PDA

View Full Version : படித்தவை 2.1.2004



lavanya
01-01-2004, 09:45 PM
படித்தவை

படித்த புத்தகத்தில்
கிழிந்த கடைசி பக்கம்
கொலையாளி யார்?
- யாரோ.

சில வித கதைகள் படிக்கும்போது ஆஹா இப்படி முடிவு வச்சிருக்காங்களே..இதை இப்படி முடிச்சிருக்கலாமே என தோன்றும். இது ஒரு வகை. (சில கதை முடிஞ்சாலே
போதும்பா என தோண வைக்கும் அது ஒரு வகை கதை ). ஆனால் கதையை சுவையாக
கொண்டு சென்று முடிவை நாமே ஊகிக்கும் விதமாக முடிக்கும் கதைகள் ஏதும்
படித்திருக்கிறீர்களா...? அதாவது நம் மனநிலைக்கு ஏற்றார்போல் முடிவுகளை நாமே
அவதானிப்பது...என் கல்லூரி ஆங்கில பாடத்திட்டத்தில் உள்ள ஒரு கதை - இன்னும்
தடுமாறி கொண்டிருக்கிறேன்...

பெண்ணா அல்லது புலியா ? (Lady or the Tiger)


கொஞ்சம் என் நடையில் கதையை சொல்கிறேன்

ஒரு ராஜா...அவனுக்கு ஒரே மகள். பேரழகி..அந்த சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு..மன்னன்
உயிரையே வைத்திருக்கும் ராஜகுமாரி தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாப்படி அரண்மனை சேவகனை காதலிக்கிறாள். ராஜா கொஞ்சம் இருபத்தி மூன்றாம் புலிகேஸி ரகம். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு வித்தியாசமான தண்டனை கொடுப்பான்.
உதாரணமாக யாராவது திருடினால் அவனை ஒரு மைதானத்துக்கு வரவழைப்பான்.அந்த மைதானத்தின் நடுவில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு கட்டடம் இருக்கும். ஒரு
அறையில் திருடன் திருடியது போல் பல மடங்கு சொத்து. மற்றொரு அறையில் பசித்த
கொடிய புலி இருக்கும். குற்றவாளி ஏதேனும் ஒரு அறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக சொத்து உள்ள அறை தேர்ந்தெடுத்தால் சந்தோஷ வாழ்க்கை.புலி அறை
தேர்ந்தெடுக்கப்பட்டால் அவ்வளவுதான் .ஆள் காலி... இந்த அறைகளின் பொருட்கள்
அடிக்கடி இடம் மாறும்.

அப்படிப்பட்ட அரசனுக்கு மகளின் காதல் தெரிய வருகிறது...அப்புறமென்ன...அரண்மனை
சேவகன் மைதானத்துக்கு கொண்டு வரப்படுகிறான். ஒரு அறையில் புலி . எந்த அறையில் புலி எந்த அறையில் பெண் என்பது இளவரசிக்கும் தெரியும். மற்றொரு அறையில் இளவரசியைப் போல் பல மடங்கு அழகுள்ள ஒரு பெண். ஒரு அறையை தேர்ந்தெடுக்க மன்னனால் நிர்ப்பந்திக்கப்படுகிறான் சேவகன். கடைசி தருணத்தில் அரசன் பக்கத்திலிருந்த இளவரசி ஒரு அறையை கண்களால் ஜாடை காட்டுகிறாள். அது தெரிந்த அரசன் இளவரிசியை உடனே அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுகிறான்.இளவரசி கண்காட்டி சொன்ன அறையை சேவகன் தேர்ந்தெடுக்க முடிவு செய்கிறான்.

இங்கு கேள்விகள் ஆரம்பம். -

அ ] 'பொதுவாக' என கொண்டால் இளவரசி சொல்ல வந்தது

1. அந்த அறையில்தான் புலி இருக்கிறது. போகாதே

2. அந்த அறையில்தான் அழகி இருக்கிறாள் போ.

