PDA

View Full Version : தமிழ்மன்றக் கவியரங்கம்.. தாமரை தலைமையில்..!

கலைவேந்தன்
21-07-2012, 05:14 AM
அன்பார்ந்த மன்ற நண்பர்களே கவிஞர்களே ரசிகர்களே..

நம் மன்றத்தில் இதுவரை இல்லாத ஒரு கவியரங்கைத் தொடங்குவதில் உளம்மகிழ்கிறேன்.

கவியரங்கம்பற்றி கவிப்பெருமக்கள் அறிந்திருப்பர். ஒரு தலைப்பின் பல உபபிரிவுகளில் தலா ஒருவர் ஒரு தலைப்பில் கவிதைகள் அரங்கேற்றுவது.

நான் ஒரு தலைப்பும் உபதலைப்புகளும் தருகிறேன். யார் எந்த தலைப்பில் எழுதப்போகிறார்கள் என்பதை இங்கே வருகைதரும் கவிஞர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவசியப்பட்ட அவகாசத்தின் பின்னர் குறிப்பிட்ட நாளில் அனைவரும் ஒரே சமயத்தில் இங்கே பதிதல் வேண்டும்.

இது போட்டியல்ல. வெற்றி தோல்வி என்னும் கேள்விக்கே இடம் இல்லை.

ஐயம் எழுமாயின் அதற்கு தீர்வையும் இங்கே சேர்த்துக் கொள்வேன்.

தலைப்பையும் உபதலைப்புகளையும் இன்னும் பிற விவரங்களையும் அடுத்து பதிவில் தருகிறேன்.

கவிஞர்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

ஜான்
21-07-2012, 05:16 AM
கவியரங்கம் வருக வருக

ஆதி
21-07-2012, 05:20 AM
நான் கவிதை வாசிக்க தயார்

கீதம்
21-07-2012, 06:48 AM
மிகவும் நல்லதொரு முயற்சி. பாராட்டுகள் கலைவேந்தன் அவர்களே.

மன்றக் கவிகள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வாழ்த்துக்கள்.

அமரன்
21-07-2012, 10:30 AM
இப்படியான மயக்கச் சொல்லாடல் வேண்டாம்யா..

இங்கே நீங்கள் வாசிக்கப் போகிறீர்களா.. எழுதப் போகிறீர்களா..

நான் கவிதை வாசிக்க தயார்

அமரன்
21-07-2012, 10:31 AM
நல் முயற்சி கலை..

முன்பு இது போலப் பேசியதாக நினைவு. நீங்கள் செயல் வடிவம் கொடுக்க முன் வரும்போது மலர்வு.

aasaiajiith
21-07-2012, 12:01 PM
முயற்சியது வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

கலைவேந்தன்
21-07-2012, 03:30 PM
அன்பர்களின் ஆதரவும் பாராட்டும் ஊக்கமும் என்னை மேற்கொண்டு செயல்புரிய ஊக்குவிக்கின்றன.

முதல் கவியரங்கத்திற்கு தலைமை தாங்கிட தாமரை அவர்கள் இசைந்துள்ளார்கள்.

அடுத்த பதிவினில் தலைப்பையும் உபதலைப்பையும் அறிவிக்கின்றேன்.

கலைவேந்தன்
21-07-2012, 03:50 PM
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

தலைமை : திரு தாமரை அவர்கள்.

கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

உபதலைப்புகள் :

1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

3. தமக்கை................................. கலைவேந்தனின் தெரிவு

4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு

5. தமயன்

6. தனயன்

7. இல்லாள் ------------------------ஆதனின் தெரிவு.

8.இணையவன்......................... கீதமின் தெரிவு

9. தோழி ........................... புதுவை பிரபாவின் தெரிவு

10.மைத்துனன் ..........................சிவா.ஜி யின் தெரிவு

11. மகள்.....................................ராஜி சங்கர் தெரிவு

12. மருமகள்..............................கீழைநாடான் தெரிவு

13. பாட்டி ..................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

14. தாத்தா ................................ நாக சுந்தரத்தின் தெரிவு

15. காதலன்............................... ரீனாவின் தெரிவு

16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு

கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

கலைவேந்தன்
21-07-2012, 03:52 PM
நிர்வாகிகள் இத்திரியை உசிதம் எனக் கருதினால் ஒட்டியாக்கிவிட்டு இப்பதிவினை எடுத்துவிடவும்.

ஆதி
21-07-2012, 05:49 PM
இல்லாள் எனக்கு கொடுத்துடுங்க

ஆதி
21-07-2012, 05:51 PM
இப்படியான மயக்கச் சொல்லாடல் வேண்டாம்யா..

இங்கே நீங்கள் வாசிக்கப் போகிறீர்களா.. எழுதப் போகிறீர்களா..

ஒரு ஆர்வதில் பதிவு செய்துடேன் அமர் :D

கலைவேந்தன்
21-07-2012, 05:54 PM
இல்லாள் ஆதனுக்கு வழங்கப்படுகிறது..! ( இல்லான் வேண்டினில் இல்லாளும் வருவளன்றோ..? :) )

அமரன்
21-07-2012, 06:32 PM
விரைவில் வழங்கப்படட்டும்:)
இல்லாள் ஆதனுக்கு வழங்கப்படுகிறது..! ( இல்லான் வேண்டினில் இல்லாளும் வருவளன்றோ..? )

தாமரை
22-07-2012, 02:05 AM
இல்லாள் எனக்கு கொடுத்துடுங்க

தலைப்புச் செய்திகள் : இல்லாள் வேண்டி தமிழ் மன்றத்தில் ஆதன் ஆர்பாட்டம். :)

கீதம்
22-07-2012, 03:47 AM
சில சந்தேகங்கள்...

5. தனயன்
9.மைந்தன்

இரண்டும் ஒன்றல்லவா? வேறு உறவுக்கு இடம் கொடுக்கலாமே...

இந்தப் பட்டியலில் மாமியார், மாமனார், நாத்தனார் உறவுகள் இடம்பெறவில்லையே... ஊடாடி உதவமாட்டார்கள் என்ற எண்ணமா? :)

8. நண்பன் அல்லது தோழி என்று கொள்ளலாம் அல்லவா?

கீதம்
22-07-2012, 03:49 AM
இல்லாள் எனக்கு கொடுத்துடுங்க

வாழி ஆதன்! வாழி இல்லாள்!

விளைக கவியே! வளர்க மன்றம்! ;)

கலைவேந்தன்
22-07-2012, 03:54 AM
தலைப்புச் செய்திகள் : இல்லாள் வேண்டி தமிழ் மன்றத்தில் ஆதன் ஆர்பாட்டம். :)

விரிவான செய்திகள் பின்வருமாறு:

தமிழ்மன்றம், ஜூலை 22.

உலகத்தமிழர் போற்றும் தமிழ்மன்றம் புகழ்பெற்று விளங்குவது அறிந்ததே.

அதில் மிக அதிக உழைப்புடனும் அழகான விமரிசனங்களுடனும் ஆதன் பங்கு பெறுவதும் அறிந்ததே.

அந்த ஆதனுக்கு இன்னும் மணமாகவில்லை என்பதும் அறிந்ததே.

அவர் கவியரங்கத்தலைப்பின் வாயிலாக குறிப்பாக அனைவருக்கும் உணர்த்திய செய்திஎன்ன வென்றால் அவருக்கு ஓர் இல்லாள் வேண்டுமென வேண்டுகோள் விடுத்து பின்னர் அதற்காக ஆர்ப்பாட்டம் ஊர்வலம் கோஷங்கள் எழுப்பி தமிழ்மன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். ( இதெல்லாம் நீங்கள் அறியாததே.)

பின்னர் பிரத(ம)ர் அமர் மற்றும் உள்துறைச்செயலர் தாமரை வந்திருந்து ஆதனின் ஆர்ப்பாட்டத்தை சுமுகமாக முடித்துவைத்து அவரது வேண்டுகோளை நிறைவேற்றுமாறு வாக்களித்து பெண் தேடும் படலம் மும்முரமாக முப்புறமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

முன்னதாக கோக் கவி (அட கவிக்கோ தான்யா ) திருவாளர் கொலைவேந்தன் வரவேற்புக்கவிதை வாசித்து அனைவரது காதிலும் குருதி வரவழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர் செய்தி.

கலைவேந்தன்
22-07-2012, 03:56 AM
இப்போதே திருத்தம் செய்கிறேன் கீதம்..! கவிஞர்கள் எண்ணிக்கைக் கேற்ப மற்ற உறவுகளும் இணைக்கப்படும் கீதம்..! இப்போதைக்கு 12 கவிஞர்கள் சேரட்டுமே.. வேண்டுகோள் விடுப்பின் அத்தலைப்பினைச் சேர்க்கவும் செய்யலாம்.

கீதம்
22-07-2012, 04:18 AM

திருத்தங்களுக்கும் பரிசீலனைக்கும் மிகவும் நன்றி. விரைவில் என் தேர்வை வெளியிடுவேன்.

ஜானகி
22-07-2012, 04:40 AM
இல்லாதவளுக்கு...இத்தனை அமர்க்களமா......?

கலைவேந்தன்
22-07-2012, 04:43 AM
இல்லாதவளுக்கு...இத்தனை அமர்க்களமா......?

