PDA

View Full Version : ஆராவமுதனும் தலை தீபாவளியும்.. ( நகைச்சு வைங்க..)கலைவேந்தன்
19-07-2012, 04:20 AM
நண்பர்களுக்கு ஆராவமுதனை நன்கு நினைவிருக்கலாம்.. அவனது கையில் ஓர் அற்புத விளக்கு கிடைத்து செந்தில் பூதம் செய்த அனைத்து பேருதவிகளும் இன்னபிற சேவைகளும் எந்த வித சேவை வரிகளுமின்றிச் செய்து வடிவாம்பாளை அடக்க வழியறியாது வளையில் மாட்டிய விஜயகாந்த் போல குரல்வளை நெரிபட தப்பித்து ஓடியது நினைவிருக்கலாம்.இல்லைன்னா மீண்டும் அந்த கதையை வாசிங்கப்பா..

http://www.tamilmantram.com/vb/showthread.php/20931-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-(-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-)?highlight=

(இது கண்டிப்பாக விளம்பரம் இல்லை என்று கானாடுகாத்தான் காத்தவராயன்மேல் பூனையிட்டுக் கூறிக்கொள்கிறேன். படிச்சா படிங்க படிக்காட்டி போங்க.. படிக்கலைன்னா உங்களை எந்த கடவுளும் சோகத்திலிருந்து காக்காது என கலைஞரிடம் கருத்து கடன் வாங்கி கூறிக்கொள்கிறேன்.)

இந்த வடிவுக்கு வளைகாப்பெல்லாம் நடந்து ஆராவமுதனுக்கு சுபுத்திரனாக அனுமந்த் பிறந்த கதையும் சுபுத்திரியாக சுந்தரா பிறந்த கதை எல்லாம் பிறகொரு நாள் விஸ்தாரமா விலாவாரியா சொல்லுவேன். அதுக்குள் ஆராவமுதனுக்கும் அந்த அற்புத வடிவாம்பாளுக்கும் நடந்த தலைதீபாவளியை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கிடலாம்னு..

என்ன தொடங்குவோமா நண்பர்களே..?

கலைவேந்தன்
19-07-2012, 04:28 AM
மு க ஸ்வாலினுக்கு கெண்ட்டக்கி சிக்கன் அவார்டு கிடைத்தது எத்தனை போற்றுதலுக்குரியதோ ஜெலிதா அம்மாவுக்கு அமெரிக்க பாராட்டு கிடைத்தது எத்தனை பாராட்டுக்குரியதோ அடியேன் அறியேன்.

ஆனால் ஆராவமுதனுக்கு கல்யாணம் ஆனது மிகப்பெரிய ஆறுதலுக்குரியது என்பதை மட்டும் அடியேன் அறிவேன்.

2 கிலோ உடைகளும் கால் கிலோ தலைமுடியும் கால் கிலோ அளவில் பர்ஸும் இன்னபிற வகையிலடங்கா முகவரி அட்டைகளும் அடங்க சுமார் 25 கிலோ அளவில் அந்தக்கால அறிவியல் கூடத்து எலும்புக்கூடாக அலைந்துகொண்டிருந்த ஆராவமுதனுக்கு ....

மூனரை கிலோ உடைகளும் இன்னபிற அலங்காரங்கள் , முக்கால் கிலோ சைஸில் ( பஹுடர் 300 கிராம் அடக்கம் ) இவை சேர்ந்து இரண்டரைக்கிலோ ஹைஹீல்ஸ் உடன் மினுங்க சுமார் 68 கிலோ தாஜ்மஹாலான வடிவாம்பாள் ( அதன் பின்னர் விலைவாசி போல அவள் எடை உயர்ந்தது வேறுகதை ) இணையாக அமைந்தது நிச்சயம் அந்த பிரபுநயன விளையாடல் ( சத்தியமா கடவுள் திருப்பார்வைங்க ) அன்றி வேறெதுவாக இருக்கமுடியும்..?