ஆ ] இளவரசி 'பொழைச்சு போகட்டும் அவன் ' என்ற மனப்பான்மையில் இருந்தால்

1. அந்த அறையில் தான் அழகி இருக்கிறாள். போ

2. அந்த அறையில் தான் புலி இருக்கிறது. போகாதே

இ ] இளவரசி 'எனக்கு கிடைக்காதவன் செத்தே போகட்டும்' என்று நினைத்தால்

1. அந்த அறையில் தான் அழகி இருக்கிறாள் ( புலி உள்ள அறை)

2. அந்த அறையில்தான் புலி இருக்கிறது (அழகி உள்ள அறை)

இப்போது சொல்லுங்கள் இளவரசி சொல்ல வந்த அறை Lady or the Tiger ?



சின்னதம்பி : அதிருக்கட்டும் லாவண்யா...நீங்க என்னா பதில் எழுதினீங்க...?

லாவண்யா : நான் எழுதுனது இருக்கட்டும்..நீங்களா இருந்தா என்னா எழுதுவீங்க...?

சின்ன தம்பி : சாய்ஸ்லே விட்டுட்டு வேற கேள்விக்கு போய்டுவேன். ஏதோ ரொமாண்டிக்
ஸ்டோரியா இருக்கும்னு வந்தா....ம்..

aren
02-01-2004, 12:22 AM
இளவரசிக்கு அந்த சேவகன் நிச்சயம் கிடைக்கமாட்டான் என்ற பட்சத்தில் இளவரிசி சேவகன் இன்னொருவளை திருமணம் செய்துகொள்ள சம்பதிக்க மாட்டாள். ஆகையால் அவள் சைகை செய்தது சேவகனை அந்த அறைக்குச் செல்லுமாறுதான். அந்த அறையில்தான் புலி இருக்கிறது என்று அர்த்தம். இப்படிப் பார்த்தால் என்னுடைய பதில் (இ) (1)

பாரதி
02-01-2004, 05:13 PM
லாவ்... இந்த மாதிரி எல்லாம் கூட நடந்ததாமா...?!

இளசு
02-01-2004, 05:58 PM
அன்பின் ஆரென் சொல்லும் பதிலே என் பதிலும்..

பொஸஸீவ்னஸ் எனப்படும் " எனக்கு மட்டுந்தான்" மனசு
காதலின் அம்சம்..

இளசு
02-01-2004, 06:06 PM
[quote]
சின்னதம்பி : அதிருக்கட்டும் லாவண்யா...நீங்க என்னா பதில் எழுதினீங்க...?

லாவண்யா : நான் எழுதுனது இருக்கட்டும்..நீங்களா இருந்தா என்னா எழுதுவீங்க...?

சின்ன தம்பி : சாய்ஸ்லே விட்டுட்டு வேற கேள்விக்கு போய்டுவேன். ஏதோ ரொமாண்டிக்
ஸ்டோரியா இருக்கும்னு வந்தா....ம்..


சி. த: லாவ், இளவரசி ஜாடை காட்டுவது " அங்கே போ" என்றுதானே இருக்கும், அங்கே போகாதே என்று இருக்காதல்லவா?

லாவ்: ம்ம்ம்ம்ம்ம்... இருக்கலாம்..

சி.த: அங்கிருப்பவள் இளவரசியை விட அழகுன்னு சொன்னீங்கல்ல..

லாவ் : ஆமாம் சின்னதம்பி..

சி.த: இளவரசி காதல்வயப்பட்ட ஒரு பெண் இல்லீங்களா?

லாவ் : ஆஹா , என்ன ஒரு லாஜிக் அலசல்.. ரெண்டு மூளை உங்களுக்கு..

சி.த: இருங்க, நடுவில் பேசினா எனக்கு சிந்தனை அறுந்திடும்..

