PDA

View Full Version : தகுதியை இழந்துவிட்டாய்.....வைரமுத்து!



ரௌத்திரன்
20-07-2012, 09:00 PM
அட்சயப் பாத்திரமாய்
அவதரித்தவனே!

எப்படி இன்று
பிச்சைப் பாத்திரமாய்ப்
பிறழ்ந்து போனாய்?

உண்மையில்
நீ தேசத்தை நேசித்தது
எழுத்தில் மட்டுந்தான்.

எதார்த்தத்தில்
ஏழைகளை
ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் வீசியெறியும்
எலும்புத் துண்டுகளைத்தான்
என்பேன்!


நீ தேனீ தான்!

ஆனால்
மலர்களை
மறந்துவிட்டு
மலத்தையல்லவா
மொய்த்துக் கிடக்கிறாய்?

நீ கங்கைதான்!

ஆனால்,
சாக்கடையோடு
சங்கமித்துவிட்டு
இதுதான்
சமுத்திரமென்று சொல்லி
சாதித்துக் கொண்டிருக்கிறாய்...
சத்தியம் செய்கிறாய்...

அன்று
அநீதிகளுக்கு எதிராக
அரிவாளாய்
அவதரித்த உன் பேனா

இன்று
அதிகார வெறிபிடித்தாடும்
அரசியல்வாதிகளுக்கு
காசுக்காக அல்லவா
காதுகுடைந்து கொண்டிருக்கிறது?

பகட்டுக்காய்
பேனா பிடிக்கவந்த
பாவலர்தம் வரிசையில் நீயும் ஒருவன்....

இன்றைய சமுதாயம் வேண்டுமானால்
உன்
குற்றங்களைக் காணாது
கண் மூடிக்கொண்டிருக்கலாம்

ஆனால் பாவலனே!

காலத்தின் விமர்சனம்
உன்
குரல்வளையை நெரிக்கும் நாள்
வெகுதூரத்தில் இல்லை....







-------ரௌத்திரன்

M.Jagadeesan
21-07-2012, 02:08 AM
காசுக்குக் கவிபாடும் கவிஞர்தம் பாக்களிலே
வீசுமோ தமிழ்மணம்? கூழுக்காய் செந்தமிழில்
ஆசுகவி பாடிய ஒளவையாம் கிழவியைப்
பேசுகின்ற பேற்றைப் பெற்றதே தமிழினம்.

தாமரை
21-07-2012, 02:39 AM
ஒருவரை வெகுவாகப் போற்றுவதும்
தூக்கிப் போட்டு மிதிப்பதும்
தமிழனின் இரத்தத்தில் கலந்த ஒன்று.

அதீத நம்பிக்கைகள்தான் இவற்றிற்கு அடிப்படை என்று தோன்றுகிறது.
தமிழ் ஓரிருவரை நம்பி இல்லை என்பதே உண்மை.

செய்யும் நல்லதை மட்டும் பார்ப்போம்.
நம்பிக்கை வைப்போம்.. நம் மீது மட்டும்

jayanth
21-07-2012, 03:33 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/877292.gif (javascript:emoticonp(':நல்ல யோசனை:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/877292.gif (javascript:emoticonp(':நல்ல யோசனை:')) http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/877292.gif (javascript:emoticonp(':நல்ல யோசனை:'))

கலைவேந்தன்
21-07-2012, 04:53 AM
கவிதையின் கருவில் மீண்டும் வேறுபடுகிறேன்.

திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதுவது மாபெரும் குற்றமல்ல. கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் வாலி மருதகாசி போன்ற அரும்பெரும் கவிஞர்கள் செய்தது தான்.

பிறரைப்போற்றி கவிதை எழுதுவதும் கொலைக்குற்றமல்ல.

காசுக்காக விலைபோனார் என்பது ஏற்கத்தக்கதல்ல. வாய்ப்பு கிடைப்பின் பொருள் ஈட்ட நினைக்காதவர்கள் உலகில் எவருமிலர். நேர்மையாக எழுதி சம்பாதிப்பதில் எந்த குறையும் இல்லை. அவரது எழுத்துக்கு விலை கிடைக்கிறது. மக்கள் விரும்புகின்றனர் என்னும் போது அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எந்தவகையில் குற்றம்..?