அவர்கள் திருமண கூத்துகளை எல்லாம் இங்கே விவரித்தால் ஆதவாவின் பின்னூட்டங்கள் போல ( நீளமாக )அமைந்துவிடுமென்பதால் அவற்றை சற்றே தவிர்த்து தலை தீபாவளி சரவெடிகளைப் பற்றி மட்டுமே கூறுகிறேன்.. சரியாப்பா..?

மூதறிஞரின் ஒன்லைன் வாக்கியமாகச் சொல்லனுமென்றால் எல்லாருக்கும் சொர்க்கத்தில் திருமணத்தை நிர்ணயிக்கும் அந்த எம்பெருமான் முருகன் அருளால் ஆராவதன் வடிவாம்பாள் திருமணம் சர்க்கஸில் நிர்ணயிக்கப்பட்டது.

திருமணம் புரட்டாசி மாதத்தில் நடைபெற்றதால் அடுத்து ஒரே மாதம் 3 நாட்களில் தலைதீபாவளி வந்தே விட்டது.

வடிவாம்பாளின் தகப்பனாரும் தாயாரும் திருச்சி சாரதாஸ் தி சென்னை சில்க்ஸ் ராமராஜ் காட்டன் வேஷ்டிகள் மற்றும் சர்ட்கள் போத்தீஸ் நல்லி சில்க்ஸ் பிரின்சஸ் ஜ்வல்ரி தி குமரன் ஸ்டோர்ஸ் போன்ற இன்னபிற மாபெரும் கடைகளுக்கெல்லாம் ஏறி இறங்காமல் கும்பகோணம் குறுக்குச்சந்தில் இருக்கும் முதலியார் ஜவுளிக்கடை என்னும் பழமை வாய்ந்த துணியகத்தில் சுமார் 1278 ரூபாய்க்கு ஆராவமுதனுக்கு அனைத்து துணிகளும் ( சங்குமார்க் லுங்கி டாண்டெக்ஸ் பனியன் ஜட்டி சகிதம் ) சுமார் 2346 ரூபாய் அளவில் வடிவாம்பாளுக்கு சேலைமற்றும் இன்னபிறா வகைகளும் வாங்கி வைத்துக்கொண்டு இடைத்தேர்தலுக்காகக் காத்திருக்கும் செத்துப்போன எம் எல் ஏ மனைவிபோல தம் மருமகனும் மகளும் தலை தீபாவளிக்கு வரும் நாளை வழிமேல் விழிவைத்து ( இந்த பழமை வாய்ந்த உதாரணத்துக்கு ஆதன் மன்னிப்பாராக ) காத்திருக்கத் தொடங்கினார்.

தொடர்ந்தே தீரும்..

கலைவேந்தன்
19-07-2012, 04:32 AM
தொடர்கிறது..

‘’ என்னங்க நம்ம மாப்பிளையும் பொண்ணும் தலைதீபாவளிக்கு வீட்டுக்கு வர்றச்சே உக்கார ஒரு நல்ல நாற்காலி இல்லைங்க... இருந்த ஓட்டை ஒடசலை வைச்சு வாடகைக்கு வாங்கி கல்யாணத்தை செய்துட்டோம்.. இப்ப இன்னுமா அப்படியே சமாளிக்க முடியும்..? என்ன சொல்றது நான்..? ‘’ வடிவாம்பாளின் தாயார் பூரணியம்மாள் தன் கணவர் வரதராஜை உசுப்பிக்கொண்டு இருந்தார்.

‘’ ஆமாம் .. பூரணி .. நம்ம மாப்பிள்ளை காலேஜுல வாத்தியாரா வேற இருக்கார். அவரு கவுரதை பார்க்கவேண்டாமா...?’’

‘’ என்னங்க சொல்றீங்க...? நம்ம மாப்பிள்ளை கவ்வுரதை நீங்க ஏன் பார்க்கனும்..? அவரைத்தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கப்போறீங்களா...? ‘’ பூரணியம்மாள் வளையில் மாட்டிய பிரக்னெண்ட் எலி போல கத்தினாள்..

