PDA

View Full Version : நானும் நீயும்



PUTHUVAI PRABA
19-07-2012, 07:06 AM
கொட்டும் மழையில்-நான்
குடை விரிப்பதில்லை

கொளுத்தும் வெய்யிலில்-நான்
நிழல் தேடுவதில்லை

நடுங்கும் குளிரில்-நான்
ஸ்வெட்டர் அணிவதில்லை

புழுங்கும் அறையில்-நான்
விசிறி கேட்பதில்லை

குடையாய் நிழலாய்
ஸ்வெட்டராய் விசிறியாய்
என் தேவைக்கேற்றபடி
மாற்றம் கொண்டியங்குகிறாய்
நீ!


புதுவைப்பிரபா

கீதம்
21-07-2012, 07:12 AM
இணையின் தேவையறிந்து இயங்கும் அத்துணையின் தேவைகள் பூர்த்தியாவது எங்ஙனம்?

யோசிக்கவைக்கும் இக்கவிதையின் கனம் அதிகம். பாராட்டுகள் புதுவை பிரபா.

PUTHUVAI PRABA
21-07-2012, 12:18 PM
இணையின் தேவையறிந்து இயங்கும் அத்துணையின் தேவைகள் பூர்த்தியாவது எங்ஙனம்?

யோசிக்கவைக்கும் இக்கவிதையின் கனம் அதிகம். பாராட்டுகள் புதுவை பிரபா.

பாராட்டுக்களுக்கு நன்றி

சுகந்தப்ரீதன்
27-07-2012, 09:02 AM
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவனோ..?!:mini023:

மனதை பிரம்மிக்க வைக்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்..!!:icon_b:

PUTHUVAI PRABA
30-07-2012, 07:02 AM
நன்றி.. சுகந்தப்ரீதன் அவர்களே..