PDA

View Full Version : எதையுமே பாசிட்டிவாக!



M.Jagadeesan
21-07-2012, 10:19 AM
பாலெல்லாம் நீராக உள்ளதே எனநினைத்தால் வருத்தம்தான்
நீரிலே பால் உள்ளதே என நினைத்துப் பார்; நிம்மதி கிடைக்கும்.

அடங்காப் பிடாரி ஆத்துக்காரியாக அமைந்தாளே
என நினைத்து ஆதங்கம் கொள்ளாதே!
சிறியவீடு வைத்துக் கொண்டு சிறுமைப்படும்
அடுத்த வீட்டுக்காரனை நினைத்து ஆறுதல் கொள்.

நேர்முகத் தேர்விலே தோல்வி அடைந்ததை எண்ணித்
துவண்டு போகாதே! உன்னுடைய தோல்வியில்தான்
வேறொருவனுக்கு வேலை கிடைத்து அவன்வீட்டில்
விளக்கு எரிவதை எண்ணிப் பெருமைப்படு!

கரியநிறமும், கோரமுகமும் உள்ளவனாக என்னை
இறைவன் படைத்தானே என்று கோபம் கொள்ளாதே!
நாயாய் பேயாய் நரியாய் இல்லாமல்
பகுத்தறிவுள்ள மனிதனாகப் படைத்ததற்கு நன்றிசொல்.

காலன் உன்னைக் கைதட்டிக் கூப்பிடுகிறானே என்று
கவலை கொள்ளாதே! உன்னுடைய இறப்பில்
பூமித்தாய் சுமக்கும் எடையில் அறுபது கிலோ
குறையுமே என்று எண்ணி ஆறுதல் கொள்!

கீதம்
21-07-2012, 01:00 PM
இப்படி ஓர் எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உண்டானால் கழிவிரக்கத்துக்கும் கவலைகளுக்கும் இடமே இருக்காதே... மிகவும் அழகான அருமையான கருத்துக்கள். வாழ்க்கையின் சவால்களை சமாளிக்க உதவும் அற்புத யுக்தியும் கூட. பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
21-07-2012, 01:40 PM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

kulakkottan
31-07-2012, 04:59 AM
நல்ல கற்பனை நயம் !

இத்தகைய மன பக்குவம் உள்ளவன்
பால் ,மனைவி ,தொழில், தோற்ற்றம், வாழ்கை நாட மாட்டானே !

M.Jagadeesan
31-07-2012, 05:07 AM
குளக்கோட்டன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!!