பாலங்கள் கட்டி பணம் ஒதுக்கவில்லை. கண்ணொளி தருவதாய்ச் சொல்லி கண்களைப் பிடுங்கவில்லை. அரிசி பதுக்கி ஆந்திராவுக்கு விற்கவில்லை. தமிழ் தமிழ் என்று சொல்லி அவர் தமிழினத்தை ஒழிக்க துணை போகவில்லை.

இவ்வாறிருக்க அவர் மேல் ஏன் இத்தனை கோபம் ரௌத்திரனுக்கு..? கவிதை எப்போதும் போல் அருமை. பாடும்பொருள் சுவைக்கவில்லை.

ராஜா
21-07-2012, 05:09 AM
கலையின் பதிவுகளை நானும் வழிமொழிகிறேன்..

பால்ராஜ்
21-07-2012, 05:16 AM
பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட ஒரு தத்துவம்..
"எதிர் பார்ப்புக்கள் ஏமாற்றத்தை விளைவிக்கும்.."

தனிமனிதர்களின் எதிர்பார்ப்பை யாராலும் நிறைவேற்றமுடியாது...

சகிப்புத்தன்மை என்பது எல்லோருக்குமே தேவை...!:)

ரௌத்திரன்
21-07-2012, 10:16 AM
கவிதையின் கருவில் மீண்டும் வேறுபடுகிறேன்.

திரைப்படத்திற்காக பாடல்கள் எழுதுவது மாபெரும் குற்றமல்ல. கண்ணதாசன் பட்டுக்கோட்டையார் வாலி மருதகாசி போன்ற அரும்பெரும் கவிஞர்கள் செய்தது தான்.

பிறரைப்போற்றி கவிதை எழுதுவதும் கொலைக்குற்றமல்ல.

காசுக்காக விலைபோனார் என்பது ஏற்கத்தக்கதல்ல. வாய்ப்பு கிடைப்பின் பொருள் ஈட்ட நினைக்காதவர்கள் உலகில் எவருமிலர். நேர்மையாக எழுதி சம்பாதிப்பதில் எந்த குறையும் இல்லை. அவரது எழுத்துக்கு விலை கிடைக்கிறது. மக்கள் விரும்புகின்றனர் என்னும் போது அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எந்தவகையில் குற்றம்..?

பாலங்கள் கட்டி பணம் ஒதுக்கவில்லை. கண்ணொளி தருவதாய்ச் சொல்லி கண்களைப் பிடுங்கவில்லை. அரிசி பதுக்கி ஆந்திராவுக்கு விற்கவில்லை. தமிழ் தமிழ் என்று சொல்லி அவர் தமிழினத்தை ஒழிக்க துணை போகவில்லை.

இவ்வாறிருக்க அவர் மேல் ஏன் இத்தனை கோபம் ரௌத்திரனுக்கு..? கவிதை எப்போதும் போல் அருமை. பாடும்பொருள் சுவைக்கவில்லை.




கவிஞர் கலைவேந்தன் அவர்களே!

உங்கள் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒன்று.வைரமுத்து அவர்கள் சினிமாவில் பாடல் எழுதி சம்பாதிக்கிறார் என்பது எனது கோபமல்ல. அவர் பாடல்களை நானும் ரசிப்பவந்தன்.

ஏன் நானும் கூடத்தான் சினிமாவில் பாடல் எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
அதை நான் குற்றமென்று ஒருபோதும் கூற மாட்டேன்.

ஆனால் பிறகு நீங்கள் முன் வைத்தீர்களே, அந்தக் குற்றம் புரிந்தாரா? இந்தக் குற்றம் புரிந்தாரா? என்று, அந்தக் குற்றங்களையும் அவர் புரியவில்லை என்பதும் உண்மைதான்.