பூரணி அம்மாளுக்கு காது கொஞ்சம் மந்தம்.. வலது பக்கமாக நின்று பேசினால் நல்லா காதுகேக்கும். இடது பக்கம் நின்று பேய்த்தினாலும் பேய்க்கத்து கத்தினாலும் பயன் பூஜ்ஜியம் தான்.

முதன் முறையாக கல்யாணத்தரகர் வந்து ஆராவமுதன் கல்லூரியில் ப்ரொஃப்சராக இருக்கிறார் என்றபோது ஏதோ கொச கொசவென்று காதில் விழுந்ததால் என்னது மாப்பிள்ளை மொச பிடிக்கிறாரா என்று ஒரு பிலாக்கணம் வைத்தவங்க தான் இந்த பூரணி அம்மா..

பிறகு தரகர் பேராசிரியர் என்று தமிழில் சொன்னபோதும் அந்தம்மாள் ஜெலிதாவால் துரத்தப்பட்ட சுசி போல புலம்பி மூக்கைச் சிந்தினார்..

என்ன ஏது என்று வரது அவரைக்கேட்டபோது மூக்கைச்சிந்தி அவர் வேட்டியில் துடைத்துவிட்டு ‘’ போயும் போயும் ஒரு பேராசைக்காரருக்கா எம்பொண்ணைக் கட்டிக்கொடுக்கனும்.. ‘’ என்று அழுதாள்.

பிறகு நம்மூரு சின்ன ஸ்கூல் வாத்தியார் போல இது பெரிய ஸ்கூல் வாத்தியார் என்று விளங்கவைத்தபின் இடைத்தேர்தலில் ஜெயித்த நம்ம கைகோ போல முகம் மலர்ந்து என்ன சொல்லிக்கொடுக்காரு நம்ம மாப்பிள்ளை என்று ஆர்வமாகக் கேட்டாள்.

அப்போதுதான் பாட்டனி ப்ரொஃப்சரை எப்படி தமிழ்ல சொல்லி வெளங்கவைக்கிறது இந்த கிழவிக்குன்னு அலுத்துக்கொண்டு இந்த மரம் செடி கொடி வேர் எல்லாம் பத்தி சொல்லித்தரவர் ... வேராசிரியர்னு சொல்லிக்கலாம்.. நல்ல சம்பளம் தான்.. என்று தாமரை பிரச்சினைகளை புரியவைப்பது போல பக்குவமாக புரியவைத்தார் தரகர்.

அத்தகு வேராசிரிய மாப்பிள்ளை... அடச்சே... நமக்கு என்னாச்சு ..பேராசிரிய மாப்பிள்ளை வந்தால் உக்கார ஒரு நாற்காலி அழகா செய்துவைக்கவேண்டாமா..?

பூரணியம்மாளின் ஆதங்கம் சரியாகப்படவே நாற்காலியைப்பற்றி கவலைப்படும் நம்ம கலைஞர் போலவே கவலையுறத் தொடங்கினார் நமது வரதராஜு..

அவஸ்தைகள் தொடரும்...

கலைவேந்தன்
19-07-2012, 04:34 AM
தொடர்கிறது..

வரதராஜு புதியதாக நாற்காலி செய்வதைவிட ஏற்கனவே இருப்பதை வெட்டி ஒட்டினால் என்ன என்று தோன்றியது. இப்போதெல்லாம் சொந்தமாக செய்யும் பொருளுக்கு எங்கே மதிப்பு இருக்கு..? வெட்டி ஒட்டும் பணிகளுக்குதானே மதிப்பு இருக்கு என்று பக்கத்துவீட்டு அம்புஜம் சொன்ன யோசனையை சோனியா சொன்னதை சிரமேற்கொள்ளும் மன்மோகன் சிங்கைப்போல தலையாட்டி ஏற்றுக்கொண்ட வரதராஜு இருக்கும் நாற்காலியை ஃபெவிகால் கொண்டு நாலுகால் ஒட்டி அருமையான நாற்காலி செய்தார்.