அதுதான் உலகம் ஜானகி.. இருப்பவர்களை விட இல்லாதவர்களைத்தான் கருத வேண்டும். :) இதுல அமர் களத்தில் இறங்கியதால் தான் இந்த அமர்க்களமே.. :)

மதி
23-07-2012, 04:55 AM
நல்லதொரு முயற்சி... கவியரங்கம் வெற்றி பெற வாழ்த்துகள்..! மன்றக் கவிகள் எங்கே???

இராஜிசங்கர்
23-07-2012, 07:05 AM
என்னையும் ஆட்டைல சேர்த்துக்கோங்கோ!!

rema
23-07-2012, 09:59 AM
தாய் என்னும் தலைப்பை நான் எடுத்துக்கொள்ளட்டுமா கலை அண்ணா ?

M.Jagadeesan
23-07-2012, 01:37 PM
ஊடாடி உதவும் உறவுகளில் நாளெல்லாம்
தேடோ தேடென்று தேடியே சலித்தேன்
பாட்டிஎனும் உறவு இல்லையே என்பதனைக்
காட்டவே இக்கவியை நானெழுது கின்றேன்.

கலையரசி
23-07-2012, 01:59 PM
ஊடாடி உதவும் உறவுகளில் நாளெல்லாம்
தேடோ தேடென்று தேடியே சலித்தேன்
பாட்டிஎனும் உறவு இல்லையே என்பதனைக்
காட்டவே இக்கவியை நானெழுது கின்றேன்.

பலரது மல்ரும் நினைவுகளில் பாட்டி உறவுக்கு முக்கிய இடமுண்டு. எனவே இந்த உறவு இல்லை என்ப்தைக் குறிப்பிட்டு எழுதிய ஜெகதீசன் அய்யா அவர்களுக்கு நன்றி.
எனக்குத் தந்தையை ஒதுக்க வேண்டுகிறேன்.

கலைவேந்தன்
23-07-2012, 02:20 PM
நல்லதொரு முயற்சி... கவியரங்கம் வெற்றி பெற வாழ்த்துகள்..! மன்றக் கவிகள் எங்கே???

நன்றி மதி. விரைவில் வருவார்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இத்திரி சூடு பிடிக்கும். நீடித்து நிலைக்கும்.

கலைவேந்தன்
23-07-2012, 02:22 PM
என்னையும் ஆட்டைல சேர்த்துக்கோங்கோ!!

தலைப்பைத்தேர்ந்தெடுத்து இங்கே சொல்லுங்க சீக்கிரம். தாய் மின்மினிக்கு போயிடுச்சு. தந்தையை கலையர்சி எடுத்துக்கிட்டாங்க.. பாட்டியை அழைச்சு வந்து ஜகதீசன் ஐயாக்கு தரப்போறேன். :)

உங்க விருப்பத்தை சீக்கிரமே சொல்லுங்க.

கலைவேந்தன்
23-07-2012, 02:27 PM
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

தலைமை : திரு தாமரை அவர்கள்.

கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

உபதலைப்புகள் :

1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

3. தமக்கை.

4. தமயன்

5. தனயன்

6. இல்லாள் ------------------------- ஆதனின் தெரிவு.

7.இணையவன்

8. நண்பன்

9. தோழி

10.மைத்துனன்

11. மகள்

12. மருமகள்

13. பாட்டி ....................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

14. தாத்தா

கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

கலைவேந்தன்
23-07-2012, 02:29 PM
இப்பட்டியலில் இல்லாத உறவுகளை நீங்கள் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்துக் கொண்டால் இணைத்துவிடுவேன் நண்பர்களே..

Hega
23-07-2012, 02:34 PM
நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துகள்.

கீதம்
24-07-2012, 04:03 AM
இணையவன் என் தேர்வு. :)

இராஜிசங்கர்
24-07-2012, 04:50 AM
தலைப்பைத்தேர்ந்தெடுத்து இங்கே சொல்லுங்க சீக்கிரம். தாய் மின்மினிக்கு போயிடுச்சு. தந்தையை கலையர்சி எடுத்துக்கிட்டாங்க.. பாட்டியை அழைச்சு வந்து ஜகதீசன் ஐயாக்கு தரப்போறேன். :)

உங்க விருப்பத்தை சீக்கிரமே சொல்லுங்க.

எனக்கு மகள் வேண்டும்

aasaiajiith
24-07-2012, 06:04 AM
" ஊடாடி வந்த உறவுகள் " கவியரங்கம் குறித்த
தலைப்புகளின் ஊடாலே, உலக காதலர்கள் தம்
ஊனாக ,உயிராக ,உயிரோடு உயிராக
உறவாடும் காதலின், உயிராய் விளங்கும்
"காதலி"யினை தலைப்பாய் இணைத்திடும் பட்சம்
பெரும் கவிகளோடு கைகோர்த்திட வழியின்றியும்
கைபிடித்தபடி, இந்த கத்துக்குட்டி கவிஞனும்
களம் காண்பேன் என் கிறுக்கல்களோடு .....

காத்திருப்பு பட்டியலில் என் " காதலி "

கீதம்
26-07-2012, 03:28 AM
இணையவன் என் தேர்வு. :)

எனக்கு மகள் வேண்டும்

காத்திருப்பு பட்டியலில் என் " காதலி "

எங்களுடைய தெரிவுகள் யாவும் ஏற்புடையவைதாமே, கலைவேந்தரே?

ஆதி
26-07-2012, 02:22 PM
தலைப்புச் செய்திகள் : இல்லாள் வேண்டி தமிழ் மன்றத்தில் ஆதன் ஆர்பாட்டம். :)

ஹாஹ்ஹா

படித்தவுடன் வெடித்து சிரித்துவிட்டேன் அண்ணா

கலைவேந்தன்
26-07-2012, 03:06 PM
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

தலைமை : திரு தாமரை அவர்கள்.

கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

உபதலைப்புகள் :

1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

3. தமக்கை.

4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு

5. தமயன்

6. தனயன்

7. இல்லாள் -------------------------ஆதனின் தெரிவு.

8.இணையவன்......................... கீதமின் தெரிவு

9. தோழி

10.மைத்துனன்

11. மகள்.................................ராஜி சங்கர் தெரிவு

12. மருமகள்

13. பாட்டி ....................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

14. தாத்தா

15. காதலன்

16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு

கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

Hega
27-07-2012, 10:17 PM
கவியரங்கம் களை கட்டட்டும்.

HEMA BALAJI
28-07-2012, 06:53 AM
தலைப்புச் செய்திகள் : இல்லாள் வேண்டி தமிழ் மன்றத்தில் ஆதன் ஆர்பாட்டம். :)

ஹா ஹா ஹா இது சூப்பர்.:)

லேட்டாக வந்து லேட்டாகப் பார்த்ததாலும் இல்லாள் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து, ஆதன் இல்லாளை எனக்கு இல்லாதவளாக்கிவிட்டதாலும் படித்து ரசிக்க நானும் ரெடி.

aasaiajiith
28-07-2012, 07:04 AM
என்ன ?? ரசிக்க மட்டும் தயாரா ??
தலைப்பை தெரிவு செய்யவில்லையா ?? ஹேமா பாலாஜி ??

ஆதி
28-07-2012, 07:54 AM
விரிவான செய்திகள் பின்வருமாறு:

தமிழ்மன்றம், ஜூலை 22.

உலகத்தமிழர் போற்றும் தமிழ்மன்றம் புகழ்பெற்று விளங்குவது அறிந்ததே.

அதில் மிக அதிக உழைப்புடனும் அழகான விமரிசனங்களுடனும் ஆதன் பங்கு பெறுவதும் அறிந்ததே.

அந்த ஆதனுக்கு இன்னும் மணமாகவில்லை என்பதும் அறிந்ததே.

அவர் கவியரங்கத்தலைப்பின் வாயிலாக குறிப்பாக அனைவருக்கும் உணர்த்திய செய்திஎன்ன வென்றால் அவருக்கு ஓர் இல்லாள் வேண்டுமென வேண்டுகோள் விடுத்து பின்னர் அதற்காக ஆர்ப்பாட்டம் ஊர்வலம் கோஷங்கள் எழுப்பி தமிழ்மன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். ( இதெல்லாம் நீங்கள் அறியாததே.)

பின்னர் பிரத(ம)ர் அமர் மற்றும் உள்துறைச்செயலர் தாமரை வந்திருந்து ஆதனின் ஆர்ப்பாட்டத்தை சுமுகமாக முடித்துவைத்து அவரது வேண்டுகோளை நிறைவேற்றுமாறு வாக்களித்து பெண் தேடும் படலம் மும்முரமாக முப்புறமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

முன்னதாக கோக் கவி (அட கவிக்கோ தான்யா ) திருவாளர் கொலைவேந்தன் வரவேற்புக்கவிதை வாசித்து அனைவரது காதிலும் குருதி வரவழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராய்ட்டர் செய்தி.

வாழி ஆதன்! வாழி இல்லாள்!

விளைக கவியே! வளர்க மன்றம்! ;)

இல்லாதவளுக்கு...இத்தனை அமர்க்களமா......?

