீயே பார்த்துக்கோ…!

இது சூப்பரு...:icon_b::icon_b::icon_b:

chettai
15-09-2012, 06:16 AM
மூச்சு விடவே கஷ்டமா இருக்கு டாக்டர்…!
-
வயசான காலத்துல கஷ்டமான வேலையை ஏன் செய்யறீங்க..?

:lachen001::lachen001::lachen001:

கீதம்
15-09-2012, 09:15 AM
அங்கே கடிக்கப்படும் கடிகளுக்கு இங்கே மருந்து தரப்படுகிறது. அத்தனையும் நகைக்கவும் சுவைக்கவும் வைத்தன. பகிர்வுக்கு நன்றி மதுரை மைந்தன் அண்ணா.

jayanth
15-09-2012, 09:37 AM
பகிர்விற்கு நன்றி மைந்தரே...

மதுரை மைந்தன்
17-09-2012, 10:10 AM
காதல் என்பது சிக்ஸ்பேக் மாதிரி…! ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ணலைன்னா போயிடும்…
-
நட்பு என்பது தொப்பை மாதிரி…ஒரு தடவை வந்துச்சுன்னா, போகவே போகாது..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:14 AM
மாப்பிள்ளை வீட்டுல நாலு யானை, நாலு குதிரை, பதினாறு காவல்காரங்க இருக்கறதா சொன்னதும், பெரிய இடம்னு நினைச்சு பொண்ணைக் குடுத்தது தப்பாப் போச்சு..!
-
ஏன் என்ன ஆச்சு?
-
அவங்க வீட்டுல ஒரு செஸ் போர்ட் இருக்கறதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்கன்றது இப்போதானே தெரியுது..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:16 AM
ஐயா! எனக்கு ‘சளி’ பிடிச்சிருக்கு…லோன் தருவீங்களா?
-
நீங்க, ‘கோல்ட்’ லோனுங்கிறதை தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:17 AM
எல்லா வகை குழம்பும் கிடைக்கும்னு போர்டு வைச்சது தப்பாப் போச்சு முதலாளி…!
-
ஏன்…என்ன ஆச்சு?
-
ஒரு ஆளு வந்து ‘எரிமலைக் குழம்பு வேணும்’னு கேட்டு அடம்பிடிக்கிறார்..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:17 AM
உன் கணவரை ஏன் நவரசத்திலகம்னு சொல்றே?
-
ஒன்பது விதமா ரசம் வைத்து அசத்துவாரு…!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:18 AM
அந்த நர்ஸ் என் மேல உயிரையே வச்சிருக்காங்க டாக்டர்…!
-
எப்படி சொல்றீங்க?
-
ஆபரேஷனுக்கு சம்மதிக்க வேணாம்னு ‘அட்வைஸ்’ பண்ணினாங்களே..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:20 AM
மாதா கோவிலில் எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். சாத்தானைக் கண்டதும் எல்லோரும் பயந்து ஓடினார்கள். ஒருவன் மட்டும் நகராமல் இருந்தான்.
-
சாத்தான் : நான் யாரென்று தெரியுமா?
-
மனிதன் : தெரியும்.
-
சாத்தான் : தெரிந்துமா. . . ? உனக்கு பயமாக இல்லை.
-
மனிதன் : இல்லை.
-
சாத்தான் : ஏன்
-
மனிதன் : நான் உன் சகோதரியை திருமணம் செய்து 25 வருடங்களாகிறது.

மதுரை மைந்தன்
17-09-2012, 10:21 AM
தின்னிப்பயலை பள்ளியிலே சேர்த்தது தப்பா போச்சு…!
-
ஏன்?
-
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற நகரம் எதுன்னு கேட்டால் ‘சட்னி’ன்னு சொல்றான்..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:22 AM
டாக்டர் : அந்த ஹார்ட் பேஷண்ட் சாகக் கிடக்கிறார்ன்னா, அதுக்கு நீங்கதான் காரணம்
-
நர்ஸ் : என்ன சார், குண்டைத் தூக்கி போடறீங்க?
-
டாக்டர் : பின்ன என்ன? 8 மணிக்கொருதரம் 2 மாத்திரை கொடுன்னு சொன்னா, 2 மணிக்கொருதரம் 8 மாத்திரை கொடுத்திருக்கே!
-

மதுரை மைந்தன்
17-09-2012, 10:23 AM
டாக்டர் : நீங்க போன வாரம் கொடுத்த செக் திரும்பி வந்துடுச்சு!
-
நோயாளி : நீங்க ஆபரேஷன் செஞ்ச பைல்ஸும் எனக்கு திரும்பி வந்துடுச்சே
-
டாக்டர்! அதுக்கு இது சரியா போச்சு...!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:26 AM
தினசரி ஒரு பச்சை முட்டை சாப்பிடு..1
-
எந்தக் கடையில கேட்டாலும் வெள்ளை முட்டைதான் இருக்கு..!

மதுரை மைந்தன்
17-09-2012, 10:26 AM
என் தாத்தா அவர் காலேஜ் படிக்கும்போதே தன் காதலிக்கு மிஸ்டு கால் கொடுப்பாராம்..!
-
லேண்ட் லைனிலயா?
-
இல்லே..அவங்க வீட்டு ‘காலிங் பெல்லை’ அடிச்சுட்டு ஓரமா ஒளிஞ்சுப்பாராம்…!