PDA

View Full Version : விட்டில் பூச்சிகள்..



கலைவேந்தன்
21-07-2012, 06:16 PM
விட்டில் பூச்சிகள்..

*
குறைந்த வட்டி...
தேவைகள் பூர்த்தி...
எளிய தவணைகள்...
சரளமான வழிமுறைகள்...
உடனடி சேவை...
பன்னாட்டு வங்கியின்
பணியாளன் பேச்சில்
மயங்கி வீழ்ந்தனன்
ஏழை ,..!

*
உன்னிலும் அழகு
அவனியில் காணேன்...
நீயில்லையேல்
என் ஜீவனுமில்லை...
உன்னை இழந்தால்
உடனடியாய் மாள்வேன்...
அலங்கரிக்கப்பட்ட
அழகு வார்த்தைகளில்
மீளமுடியாமல் வீழ்ந்தனள்
காதலி...!

*
உன்னைவிட உயர்ந்த நட்பினை
என்ன தேடினாலும் எனக்குக் கிடைக்குமா...?
நல்லதைச் சொல்கிறாய்..
என் நலமே வேண்டினாய்..
எனக்கிருப்பது
ஒரே ஒரு உயிரென்று
முதன் முறையாய் வருந்துகின்றேன்...
உன் நட்புக்காய் உயிரிழக்கமாட்டேன்..
உயிரை இழந்தால்
உன்னை இழப்பேனே..
என் இனிய நண்பனே..
என்னுடன் என்றும் இரு..

நயவஞ்சக நட்பின் சொற்களில்
நம்பி மாண்டனன்..
நம்பியொருவன்...!

கீதம்
22-07-2012, 04:08 AM
நம்பிக்கையே வாழ்க்கை என்று ஒருபக்கம் பாடம் படிக்கிறோம். நம்பிக் கெட்டானென்று இன்னொருபக்கம் அனுபவத்தால் அறிகிறோம்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

என்பது எத்தனை அறிவுபூர்வமான உண்மை!

வாய்ச்சொல்லின் வகையறியாது வசமாய் சிக்கி, வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர்!

அத்தகையோரைப் பற்றிச் சொல்லி ஏனையோரை எச்சரிக்கும் கவிதை. பாராட்டுகள்.

கலைவேந்தன்
22-07-2012, 03:50 PM
தங்கள் பாராட்டுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கீதம்..!

jayanth
22-07-2012, 06:28 PM
நன்று...நன்று...!!!

கலைவேந்தன்
23-07-2012, 04:38 AM
நன்றி ... நன்றி...!!!

HEMA BALAJI
24-07-2012, 06:43 AM
விட்டில் பூச்சிகள் விருப்பப் பட்டே வீழ்கின்றனவோ?... கவிதைகள் அருமை கலை அண்ணா..