அதுதான் உலகம் ஜானகி.. இருப்பவர்களை விட இல்லாதவர்களைத்தான் கருத வேண்டும். :) இதுல அமர் களத்தில் இறங்கியதால் தான் இந்த அமர்க்களமே.. :)

ஹா ஹா ஹா இது சூப்பர்.:)

லேட்டாக வந்து லேட்டாகப் பார்த்ததாலும் இல்லாள் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்து, ஆதன் இல்லாளை எனக்கு இல்லாதவளாக்கிவிட்டதாலும் படித்து ரசிக்க நானும் ரெடி.

கவியரங்க தலைப்பிலேயே நான் எடுத்ததுதான் சரி

ஹி.. ஹி..

எப்படினு சொல்றேன் பாருங்க

கவியரங்க தலைப்பு ஊடாடி உதவும் உறவு

நம்ம ஊரு சென்னை, சென்னை தமிழில் "ஊடு" என்றால் வீடு என்று பொருள்

ஆடி = ஆடல்,ஆட்டுதல், கண்ணாடி, ஆட்சி, மாதம்

ஆட்சியின் வேர் ஆள்

வீட்டை ஆண்டு உதவும் உறவு

வீடு ஆடி = வீட்டின் நிலை கண்ணாடி

வீட்டின் நிலைக்கண்ணாடிக்கு தான் நம் முழுமை தெரியும், நல்ல கெட்ட என்று எல்லாவற்றையும் அது பார்த்தும், யாருக்கும் வெளி சொல்லாமல் நம்மை காக்கிறது

மனையாளும் அப்படித்தான் இல்லையா ?

ஆடி = கண்ணாடி

வீட்டின் கண்ணாடியாய் இருப்பவள், வீட்டை பிரதிபளிப்பவளே அவள் தானே

வீட்டின் கண் ஆடி, வீடே தன் உலகம், அதனில் உள்ள நல்ல கெட்ட என்பது ஏற்க ஆடுபவள்

வீடு என்பதை உடம்பாக கொண்டால்

ஆடி என்பது மனசாட்சி, இல்லாள் தானே நம் மனசாட்சியாகவும் நாமாகவுமே இருக்கிறாள்

இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா :D

M.Jagadeesan
28-07-2012, 08:55 AM
நண்பன், தோழி, காதலன், காதலி இவைகளெல்லாம் குடும்ப உறவுகள் ஆகுமா?

aasaiajiith
28-07-2012, 11:34 AM
நண்பன், தோழி, காதலன், காதலி இவைகளெல்லாம் குடும்ப உறவுகள் ஆகுமா?

எந்தன் சிற்றறிவிர்க்கு எட்டியவரை,
கவியரங்க துவக்கம் குறித்த தகவலின்
ஆரம்பம் முதற்கொண்டு,ஐய்யா ! ,இதோ உங்கள் கேள்வியின் கேள்விக்குறி வரை
குடும்பம் என அடிக்கோடிடப்பட்டிருப்பது
தற்பொழுது உங்கள் பதிப்பினில் மட்டும் தான் என நினைக்கின்றேன் ???

கலைவேந்தன்
28-07-2012, 02:43 PM
உறவுகள் என்ற வகையில் மனித உறவுகளாகத்தான் அனைத்து உறவுகளையும் கொண்டோம் ஐயா.. எனவே நண்பர்கள் காதலர்களும் உறவுகளே..

கவிஞர் பெருமக்கள் எஞ்சியிருக்கும் தலைப்புகளைத் தெரிவு செய்து கவிதைகளை எழுதத்தயாராகுங்கள்..

ஹேமா பாலாஜி அவர்களே.. நீங்களும் ஒரு தலைப்பினை எடுத்துக்கொள்ல வேண்டுகோள் விடுக்கிறேன்.

இன்னும் மன்றக்கவிஞர்கள் கண்களில் இத்திரி படவில்லையோ என்னவோ..?

எவரும் தெரிவு செய்யவில்லை எனில் தமக்கையையோ தங்கையையோ தாத்தாவையோ யான் எடுக்கலாம் என எண்ணுகிறேன்.

ரௌத்திரன்
28-07-2012, 04:51 PM
"தங்கை" என்ற உறவை "ரெளத்திரன்" தேர்வு செய்கிறேன் கலைவேந்தன் அவர்களே!

----------ரெளத்திரன்

கலைவேந்தன்
29-07-2012, 03:05 AM
அவ்வண்ணமே ஆகட்டும் ரௌத்திரன்..

Keelai Naadaan
29-07-2012, 03:15 AM
நண்பர்களே எனக்கு கவிதை எழுதி பழக்கமில்லை. பொருத்தமான வார்த்தைகளை அழகாய் கோர்த்து..!!! கவிதை பெரிய கலை!

ஆனாலும் மயிலை பார்த்து வான்கோழி ஆடுவது போல் நம் கவிஞர் பெருமக்களை பார்த்து எனக்கும் பங்கு பெற ஆவல். (கவிஞர் பெருமக்ககள் பொருத்தருள்க)

"மருமகள்" என்ற உறவை நான் தேர்வு செய்கிறேன் கலைவேந்தன் அவர்களே.

கலைவேந்தன்
29-07-2012, 03:36 AM
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

தலைமை : திரு தாமரை அவர்கள்.

கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

உபதலைப்புகள் :

1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

3. தமக்கை................................. கலைவேந்தனின் தெரிவு

4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு

5. தமயன்

6. தனயன்

7. இல்லாள் ------------------------ஆதனின் தெரிவு.

8.இணையவன்......................... கீதமின் தெரிவு

9. தோழி ........................... புதுவை பிரபாவின் தெரிவு

10.மைத்துனன் ..........................சிவா.ஜி யின் தெரிவு

11. மகள்.....................................ராஜி சங்கர் தெரிவு

12. மருமகள்..............................கீழைநாடான் தெரிவு

13. பாட்டி ..................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

14. தாத்தா ................................ நாக சுந்தரத்தின் தெரிவு

15. காதலன்............................... ரீனாவின் தெரிவு

16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு

கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

கலைவேந்தன்
29-07-2012, 03:53 AM
இன்னும் ஏழு தலைப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றினை நான் தெரிவுசெய்தாலும் ஆறுதலைப்புகள் எஞ்சியுள்ளன. கவிஞர்கள் விரைவில் தலைப்பினைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.ஆகஸ்ட் மாத முதல் வாரத்திலிருந்து கவியரங்கக்கவிதைகள் பதியக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.

ஆகஸ்ட் முதல் நாளில் தலைவர் தாமரை முன்மொழிந்து கவியரங்கத்தைத் தொடங்கிவைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்துங்கள் கவிஞர்களே..

PUTHUVAI PRABA
30-07-2012, 06:59 AM
தோழி என்ற உறவை தேர்வு செய்துகொள்கிறேன்.

புதுவைப்பிரபா

சிவா.ஜி
30-07-2012, 01:20 PM
நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்கள் கலை. நான் மன்றம் வராதிருந்த நாட்களில் அறிவிப்பு வந்ததால்...இல்லாளை எடுக்க விரும்பியவனுக்கு கிடைக்கவில்லை...ஆர்ப்பாட்டம் செய்து ஆதன் அவருடையதாக்கிக் கொண்டார். வாழ்க வளமுடன்.

ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தை வாசித்தபின் இல்லாள் கிடைக்காததும் நல்லதுதான் என நினைத்துக் கொண்டேன்.

ஊடாடி உதவும் உறவுகள் என்பதில் அந்த ஊடும்...ஆடும்தான் பயமுறுத்துகிறது. சென்னைத் தமிழில் ஊடு கட்டி அடிப்பதை நினைத்து கொஞ்சம் அச்சப்படவே செய்தேன். அதுவும் இல்லாள் இதில் சிறந்தவர்(ஊடு கட்டி அடிப்பதில்....வடிவேலு-சரளா நினைவுக்கு வருகிறார்கள்)

நான் மைத்துனனை தேர்வு செய்கிறேன்( மன்றக் கவிஞர்கள் மத்தியில் பூவோடு நாராய் நானும் கொஞ்சம் மணக்க முயற்சிக்கிறேன்)

எனது தேர்வு= மைத்துனன்

சுகந்தப்ரீதன்
30-07-2012, 01:56 PM
அடடா... கடைசி நிமிடத்துல புகைவண்டியை தவறவிட்ட கதையா போச்சே... பிடிச்ச உறவையெல்லாம் நம் மன்ற உறவுகள் பிடிச்சிகிட்டு போயிட்டாங்களே..?!:)

ஆமாங்க... நான் ஏதோ கவிதைபோட்டின்னு நினைச்சி இந்ததிரிக்குள்ள கால்வைக்காம இருந்துட்டேன்... இப்ப உள்ள வந்து பார்த்தாதான் தெரியுது.. இது கலையண்ணாவின் கலைவடிவம்ன்னு...!!:icon_b:

கவியரங்கத்தில் புதுவைபிரபா வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்... ஏன்னு கேட்குறீங்களா.... நான் அந்த உறவை தேர்ந்தெடுத்துதான் ஒவ்வொரு பக்கமாக கடந்து வந்தேன்... கடைசி பக்கத்தில் பார்த்தால் அதை பிரபா எடுத்துகிட்டு போயிட்டாங்க... அதனாலதான் கடுப்புல அவங்கள வாழ்த்துறேனாக்கும்..!!:lachen001::lachen001:

reena
30-07-2012, 04:37 PM
காதலன் என்ற தலைப்பில் வரிகளை எழுத விரும்பி ..அந்த தலைப்பை தேர்வு செய்கிறேன்...