ஆயினும் அந்தக் குற்றங்கள் அனைத்தையும் புரியும் ஒரு போலி அரசியல் வாதிக்குத் துணைபோகிறாரே இதை உங்களால் மறுக்க முடியுமா?

"அவர் தமிழினத்திற்கே வந்து வாய்த்த பீடை என்பதில் எனக்கு எப்போதும் இருகருத்தில்லை" என்று ஏற்கெனவே நீங்களே ஒரு முறை குறிப்பிட்டீரே, அந்த போலி அரசியல் தலைவர் தமிழினத் துரோகி "கலைஞர் கருணா நிதி" அவர்களை
அந்தச் சாக்கடையை இது நாள் மட்டும் கங்கை என்று கூறி அர்ச்சித்து வருகிறாரே, இதை உங்களால் மறுக்க முடியுமா?

நேர்மைக் கவிஞனுக்கு இதுதான் அழகா? வைரமுத்துவிடம் தமிழ் தாராளமாக இருக்கிறது அதற்கு மக்களிடத்தில் வரவேற்பும் வானளவு இருக்கிறது, அதை வைத்துப் பிழைப்பு நடத்தளமே!

மக்களின் நலங்களை எல்லாம் சுரண்டித் தின்னும் ஒரு போலி அரசியல் வாதிக்கு ஜால்ரா தட்ட வேண்டிய அவசியம் என்ன? அங்கே அவர் தமிழ் களங்கப்பட்டுவிடவில்லையா?

இதுதான் எனது கோபத்தின் அடித்தளமே!

வைரமுத்துவை இதயத்தில் வைத்து பூஜித்தவன் நான். சமூகப் பிரக்கினை வளர்ந்த பிறகு, எதார்த்தம் புரிந்த பிறகு, அனுபவம் சொல்லித்தந்த பாடத்தின் பீடத்தில் எழுந்ததுதான் இந்தக் கவிதை!

உங்கள் விமர்சனத்தை எப்போதும் மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு கவிஞனுக்கும் சில கொள்கைகள் உண்டு. எனக்கும் உண்டு. அதில் போலித்தனம் எங்கே எவரிடத்தில் இருந்தாலும் சாடுவதும் ஒன்று. அதை என்னால் மாற்றிக்கொள்ள இயலாது.

---------ரெளத்திரன்

தாமரை
21-07-2012, 03:57 PM
ஒவ்வொரு கவிஞனுக்கும் சில கொள்கைகள் உண்டு. எனக்கும் உண்டு. அதில் போலித்தனம் எங்கே எவரிடத்தில் இருந்தாலும் சாடுவதும் ஒன்று. அதை என்னால் மாற்றிக்கொள்ள இயலாது.

---------ரெளத்திரன்

சரியாகச் சொன்னீர்கள். நான் இப்படி இருப்பேன் என்று சொல்லத்தான் நமக்கு பூரண உரிமை உண்டு.

கலைவேந்தன்
21-07-2012, 04:32 PM
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ரௌத்திரன். உங்கள் கருத்தை மதிக்கிறேன்.

வைரமுத்து கலைஞரின் தமிழுக்காய் அணிகலன் செய்வதாகத்தான் நான் எண்ணுகிறேன். அவர் செய்த ஊழலுக்கு இவர் சப்பைக்கட்டு கட்டவில்லையே..

அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பது எனக்கும் அவருடனான ஒரே ஒரு அனுபவம் கூறி இருக்கிறது. எனினும் சக கவிஞரை இந்தளவுக்கு விமர்சிப்பது சரியா என்பதே என் ஆதங்கம்.

தொடருங்கள். என் கருத்தினை நான் முன் வைத்துவிட்டேன் என்பதில் எனக்கு மன நிறைவு. அவ்வளவுதான்.

vasikaran.g
29-07-2012, 08:09 AM
ரௌத்திரன் ரௌதிரமாக மாறிவிட்டார் போலும். கருத்தில் எழுத்தில் தீ பொறி. ! சில உண்மைகள் ,சில சூழ்நிலைகள் சில செயல்கள் அவளவுதான்..காரம் தூக்கல் .