லாவ் : சரி, பேசல..

லாவ்: அய்யய்யோ, என் அறிவைப்பத்தி கடைசியில் சொல்லுங்க...
ஆனாப் புகழாதீங்க.. அது எனக்குப் பிடிக்காது..

லாவ்: புரியுது... சொல்லுங்க

சித: அதால, ஆரென் சொன்னதுதான் சரீன்னு...

லாவ்: இதுக்கு நீங்க சாய்ஸிலியே விட்டிருக்கலாம்...
குடம் மூடி இருந்திருக்கும்.. இப்ப காலின்னு...........

சி.த: தலை - குடம் , நல்லாருக்கு லாவ்!

vasutha
04-01-2004, 08:26 PM
அந்த இளவரசி அவனை உண்மையாக காதலித்திருந்தால், அவனை புலி இருக்கும் அறைக்கு அனுப்பவே மாட்டாள். நான் காதலித்தவன் எனக்கு கிடைக்காவிட்டாலும், அவனது சந்தோசம் மட்டுமே எனக்கு முக்கியம் என்று நினைப்பதுவே (உண்மையான) காதல்.

நான் காதலித்தவன்(ள்) எனக்கு கிடைக்கவில்லை. அதனாலென்ன, நான் என் சுயநலம் மட்டும் கருதியா அவனை(ளை) விரும்பினேன்? அப்படி விரும்பியிருந்தால் அது காதலாகுமா? நான் அவன் மேல் காதல்வயப்பட்டது நிஜமெனில், அதற்கு காரணம் நான் அவனை மதித்திருக்கிறேன்..வியந்திருக்கிறேன்..இப்படி ஒருவருடன் எனது எஞ்சிய வாழ்நாளை கழித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எனது விருப்பமே காதல்.

எனது விருப்பம் நிறைவேறாது என்னும்பொழுது அவனை அழிக்க துணிவது எவ்வளவு குரூரம்! அப்பொழுது அவன் மீது நான் வைத்த பிரியம் எங்கு போயிற்று?

இங்கு எனக்கு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது..

'காதல் என்பது விட்டுக்கொடுத்தல்..சில சமயம் காதலையேகூட'

puppy
04-01-2004, 08:44 PM
வாங்க வசுதா...நச் பதில்...நிலா நமக்கு ஒன் மோர்......

நிலா
04-01-2004, 09:19 PM
ஆஹா ஆமாம் பப்பி நமது அணியின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது!வசுதா உங்கள் கருத்துகள் அருமை!பாராட்டுகள்!

lavanya
04-01-2004, 10:52 PM
இங்கு எனக்கு எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது..

'காதல் என்பது விட்டுக்கொடுத்தல்..சில சமயம் காதலையேகூட'



அடடே நீங்களும் நம்மாழ்வார்தானா..வாங்க வாங்க

sara
04-01-2004, 11:01 PM
வாவ்..! வசுதாவின் பதில் அருமை. அதற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தோழிகளையும் பார்க்கும் போது, இங்கு என் எண்ண அலைவரிசையோடு நிறைய பேர் ஒத்துப்போவார்கள் என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.!!

என் விருப்பமும் வசுதாவின் பதில் போலவே, அந்த இளவரசி அவனுக்கு அழகி இருக்கும் அறையையே காட்டி இருக்க வேண்டும் என்பதே..

aren
04-01-2004, 11:02 PM
வாங்க வசுதா...நச் பதில்...நிலா நமக்கு ஒன் மோர்......

மகளீர் அணிக்கு ஆட்கள் சேர்க்கிறீர்கள் போலிருக்கிறது. எல்லோரும் நன்றாக இருந்தால் சரிதான்.

இளசு
04-01-2004, 11:28 PM
ஒண்ணும் பேச்சு வர்ல் எனக்கு ஆரென் அவர்களே

(பசை பிரச்னை..)