நாகசுந்தரம்
30-07-2012, 04:59 PM
14. தாத்தா என்ற தலைப்பில் வரிகளை எழுத விரும்பி ..அந்த தலைப்பை தேர்வு செய்கிறேன்...நன்றி

PUTHUVAI PRABA
30-07-2012, 05:32 PM
கவியரங்கத்தில் புதுவைபிரபா வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்... ஏன்னு கேட்குறீங்களா.... நான் அந்த உறவை தேர்ந்தெடுத்துதான் ஒவ்வொரு பக்கமாக கடந்து வந்தேன்... கடைசி பக்கத்தில் பார்த்தால் அதை பிரபா எடுத்துகிட்டு போயிட்டாங்க... அதனாலதான் கடுப்புல அவங்கள வாழ்த்துறேனாக்கும்..!!

அச்சச்சச்சோ....
நான் இந்த திரிக்குள்ள வந்ததே லேட்டு. எனக்கு பின்னாடி வந்துட்டு ....இப்படி கடுப்பாவலாமா? எப்படியோ முதல் வாழ்த்துக்கு சுகந்தப்ரீதன் அவர்களுக்கு நன்றி!!!

ஆதி
31-07-2012, 11:23 AM
நாளை வந்து நாயகன் எந்த
ஆளை அழைப்பார் அருங்கவி பதிக்க ?

தலைப்பு வரிசைக்கு தக்கன* போன்றா ?
தலைப்பு விரும்பியோர்க்கு தகுந்தாற் போன்றா ?

வாராமல் இருந்தாலும் வடிவறியா அவ்வணங்கை
தீராத ஆசையாலே சிறுகவிஞன் அழைத்து
சீராக கவிதையிலே செறிவோடு சேர்த்து
தேராக சோடித்து திருக்கோலம் புனைந்துவிட....

மெல்லான பார்வையாலே மெதுவெதுவாய் எனைசாய்த்து
தள்ளாடும் போதையிலே சகலத்தையும் கரைத்துவிடும்
இல்லாளுக்கு முதலாளாய் இடமிட்ட என்னைத்தான்
சொல்லாளும் வேந்தன் துவங்குக!கவி எனச்சொன்னால்!!

கல்யாணம் ஆகாத கன்னிமகன் என்னசெய்வேன்
கல்லாத வாழ்வைபற்றி எப்படித்தான் கவிசெய்வேன்
கல்யாணம் ஆகிவிட்ட கணவன்மாரே கொஞ்சமெனக்கு
கல்யாணம் வாழ்வைபற்றி கற்றுத்தாரும் என்று
செல்லாத யோசனையை செய்திடவா முடியும்!!
மல்லாந்து படுத்துகொஞ்ச/சும் மதுமேனி பாவையவளை
உள்ளார்ந்து யோசித்தொரு உயர்வான சிந்தனையால்
தெள்ளார்ந்த வார்ர்த்தையோடு திரவியத்தை பாடவேண்டும்

நோமலரை பாடிடயெனை அழைப்பதாய் இருந்தால்
கோமகனே! கோமலரே! கூறிவிடும் முன்பே!!!!

நோமலர் = ஆங்கில 'நோ' என கொள்க :)

கீதம்
31-07-2012, 12:56 PM
இல்லாள் எனத் தெரிந்தும்
இல்லாளைத் தெரிந்தவரே...

கல்லா மாணவனைப் போல
பொல்லாக்கவலை கொண்டதேன்?

வீட்டுப்பாடம் செய்யாமல் இத்தனை நாள்
விட்டம் வெறித்துப் பார்த்திருந்தீரோ?

நன்னாள் ஒன்றில் நனிமகிழ்வாள்
நல்லாள் என்றே அகம் நனைக!

இல்லாளுக்கேற்ற இல்லானாய்
சொல்லாள வருக! சுவைமிகு கவி தருக!

கலைவேந்தன்
31-07-2012, 01:42 PM
தனயனும் தமையனும் மட்டுமே எஞ்சியுள்ளனர்... அவரைத்தேர்ந்தெடுப்பாருளரோ..? புது உறவினை வேண்டுவோரும் உளரோ..? எவ்விதமாயினும் நாளை முதல் தாமரை அவர்களின் முன்னுரைவரிகளோடு கவியரங்கத்தைத் தொடங்கி வைக்கலாமே..

தலைவராக தாமரை அவர்களுக்கு முகமன் கூறி முதலில் வரவேற்று கவிதை ஒன்றினை நான் படைக்கிறேன். வேறெவரும் வரவேற்பதெனினும் வரவேற்புகளே..

கலைவேந்தன்
31-07-2012, 01:53 PM
நாளை வந்து நாயகன் எந்த
ஆளை அழைப்பார் அருங்கவி பதிக்க ?

தலைப்பு வரிசைக்கு தக்கன* போன்றா ?
தலைப்பு விரும்பியோர்க்கு தகுந்தாற் போன்றா ?

வாராமல் இருந்தாலும் வடிவறியா அவ்வணங்கை
தீராத ஆசையாலே சிறுகவிஞன் அழைத்து
சீராக கவிதையிலே செறிவோடு சேர்த்து
தேராக சோடித்து திருக்கோலம் புனைந்துவிட....

மெல்லான பார்வையாலே மெதுவெதுவாய் எனைசாய்த்து
தள்ளாடும் போதையிலே சகலத்தையும் கரைத்துவிடும்
இல்லாளுக்கு முதலாளாய் இடமிட்ட என்னைத்தான்
சொல்லாளும் வேந்தன் துவங்குக!கவி எனச்சொன்னால்!!

கல்யாணம் ஆகாத கன்னிமகன் என்னசெய்வேன்
கல்லாத வாழ்வைபற்றி எப்படித்தான் கவிசெய்வேன்
கல்யாணம் ஆகிவிட்ட கணவன்மாரே கொஞ்சமெனக்கு
கல்யாணம் வாழ்வைபற்றி கற்றுத்தாரும் என்று
செல்லாத யோசனையை செய்திடவா முடியும்!!
மல்லாந்து படுத்துகொஞ்ச/சும் மதுமேனி பாவையவளை
உள்ளார்ந்து யோசித்தொரு உயர்வான சிந்தனையால்
தெள்ளார்ந்த வார்ர்த்தையோடு திரவியத்தை பாடவேண்டும்

நோமலரை பாடிடயெனை அழைப்பதாய் இருந்தால்
கோமகனே! கோமலரே! கூறிவிடும் முன்பே!!!!

நோமலர் = ஆங்கில 'நோ' என கொள்க :)

இல்லாளைத் தேர்ந்தெடுக்க இல்லாத ஆட்டமிட்டு
பொல்லாத பிள்ளைபோல் பிடிவாதம் தனைச்செய்து
வல்லமை கொண்ட வாக்குவாதம் செய்துபல
செல்லப் பிள்ளையாய் தேர்ந்தெடுத்த செல்லமே..

கவிதைக்கொட்டிட குறையேதும் உளதோ உன்
செவிவழிக்கதைகள் பலகேட்டு வியந்தனன் யான்
புவியதில் இவ்வயதில் புதுமையாய்ப் பிறந்தவன் நீ
தவித்திடும் தமிழுக்கு நலமான வரமதும் நீ..

நிற்க..

எவ்வரிசையும் இங்கே ஏற்புடையதாம்..
செவ்வன சிந்தித்து கவியாக்கும் கவிஞர்தம்
மெவ்விய வரிகளை மெல்லவே பதிந்திடலாம்.
கவ்விடும் கருத்துகள் களம்காண ஆவலுடன்..

இம்மன்றப் பெருமக்கள் இலக்கினை நோக்கிநின்றோம்
தம்தமிழ்க் கவிகளதைத் தயங்காது அளித்திடுங்கள்
எம்மிரு கரங்கள் விரித்தபடி சேர்த்தணைப்போம்..
செம்மொழிப் பயிலரங்கே இது பந்தயக்களமன்று..!

ஐயம் தெளிந்ததா ஞானப்பால் உண்டவனே..?

மதி
31-07-2012, 02:10 PM
நாளை வந்து நாயகன் எந்த
ஆளை அழைப்பார் அருங்கவி பதிக்க ?

தலைப்பு வரிசைக்கு தக்கன* போன்றா ?
தலைப்பு விரும்பியோர்க்கு தகுந்தாற் போன்றா ?

வாராமல் இருந்தாலும் வடிவறியா அவ்வணங்கை
தீராத ஆசையாலே சிறுகவிஞன் அழைத்து
சீராக கவிதையிலே செறிவோடு சேர்த்து
தேராக சோடித்து திருக்கோலம் புனைந்துவிட....

மெல்லான பார்வையாலே மெதுவெதுவாய் எனைசாய்த்து
தள்ளாடும் போதையிலே சகலத்தையும் கரைத்துவிடும்
இல்லாளுக்கு முதலாளாய் இடமிட்ட என்னைத்தான்
சொல்லாளும் வேந்தன் துவங்குக!கவி எனச்சொன்னால்!!

