PDA

View Full Version : மத்திய அரசே மரியாதை கா!ரௌத்திரன்
20-07-2012, 08:47 PM
(தமிழினத்தின் ஆணிவேரான பழந்தமிழர்களைக் கொன்று குவிக்க, இலங்கைக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்துகொண்டிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து எழுதியது)


சர்வாதி காரத்தின்
------சாரமே யாதென்று
-------------சரியாக விளக்கு கின்றார்!
------சதிகாரர் தம்மோடு
-------------கைகோத்து நடப்பதே
---------------------சமதர்மம் என்று ரைத்தார்!
நிர்வாக மென்பதே
------நாற்காலி கொண்டவர்
-------------நலங்காண என்று வைத்தார்!
------நாடான ஒன்றையே
-------------தாமாக வைத்ததால்
--------------------தம்நலம் பேணு கின்றார்!
தர்மாதி தர்மனே
------தசரத ராமனே!நின்
------------வனவாசம் முடிந்து மென்ன?
------நாற்காலி தோறுமே
------------நிலையாகிப் போனதே
-------------------செருப்புகளின் ஆட்சி இங்கே!குமரியில் தொடங்கிபுது
--------டெல்லியில் முடியவே
----------------குறைகளே நிறைக ளாச்சு!
--------குடிமக்கள் யாவரும்
----------------அடிமைகள் போலவே
------------------------அழுவதே வழக்க மாச்சு!
அமைதிக்கு வழியில்லை
--------அன்றாடம் இந்நாட்டில்
----------------ஆயிரம் அவல மாச்சு!
--------அத்தனையும் பார்த்துக்கொண்(டு)
----------------அமைதியாய் இருக்கவோர்
-------------------------அலங்கார அரசு மாச்சு!
இமயமே உருகுமே
--------இவர்நெஞ்சில் கனலுமோர்
---------------தீயுமே இறங்கி வந்தால்!
---------இம்மென்னு முன்னமே
---------------இதையுணர வேண்டுமே
-----------------------மத்திய அரசு நீயே!ஒட்டிய ஜீவனுமாய்
---------கட்டிய கோவணமாய்
----------------ஒடுங்கியே மக்கள் வாழ
---------ஒருவேளைச் சோற்றுக்கும்
----------------திருநாளை எதிர்பார்த்து
------------------------ஏங்குவார் துயரம் நீள
தொட்டுநீ தீர்க்குமோர்
---------துப்புமே இன்றியே
----------------தொடருமோர் ஆட்சி என்ன?
---------இந்தவோர் லட்சணத்தில்
----------------அயல்நாட்டைக் காக்கநீ
--------------------------ஓடுமோர் காட்சி என்ன?
கொட்டியே முழக்குமுன்
---------தட்டியே அடக்குமுன்
-----------------பாதையை மாற்று வாயே!
---------காலக் கருணைஎனுங்
------------------கடையிழையில் ஆடிடும்
--------------------------மத்திய அரசு நீயே!அருந்தமிழ் இனமதன்
---------ஆணிவேர் தனையிங்கு
-----------------அறுக்கவே துடிப்ப வர்க்கு
----------ஆயுதம் முதலாக
-----------------அரும்பொருள் யாவையும்
--------------------------வழங்குதல் நிறுத்திக் கொள்வாய்!
நறுந்தமிழ் இனந்தன்னை
---------நச்சுக்கிடப் பார்ப்போர்க்குத்
-----------------துணையாக இனிஇந் நாட்டில்
---------இலையொன்று அசைந்தாலும்
-----------------தலையொன்று உருளுமிது
--------------------------இறைவன்மீ தாணை கண்டாய்!
பொருந்துமோர் வழியறிந்து
---------திருந்தியுன் தவறறிந்து
------------------புத்தியை மாற்று வாயே!
---------புன்மைக்குத் துணைபோகும்
-------------------தன்மைக்குப் பெயர்போன
-----------------------------மத்திய அரசு நீயே!புல்லென்று நினைத்திரோ?
--------பைந்தமிழ் இனந்தன்னைப்
---------------பிடுங்கியே ஏறிவ தற்கு?
--------பிடுங்கிதான் பாருமே
---------------பின்னிங்கு சுழலுமோர்
---------------------பூமியே பிளவு பெறுமே!
வள்ளென்று குரைக்குமோர்
--------வழியற்றத் தெருநாய்க்கு
----------------வகையாக எலும்பு மிட்டால்
--------ஒருநாளிற் சலித்ததென
----------------முதலாளி முதுகிருக்கும்
-------------------------எலும்பினைப் பார்த்து நிற்கும்!
துள்ளென்று துள்ளியே
--------குதிக்கின்ற மத்திய
----------------அரசுன்றன் போக்கு மீதே!
---------துணியாதே! துணிந்தபின்
----------------தணியாதே உன்நெஞ்சு
-----------------------தீராத பகையும் வருமே!-------ரௌத்திரன்

vasikaran.g
29-07-2012, 08:04 AM
கவிதை காரம் .அதிகாரம் பற்றி அதி காரம் மை இருக்கிறது .

சுகந்தப்ரீதன்
30-07-2012, 04:00 PM
இதை வடமொழியில் மொழிபெயர்த்து டெல்லிக்கு ’டெலிவரி’ செஞ்சாலும் அவங்களுக்கு அது விளங்கவே விளங்காது.. அதை விளங்கி கொள்வதுதான் நமக்கு நல்லது.