கல்யாணம் ஆகாத கன்னிமகன் என்னசெய்வேன்
கல்லாத வாழ்வைபற்றி எப்படித்தான் கவிசெய்வேன்
கல்யாணம் ஆகிவிட்ட கணவன்மாரே கொஞ்சமெனக்கு
கல்யாணம் வாழ்வைபற்றி கற்றுத்தாரும் என்று
செல்லாத யோசனையை செய்திடவா முடியும்!!
மல்லாந்து படுத்துகொஞ்ச/சும் மதுமேனி பாவையவளை
உள்ளார்ந்து யோசித்தொரு உயர்வான சிந்தனையால்
தெள்ளார்ந்த வார்ர்த்தையோடு திரவியத்தை பாடவேண்டும்

நோமலரை பாடிடயெனை அழைப்பதாய் இருந்தால்
கோமகனே! கோமலரே! கூறிவிடும் முன்பே!!!!

நோமலர் = ஆங்கில 'நோ' என கொள்க :)
ஏன் இந்த வேண்டாத வம்பு... உள்ளேன் என்று வந்துவிடப்போகிறார் நாரதர்..

நாராயண...!!

கலைவேந்தன்
31-07-2012, 02:13 PM
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

தலைமை : திரு தாமரை அவர்கள்.

கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

உபதலைப்புகள் :

1. தாய். ......................................மின்மினியின் தெரிவு.

2. தந்தை....................................கலையரசியின் தெரிவு

3. தமக்கை................................. கலைவேந்தனின் தெரிவு

4. தங்கை...................................ரௌத்திரன் தெரிவு

5. தமயன்

6. தனயன்

7. இல்லாள் ------------------------ஆதனின் தெரிவு.

8.இணையவன்......................... கீதமின் தெரிவு

9. தோழி ........................... புதுவை பிரபாவின் தெரிவு

10.மைத்துனன் ..........................சிவா.ஜி யின் தெரிவு

11. மகள்.....................................ராஜி சங்கர் தெரிவு

12. மருமகள்..............................கீழைநாடான் தெரிவு

13. பாட்டி ..................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

14. தாத்தா ................................ நாக சுந்தரத்தின் தெரிவு

15. காதலன்............................... ரீனாவின் தெரிவு

16 .காதலி...................................ஆசைஅஜீத் தெரிவு

கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

தாமரை
31-07-2012, 04:59 PM
இரு பொருளிடை ஈர்ப்பு விசை
"நிறை"க்கு "நேராம்"
"நின்ற தூரத்தின் வர்க்கத்திற்கு"
"எதிராம்"...

ஆப்பிள் விழக் கண்டு
ஆராய்ந்தவனின் கணக்கு இது

உயிரில்லா ஈர்ப்பினைக்
கணக்குகள் கணித்து விடலாம்

உயிர்கொண்ட ஈர்ப்பதுவோ
வரையறைகளில் அடங்குவதில்லை
வார்த்தைகளிலும் அடங்குவதில்லை.

நிறையின்றி ஈர்ப்பில்லை அங்கே
ஈர்ப்பின்றி நிறையில்லை இங்கே
தூரம் இங்கே
ஈர்ப்பை இன்னும் பெருக்கும்

உறவென்ற சொல்லிற்கு
தொடர்பென்று
பட்டும் படாமல் ஒரு
பொருளுண்டு

உறவென்ற சொல்லிற்கு
தொடர்பில்லா பொருளோ
ஒனறுமே இல்லை

உறவாலே பிறந்தோம்
உறவாலே வளர்ந்தோம் வாழ்ந்தோம்
உறவினையே வளர்த்தோம்

வரும்முன்னும்
வந்திருந்த போதும்
செல்லும்போதும்
சென்ற பிறகும்
இருப்பது ஒன்றுதான்
உறவு

உறவும் பிறவும்
பிறவும் பிறவும்
உறவென உறவ
பிறவும் உறவும்

அத்தனை உறவிலும் முதலுறவு
அன்னையெனும் நல்லுறவு
நாம்
ஓரணுவாய் இருந்தது முதல்
அணு அணுவாய் தாங்குபவள்

அவளிலிருந்தே தொடங்கினோம்
அங்கிருந்தே தொடங்கலாம்

அன்னையின் புகழ்பாட
அழைக்கின்றேன் மின்மினியை!!!

M.Jagadeesan
01-08-2012, 07:59 AM
பாட்டி
வயதான கிழவன் என்கின்ற காரணத்தால்
வயதான பாட்டியை என்தலையில் கட்டிவிட்ட
கலைவேந்தன் அவர்கட்கு நன்றியைத் தெரிவித்துத்
தலைநரைத்த பாட்டியின் கதைசொல்ல முனைகின்றேன்.

தாமரையே! பல்கலையே! கவியரங்கத் தலைமகனே!
யாமறிந்த உறவுகளில் பாட்டியின் உறவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை-இது உண்மை!
எங்கள் பாட்டிக்கு எழுபது வயதிருக்கும்
தங்கநிற மேனியில் தகதகத்து ஜொலித்திடுவாள்
அங்கமெல்லாம் சுருக்கம் ஆனாலும் தளர்வில்லை
கொங்குதமிழ் பேசுவாள்;கொதப்புவாள் வெற்றிலையை
வெண்ணிற சேலையுடன் இரவிக்கை இருசோடி
கண்ணிலே அணிவதற்கு மூக்குக் கண்ணாடி
இடுப்பிலே சுருக்குப்பை அதில்கொஞ்சம் சில்லரை
படுப்பதற்குக் கந்தல்பாய்; இடிப்பதற்குக் கல்லுரல்
நடப்பதற்குக் கைத்தடி; காதிலே செவிட்டுமெஷின்
அடங்கியது இவ்வளவே பாட்டியின் சொத்தெல்லாம்.

நீட்டியகால் நீட்டியபடி சுவற்றோரம் அமர்ந்திருப்பாள்
வீட்டிலுள்ள அனைவருக்கும் விடுகதைகள் வைத்திடுவாள்
கைநாட்டு என்றாலும் காவியங்கள் அத்துபடி
வீரர்தம் வரலாற்றை விரல்நுனியில் வைத்திருப்பாள்
அம்புலிமாமா கதை சொல்லி மகிழ்ந்திடுவாள்
வெம்புலியை தமிழச்சி விரட்டிய கதைசொல்வாள்
திங்களில் ஒருபாட்டி தினமும் வடைசுட்டு
அங்கிருக்கும் மக்களுக்கு விற்கின்ற கதைசொல்வாள்
நான்கெருது கதைசொல்லி ஒற்றுமையை வலியுறுத்தி
முயலாமை கதைசொல்லி முயற்சிக்கு வித்திடுவாள்.
நாட்டுப்புறக் கதையெல்லாம் நயத்தகு இசையினிலே
நீட்டி முழக்கியே பாட்டினிலே வைத்திடுவாள்

வாட்டி வதைக்கின்ற காய்ச்சல் இருமலுக்கு
பாட்டி வைத்தியம் கைகண்ட தீர்வாகும்
மூட்டு வலியென்றால் முடக்கத்தான் கீரையை
துவையல் அரைத்தே துயரம் போக்கிடுவாள்
நாவல் கொட்டையை இடித்துத் தூளாக்கி
பாகற் காயுடனே தினமும் உண்டுவர
போகும் சர்க்கரை பொருட் செலவின்றியே!
ஆங்கில வைத்தியத்தில் ஆயிரம் செலவிடுவார்
ஆனாலும் குணமில்லை; பக்க விளைவுண்டு
பாட்டி வைத்தியமோ ! பழங்கால வைத்தியம்!
தோட்டி முதலாகத் தொண்டைமான் ஈறாக
நாட்டிலுள்ள அனைவருக்கும் நலம்பயக்கும் வைத்தியம்.

அன்பு காட்டுவதில் அவளோர் அன்னை
அறிவு புகட்டுவதில் அவளோர் ஆசான்
கருணை உள்ளமோ கடலினும் பெரிது
தெருவிலே வீட்டின்முன் யாசகன் கூட
" அம்மா! தாயே!!" எனப்பிச்சைக் கேட்காமல்
" பாட்டி! பெரியம்மா!" என்றே கேட்டிடுவான்!
பஞ்சுமிட்டாய் விற்பவன் தெருவிலே சென்றால்
கெஞ்சுகின்ற பேரனுக்கு வாங்கியே தந்திடுவாள்!
வீட்டிலுள்ள பூனைநாய் கிளியும் கூட
பாட்டி கொடுத்தால்தான் பசியாற உண்ணும்.

எங்கள் குலதெய்வம் தங்கம்மா பாட்டியை
காலன் ஒருநாள் கைதட்டி அழைத்தான்
வயிற்றுப் போக்கின் வடிவிலே வந்தான்
வைத்தியருக்குச் சொல்ல அவரும் வந்தார்
நாடியைப் பிடித்தவர் ; உதட்டைப் பிதுக்க
எல்லாம் முடிந்தது ; தெய்வமும் சென்றது.

இன்று பாட்டியின் நினைவு தினம்.

பாட்டி மறைந்து ஆண்டுகள் பலவானாலும்
பாட்டியின் நினைவு என்றுமே நிலைத்திருக்கும்
வெள்ளைச் சேலையில், வெள்ளை ரவிக்கையில்
கள்ளமற்ற சிரிப்பில் காண்கின்ற எல்லோரும்
எங்கள் பாட்டியாகவே எனக்குத் தோன்றும்!

கலைவேந்தன்
01-08-2012, 01:59 PM
அழகிய தமிழில் அறிமுகப்பாத் தொடுத்து
விழவினைத் துவக்கிய தலைமையின் உரைதனை
அருந்தே னடையை ஆர்வமுடன் மாந்திடும்
செருவதன் மந்தியை அன்னதாய் ரசித்தோம்..

அகரத்தில் மட்டுமன்றி இகத்தினில் முதலாம்
சிகரமாம் அன்னையின் கவிதொடுக்க அழைத்து
முகவரி வழங்கி முத்தமிழ் முழங்கிய
தகவுறும் தலைவருக்கு தக்கதோர் நன்றி..!

கலைவேந்தன்
01-08-2012, 02:20 PM
இவ்வுலகு தோற்றம் எவ்வகை யென்றே
எவ்வளவு ஆய்ந்தும் அறிகிலன் மனிதன்
எத்தனை அவனறிந் தனனெனப் பகிர்ந்தால்
அத்தனை உயிரும் அன்னையின் ஆதியாம்

அவளன்றி யோரணுவும் இங்கில்லை
அவளே ஆதி அவளே மீதியும்..
அன்னையை வணங்கிடில் ஆண்டவன் அருள்மிகும்
என்னவெல்லாமோ முன்னோர் பகிர்ந்தனர்..

அன்னையின் முதலாம் பாசமது உண்மை
அதனிலும் அதிகம் பாட்டியின் நேசம்
அவளொரு நடையிடும் பல்கலைக் கழகம்
இதனைப் பகிரந்தார் எம் ஜகதீசன்..!

அன்னாரது கவிதை மழையினில் நனைந்தோம்
அன்னையின் அன்னையோ அத்தனின் அன்னையோ
பாசத்தின் சிகரம் பாட்டியே என்றே
பாங்காய்ப் பகிர்ந்தனை ஜகதீசனைய்யா..

பாட்டியின் பாசம் பட்டறிந்திடேன் யான்
அன்னையின் நேசமும் அறிந்திலன் யானே..
வாட்டிய சோகமும் வடிந்தது பாட்டினில்
பாட்டினில் பாட்டியைக் காட்டினார் பாவலன்.

ஜகதீசர் ஐயாவின் சித்திரம் கண்டபின்
அகமகிழ்ந் தனன்யான் செந்தமிழ்ப் பருகியே
கவியரங் கதனுக் கணியாய் கவிமழை
பொழிந்த நல் ஆசானை போற்றியே அமைகிறேன்..!

Keelai Naadaan
01-08-2012, 02:52 PM
அருமை ஜெகதீசன் ஐயா.. அருமை.

தங்களின் தமிழ் பாட்டும் அருமை.
பாட்டியின் குணங்களை சொன்ன விதமும் அருமை.

பாட்டியை பற்றி சொல்லும் போது ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.

அங்கமெல்லாம் சோர்ந்து அமர்ந்து விட்டாலும்
தங்கமான குழந்தைகளுக்கு தாலாட்டு பாடிடுவாள் பாட்டி

இனி எந்த சென்மத்தில் கேட்போம் அந்த
வேற்று மொழி கலக்காத தங்க தமிழை..
இப்போதெல்லாம் வீடுகளில் பாட்டிகளுக்கு மட்டும் தான் பாட தெரிந்திருக்கிறது தாலாட்டு. அவர்கள் காலத்துக்கு பிறகு ...?

M.Jagadeesan
02-08-2012, 05:35 AM
கலைவேந்தன், கீழைநாடான் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

ரௌத்திரன்
02-08-2012, 11:27 AM
தங்கை:-

கலைமகள் காப்பு:-

பூவோடு பிறந்து வந்த
====வாசத்தைப் போல என்றன்
நாவோடு பிறந்து வந்த
====நற்றமிழ்த் தாயே! உன்னைப்
பாவோடு வைக்கும் என்னைப்
====பரிவோடு தொடர்ந்து வந்து
சாவோடும் காப்பாய் அம்மா
====செம்மலர்த் தாளே காப்பு!

கவியரங்கத் தலைமை வணக்கம்:-

ஊன்மறை கின்ற மட்டும்
====உவப்புடன் தமிழ்வ ழங்கும்
தேன்துறை எமக்கு ஆகித்
====தான்"துரை" என்றே நிற்கும்
"தாமரை" அவையின் வேந்தே!
====தூய்தமிழ்க் கவிஞன் பாவில்
சாமரம் வீசு கின்றேன்
====செம்மையில் வாழ்க நீயே!

அவையடக்கம்:-

கற்கொண்ட சிலைகள் எல்லாம்
====கருவறைப் புகுவ தில்லை!
புற்கொண்ட பனியும் சிந்திப்
====புவியுமே நனைவ தில்லை!
சொற்கொண்டு அடியன் யானும்
====செய்கவி அதுபோ லேனும்
பொற்கொண்ட நெஞ்சத் தீரே
====பொறுமையில் கேட்பீ ராக!

கவிதை:-

உறவென வருவ தெல்லாம்
====நல்லுற வாகி விட்டால்
துறவெனும் சொல்லே இந்தத்
====தரணியில் ஒழிந்தி ருக்கும்!
கரவென மறைத்து வைக்கும்
====கறவெனக் கறந்து நிற்கும்
உறவுக ளாலே நாளும்
====உளம்நொந்து மடிவார் கோடி!

குழவியாய் வந்து தித்துக்
====குதலைவாய் அசைக்குங் காலை
குழலொடு வீணை யாழும்
====கசக்குதென் றுரைக்கும் தந்தை
வளர்ந்துநாம் வாலி பத்தை
====வந்தடைந் திட்ட பின்போ
குளவியாய்க் கொட்டு தென்றே
====காதினைப் பொத்திக் கொள்வான்!

கனியென்று உரைத்து வைத்துக்
====களிமுத்தம் தந்த வாயே
சனியென்று உரைத்து வைக்கும்
====சலிப்பொடும் நோக்கி வைக்கும்!
பனியென்று அணைத்த ணைத்துப்
====பாசத்திற் பிணைத்த மார்பே
பிணியென்று இகழ்ந்து வைக்கும்
====பீடையே எனவும் சொல்லும்!

அழகிய மனையாள் மேனி
====ஆசையின் மிகுதி யாலே
இளகிய இரவில் ஓர்நாள்
====இறுக்கியே அணைத்த வாறு
"அழகமா?" கரிய மேகக்
====கூட்டமா? என்று ரைக்கக்
கலகமே போலக் கையில்
====விழுந்ததே ஐயோ என்பான்!

கருவிலே மாதம் பத்துக்
====கனிவுடன் சுமந்த தாயின்
கருணையின் முன்பு அந்தக்
====கடவுளும் தோற்பான்; நித்தம்
கருவிலே நம்மைத் தாங்கிக்
====கனிமுலை தந்து காத்தும்
கருவறை தேரும் சீரும்
====கேட்காத ஒற்றைத் தெய்வம்,

அவளன்றி ஏதும் இல்லை!
====ஆயினும் அன்னை நம்மைத்
துவளென்று பாதி வாழ்வில்
====சொல்லியே தொலைந்து போவாள்!
கவலென்ற சொல்லே நாளும்
====காணாமற் காத்து நின்று
"அவலமே! வேறு இல்லை
====அவளின்றிப் போனால்" என்ற

வேதத்தை உரைத்து விட்டு
====வாய்மூடிச் செல்வாள்; ஆங்கே
நாதத்தை நடையில் கட்டி
====நளினத்தை இடையில் கட்டிப்
பாதத்தை எடுத்து வைத்துப்
====பருவத்தை உடலில் வைத்து
ஒர்தத்தை வருவாள்; அங்கே
====பலவித்தை அரங்க மேறும்!

வாயோடு வயிறும் காத்து
====வளமையை வாழ்விற் சேர்த்து
தாயோடு மறைவ தெல்லாம்
====தாயாகி கணவ னுக்கு
வாய்க்கின்ற படிக்குக்குச் செய்யும்
====வலியதோர் உறவு என்றே
"தாய்க்குப்பின் தாரம்" என்று
====பழமொழி உரைத்தார்; ஆனால்,

மனைஎன்ற உறவு தானும்
====மலர்பெய்த கட்டில் மீதில்
அணையில்லா காதல் வெள்ளம்
====அனுதினம் பெருகி ஓடி
இணையில்லா இன்ப மெல்லாம்
====இராபல சுகித்த பின்பு
வினையெல்லாம் ஒன்று கூடி
====வந்தாற்போல் விளைவு காட்டும்!

நிதிஎன்ப தின்றிப் போகும்
====நேரங்கள் வந்து விட்டால்
"பதி"யென்று கொஞ்சிக் கொஞ்சிப்
====பால்முத்தம் ஆயி ரங்கள்
பதியென்று சொல்லிச் சொல்லிப்
====பதித்திட்ட மனையாள் பின்பு
"விதி"என்றன் விதியே! என்று
====வாய்கூசா துரைத்து வைப்பாள்!

ஏற்றத்தில் இருக்கும் போது
====ஏத்தியே புகழ்வோ ரெல்லாம்
கூற்றத்தில் வந்து நின்று
====கூடியே அழுவ தில்லை!
மாற்றத்தில் ஏறி டாத
====மலரைப்போல் எவ்வி டத்தும்
நாற்றத்தில் மாறி டாத
====நெஞ்சத்தின் உறவே உறவு!

சேயென இருக்கும் போது
====சேர்ந்துவிளை யாடி நிற்பாள்!
பூயென மலர்ந்த போதும்
====பாசத்தில் மடியில் சாய்ப்பாள்!
நேயனை அடைந்த பின்பும்
====நேசத்தை நெஞ்சில் வைப்பாள்!
தாயினைப் போல என்றும்
====தங்கையே பார்த்தி ருப்பாள்!

"தங்""கை"யாய் இருந்து என்றும்
====தன்வயி றுகாப்ப தாலே
"தங்""கை"யாய் இருந்து என்றும்
====தனக்குத விசெய்வ தாலே
"தங்""கை"யாய் இருந்து என்றும்
====தன்மானம் காப்ப தாலே
"தங்கை"என் றுரைத்தார்; அஃதே
====தலையாய உறவு என்றும்!

ரௌத்திரன்
02-08-2012, 11:39 AM
வணக்கம் கலைவேந்தன், தாமரை அவர்களே!

எனது இரன்டாவது கவிதைத் தொகுப்பான "பெளர்ணமி அலைகள்" வெளியாகவிருப்பதால், உடனடியாக விடைவெற வேண்டும். இன்னும் பல நாட்களுக்கு மன்றத்திற்கு வர இயலாது என்பதையும் முன்பே அறிவித்திருந்தேன்.

இப்பொதே நான் விடைபெற வேண்டியுள்ளதால், அடியேன் தெரிவு செய்த தலைப்புக்கான கவிதையை அவசரமாய்ப் பதிவிட வேண்டி வந்தது.

பிழை பொறுக்க!---------ரெளத்திரன்

ஆதி
02-08-2012, 11:44 AM
அன்பின் ரௌதிரன் , தங்களுக்கு எந்த வித மறுப்பும் இல்லை என்றால், உங்கள் அனுமதியோடு இந்த கவிதையை, தலைவர் தங்களுக்கு அழைப்பு விடுக்கும் வரை மறைக்களாமா ?

தங்களின் இரண்டாவது தொகுதி வெற்றியடைய வாழ்த்துக்கள், எப்போது வெளியீட்டு விழா என்று சொன்னால், வாய்ப்பிருக்கும் மன்ற உறவுகளும், விழாவில் கலந்து கொள்வார்களே

ஜானகி
04-08-2012, 09:31 AM
பழகு தமிழில் எழுத்தோவியமாக உலாவந்த பாட்டியின் பெருமைதனைக் கேட்கும் போது ஒருவித ஏக்கமே வருகிறது....அவள் நம் அருகில் இல்லையே என்று....வாழ்த்துக்கள் !

சிவா.ஜி
06-08-2012, 07:10 AM
பாட்டியின் பெருமை சொல்லும் கவி வரிகள் அவளின்று இல்லையே என ஏங்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஜகதீசன் ஐயா.

M.Jagadeesan
06-08-2012, 09:10 AM
ஜானகி , சிவா.ஜி ஆகியோரின் பாராட்டுரைக்கு நன்றி!

தாமரை
06-08-2012, 01:41 PM
பாட்டி புகழ் பாடிய ஜகதீசன் ஐயாவுக்கும், தங்கை புகழ் பாடிய ரௌத்திரன் அவர்களுக்கும் நன்றிகள். சற்று பணிப் பளு அதிகம் உள்ளதால் உங்கள் கவிதைகள் நலம் பாராட்ட இருநாள் பொழுதளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

rema
07-08-2012, 07:45 AM
பேணியே உனைத்தொழுகிறேன் தமிழே ! கலை
வாணியே ! கவிபடைக்க உதவிடுந் கைவிடாநல்
தோணியே ! என்னை ஏற்றத்துக்கு கொண்டுசெலும்
ஏணியே ! சிறியவள் பிழைகளை பொறுத்திடுவாயே !

துமிழ் மன்றமே போற்றி !
கவியரங்கம் வளர்க ! தங்கமான அவையில்..
தாமரையாய் வீற்றிருக்கும் நடுவருக்கு நல்வணக்கம் !
தாயென்ற தலைப்பை சேயிவள் எடுத்துவிட்டேன்!
தாய்மையின் மாட்சியை கவியாக்கத் திணறிவிட்டேன் !
தாய் மனதோடு தவறுகளை பொறுத்தருள்வீர் !

என் தாயை வணங்கி சமர்ப்பிக்கிறேன் கவிதையை !

தாய்மை என்ப தூய்மை !
நிசந்தனை ! எதிர்பார்க்கும் உறல்கள் முன்
நிபந்தனை கலப்படமற்ற நேயமவளது !
முதியோர் இல்லத் தணிப்பிலும்
நதிபோல் செழிக்க வாழ்த்துமவள் நேசம் !

தாய்மை…வாய்மை !
கூனன் ஊனன் நசனையும் ஈன்றவளுக் கழகே !
அண்டங் காக்கை சேயை சுவர்ண மெனினும்
கீசகங் பிள்ளையை அழகே யெனினும்;
எள்ளளவும் அதிலில்லை பொய்மை…!

தாய்மை என்பது கருணை !
கருணை வடிவம் தாய்மையின் தகை
பெறாமலேயே எல்லையற்ற பரிவால் தெரஸாள்
பெற்றனள் அன்னையெனும் பெருமை !

தாய்மை என்ப அன்புடைமை. !
அன்பு மயமானவரை அன்னை என்பர்
தாய்மையின் பண்புகளைத் தரித்தால்,
ஆணையும் மேன்மகனாக்கும்.. தாயுமானவனென !

தாய்மை என்றால் மறம் !
சித்திர மென்மையுஞ் சாந்தமுமாய் இனிப்பவள்
புத்திர ருக்கோர் பாதகமெனில் வீறுடன்
பத்திர காளியாய் மாறுவாள் !

தாய்மை…. உற்சாகத்தில் இளமை !
ஞானத்தில் முதுமை !
தன் மழலை சிட்டுகளுடன் உலகையே அளப்பாள் !
ஞானப்பால் ஊட்டும் இனிய ஆசானுமாவாள் !

தாய்மை….அவாவின்மை !
நஞ்சறுத்ததும் நெஞ்சோடுப் பிணைத்திட்டவள்
அன்றே தான் தனக்கு என்ப தறுத்தாள் !
தன்னலம் தாய்மையின் அகராதியிலில்லை

தாய்மை வண்மை !
அது அழகு. ஈகை.வலிமை
தாய்மை மேன்மை !
தாயைப் போல் காப்பாயென
இறைவனையே இறைவதால் !

தாய்மை இறைஅன்பின் சால்பு
நாத்திகரும் போற்றும் நடமாடும் தெய்வம்
குற்றம் பார்க்கின் சுற்றமெலாம் பொய்த்திட
தெய்வத்தின் தெரிவு தாயெனும் நண்பே !

நிழலும் தொடர்வது வெயில் வரை யாமே
சுழலிலும் பகையிலும் தீயிலும் பனியிலும்
சுழலும் புவியில் அவளன்பே திண்மையாய் தொடர்ந்திடும்
உழலும் மனமே உணர்ந்து போற்றிடு உன்(னத) தா (ய்மை)யை !

;

செல்வா
07-08-2012, 12:20 PM
அருமையான கவியரங்கிற்கு அமர்த்தலாக வந்துவிட்டேன்.
முதலில் இதை முன் மொழிந்த கலை ஐயாவிற்கும்
கலந்து கொண்ட யாவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சில யோசனைகள்..

ஒவ்வொரு கவியரங்கக் கவிதைகளைத் தனித்திரியாகவும் - அவற்றுக்கான பிறர் விமர்சனங்களைத் தனித்திரியாகவும் கொள்ளலாம்.

கவியரங்கக்களுக்கான அறிவிப்புகள் மற்றும் கவிஞர்கள் சேர்தல் பிறவற்றை இந்தத் தாய்திரியிலேயேத் தொடரலாம்...

என்ன சொல்கிறீர்கள்...?

Keelai Naadaan
12-08-2012, 06:06 AM
சில யோசனைகள்..

ஒவ்வொரு கவியரங்கக் கவிதைகளைத் தனித்திரியாகவும் - அவற்றுக்கான பிறர் விமர்சனங்களைத் தனித்திரியாகவும் கொள்ளலாம்.

கவியரங்கக்களுக்கான அறிவிப்புகள் மற்றும் கவிஞர்கள் சேர்தல் பிறவற்றை இந்தத் தாய்திரியிலேயேத் தொடரலாம்...

என்ன சொல்கிறீர்கள்...?

செல்வாவின் இந்த யோசனையை நானும் வரவேற்கிறேன்.

M.Jagadeesan
12-08-2012, 07:25 AM
தகைசால் தாய்மையை , வகையாய் எடுத்துரைத்த மின்மினி 11 அவர்களுக்கு பாராட்டுக்கள்.

rema
22-08-2012, 05:45 AM
தகைசால் தாய்மையை , வகையாய் எடுத்துரைத்த மின்மினி 11 அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ஐயா !

Sasi Dharan
22-08-2012, 10:50 AM
தோழிக்காக நான் எழுதலாமா???

நாஞ்சில் த.க.ஜெய்
22-08-2012, 12:42 PM
கவிதை எழுததெரியவிடிலும் எழுதும் ஆர்வம் முன் நோக்கி தள்ளிட எனக்கு தமையன் எனும் தலைப்பு பொருந்தும் என்றே எண்ணி வாய்ப்புண்டோ(?) என்று தெரியாவிடிலும் நானும் கலந்து கொள்ள விழைகிறேன் ..

கீதம்
23-08-2012, 05:50 AM
தோழிக்காக நான் எழுதலாமா???

தோழியை புதுவை பிரபா முன்பே தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். கலைவேந்தன் அவர்கள் பதிலளிக்கும்வரைக் காத்திருப்போம்.

ஆதி
23-08-2012, 09:14 AM
தாமரை அண்ணா ரொம்ப பிஸியாக இருக்கிறார் போல, கவியரங்கம் தொய்வுறாமல் செல்ல என்ன செய்யலாம் உறவுகளே

கலைவேந்தன்
23-08-2012, 03:13 PM
மன்றத்தின் முதலாம் கவியரங்கம்.

தலைமை : திரு தாமரை அவர்கள்.

கவியரங்கத்தலைப்பு : ஊடாடி உதவும் உறவுகள்.

உபதலைப்புகள் :

1. தாய். .....................................மின்மினியின் தெரிவு.

2. தந்தை...................................கலையரசியின் தெரிவு

3. தமக்கை................................கலைவேந்தனின் தெரிவு

4. தங்கை..................................ரௌத்திரன் தெரிவு

5. தமயன்..................................நாஞ்சில் த க ஜெய்யின் தெரிவு

6. தனயன்.................................தைனீஸின் தெரிவு.

7. இல்லாள் .............................ஆதனின் தெரிவு.

8. இணையவன்.......................கீதமின் தெரிவு

9. தோழி ...................................புதுவை பிரபாவின் தெரிவு

10. மைத்துனன் .......................சிவா.ஜி யின் தெரிவு

11. மகள்....................................ராஜி சங்கர் தெரிவு

12. மருமகள்.............................கீழைநாடான் தெரிவு

13. பாட்டி .................................ஜகதீசன் ஐயாவின் தெரிவு

14. தாத்தா ................................நாக சுந்தரத்தின் தெரிவு

15. காதலன்..............................ரீனாவின் தெரிவு

16 .காதலி..................................ஆசைஅஜீத் தெரிவு

கவிஞர்கள் முதலில் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தலைப்பினை இங்கே அறிவித்தால் அவரவர்க்கு அத்தலைப்பு ஒதுக்கப்படும். முன் வருவோர்க்கு முன்னுரிமை.

தலைப்புகள் தேர்ந்தெடுத்த பிறகு தலைவரின் முன்னுரைக்கவிதை இடம்பெறும். அதன் பின் அவரவர் தேர்ந்தெடுத்த தலைப்பின் படி கவிதைகளை இங்கே பதியலாம்.

காலக்கெடு எதுவும் கிடையாது. ஆனால் விரைவில் எழுதினால் கவியரங்கம் கலகலக்கும்.

இது போட்டியல்ல. எவர் கவிதை சிறந்தது என்னும் தேர்ந்தெடுப்பு கிடையாது. எவரும் எழுதலாம். புதுக்கவிதை மரபுக்கவிதை என எவ்விதமும் அமையலாம்.

குறைந்தது 7 வரிகளாவது இருப்பின் கவிதை அழகு பெறும்.

கவிஞர்கள் தமது தலைப்பினைத்தேர்ந்தெடுத்து இங்கே விரைவில் அறிவிக்கவும். இறுதியில் நானும் எஞ்சிய தலைப்பொன்றினைத் தேர்ந்துகொள்வேன்.

கவிதைகள் பற்றிய விமர்சனம் வரவேற்கப்படும் அதே நேரம் கவிஞர் பற்றிய விமர்சனம் தவிர்க்கப்படல் வேண்டும்.

கவிஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பின் தலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

அனைவரும் ஆதரித்து கவிமழை பொழிந்திட அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நன்றி.

கலைவேந்தன்
23-08-2012, 03:15 PM
தோழிக்காக நான் எழுதலாமா???

அத்தலைப்பு ஏற்கனவே புதுவை பிரபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது நண்பரே.. இருக்கும் தலைப்பிலோ அல்லது புதிய உறவு சேர்க்கவோ செய்யலாமே..

அறியத்தாருங்கள்.

A Thainis
23-08-2012, 03:18 PM
தனயன் என்ற கவிதை தலைப்பை எனக்கு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கலைவேந்தன்
23-08-2012, 03:20 PM
எடுத்துக்கொள்ளுங்கள் தைனிஸ்..

A Thainis
23-08-2012, 03:22 PM
வாய்ப்புக்கு மிக்க நன்றி கலைவேந்தன்.

கீதம்
23-08-2012, 10:31 PM
கவிதை எழுததெரியவிடிலும் எழுதும் ஆர்வம் முன் நோக்கி தள்ளிட எனக்கு தமையன் எனும் தலைப்பு பொருந்தும் என்றே எண்ணி வாய்ப்புண்டோ(?) என்று தெரியாவிடிலும் நானும் கலந்து கொள்ள விழைகிறேன் ..

கலைவேந்தன் கவனத்துக்கு....

கலைவேந்தன்
24-08-2012, 03:10 AM
தாராளமாய் தமையன் உங்களுக்கே ஜெய்..! கவனத்திற்குக் கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி கீதம்..!

rema
05-09-2012, 05:45 AM
பிற உறவுகள் பற்றிய கவதைகளை விரைவாக தரலாமே !

A Thainis
05-09-2012, 11:40 AM
கவிதைகள் பாட ஆரம்பிப்பது எப்போது கலை, அதை பற்றிய தெளிவு இல்லையே

ஆதி
05-09-2012, 12:33 PM
கவியரங்க தலைவர் முறையே இங்கே அழைப்பு தந்திருக்கிறாரே தைனிஸ், திரியை முழுமையாய் ஒருமுறை வாசித்துவிடுங்களேன்

http://www.tamilmantram.com/vb/showthread.php/29771-தமிழ்மன்றக்-கவியரங்கம்-தாமரை-தலைமையில்-!?p=556803&viewfull=1#post556803

A Thainis
06-09-2012, 07:03 AM
கண்டேன் ஆதன், தெளிவு கொண்டேன் உங்கள் உதவிக்கு நன்றி.

நாகசுந்தரம்
06-09-2012, 08:05 AM
தாத்தாவை பற்றி எழுதி உள்ளதை பதிவிட உள்ளம் ஏங்குகிறது. எனது முறை வர காத்திருக்கிறேன். நன்றி.

சுகந்தப்ரீதன்
10-09-2012, 07:22 PM
தாமரையானந்தாவை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலைக்கு பத்து ஐ-கேஷ்ன்னு அறிவிச்சிடலாமா கலையண்ணா..?!:icon_rollout:

A Thainis
17-09-2012, 06:55 PM
தாமரை தலைமையில் தமிழ் மன்ற கவியரங்கம் என்னவானது?

கலைவேந்தன்
18-09-2012, 03:15 AM
இன்னும் சில நாட்கள் பார்த்துவிட்டு வேறு யாரையேனும் தலைமையேற்கச் சொல்லலாமா என நினைக்கிறேன். உறுப்பினர்களின் கருத்தறிய விழைகிறேன்.

M.Jagadeesan
18-09-2012, 05:35 AM
தாமரையிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிடுங்கள்!

ஆதி
18-09-2012, 05:49 AM
நான் இன்று அண்ணனும்டன் பெச முயல்கிறேன்

A Thainis
18-09-2012, 12:18 PM
கலை அவர்களின் பதிலுக்கு நன்றி, அவர்களை மாற்றாமல் தொடர முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்.

PUTHUVAI PRABA
20-09-2012, 06:26 PM
தாமரை அவர்களையே வைத்து தொடரலாம்..ஆனால. அப்போட்டி தொடங்கும்போது இருந்த ஆர்வம் தளர்ந்திருப்பதாகவே உணர்கிறேன். ஒருவேளை எனக்குமட்டும்கூட அப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது

கும்பகோணத்துப்பிள்ளை
24-09-2012, 10:15 AM
ஹலோ! மைக் டெஸ்டிங்! ஒன்! டு! த்திரி!
யாரப்பா! அது! மேடையில இன்னம் கொஞ்ஞம் சேர போடசொல்லுங்கய்யா!
கவிஞருங்கலெல்லாம் வாராங்கல்ல!

jaffy
24-09-2012, 11:20 AM
ஆதனுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி தொடங்கிவிடுங்க*

அப்புறம் ஆதன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கு :D