அதன்மேல் பலமுறை ஏறி அமர்ந்தும் இப்படி அப்படி ஆட்டியும் பூரணி அம்மாள் தனது பூசனிஉடம்போடு சோதனைசெய்துபார்த்து ஓகே என்று சொன்னதும் திருப்தி அடைந்தார். யோசனை சொன்ன பார்வதியும் வந்து முதல்சோதனையோட்டம் செய்து அந்த நாற்காலியை ஓபன் செரமணியும் செய்து ஓகேயும் சொன்னார்.

இதற்கிடையில் வடிவாம்பாளின் தங்கை ஜகதாம்பாளும் தனது மாமா ஆராவமுதன் வரப்போகும் நாளை எதிர்பார்த்துக்காத்துக்கிடந்தாள். அதற்கு காரணம் தன் உயிராக நேசிக்கும் அக்கா வரப்போவது மட்டும் என்று சொன்னால் அது மஞ்சள் பொய்யாகும்.

உண்மையான காரணம் என்ன என்றால் ஆராவமுதன் மேல் ரொம்பவே பாசம் வந்துவிட்டது ஜகதாவுக்கு. நடமாடும் பஞ்சப்பூனை போல எலும்பும்தோலுமாய் இருக்கும் ஆராவமுதன் மேல் பாசம் ஏன் வந்தது..? அதற்குக் காரணம் இருக்கிறது. ஆராவமுதனின் ஓர் ஒன்றுவிட்டதம்பி ராகவேந்திரன் அறிமுகம் வடிவாம்பாளின் திருமணத்தின் போது ஜகதாவுக்கு அறிமுகம் ஆகி இருந்தது. இருவரும் ஒரே மணி நேரத்தில் ஒரு யுகக்காதலை ஒன்றாக அனுபவித்ததால் அவரகள் திருமணத்துக்கு ஆராவமுதனின் உதவி ரெம்ப தேவைப்பட்டது. (இது சைட் ட்ராக். சும்மா சொல்லி வைத்தேன். பின்னால உதவுமில்ல...?)

அக ஒரு வழியாக அந்த தலைதீபாவளித்திருநாளும் வந்தே விட்டது. முதல் நாள் அதிகாலை 6 மணிக்கு வடிவாம்பாளும் ஆராவமுதனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினார்கள். அவர்களைப்பார்த்து வரவேற்க வாசலுக்கு வந்த வரதராஜு பூரணி அம்மாள் மற்றும் ஜகதாம்பாள் மூவரும் வியப்பில் வாய் பிளந்தனர்..


ஒரு நாலு பின்னூட்டம் கிடைத்தபிறகு.. தொடரும்..!

தாமரை
19-07-2012, 07:56 AM
ஜோரு ஜோருதான்.. இப்படி நகைச்சுவைக் கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு...

ஆறாவது பூதம் .. அதாங்க ஆராவமுதன் வடிவு ஜோடி கலக்குதுங்கோ..

தலை தீபாவளியை மிஸ் பண்ணிய பாவாத்மாவாகிய என் போன்றோரின் மன வருத்தத்தை மாற்றும் மருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.(கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்னால் தீபாவளி.. அடுத்த வருஷம் வரமுடியலை. அதுக்கு அடுத்த இரண்டு வருஷமும் வரமுடியலை)

Keelai Naadaan
19-07-2012, 01:49 PM
ஜோரு ஜோருதான்.. இப்படி நகைச்சுவைக் கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு...நானும் இதையே சொல்கிறேன்

முன்பு பாக்கியம் ராமசாமி அவர்களின் கதைகளை படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது போல் இருக்கிறது. பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
19-07-2012, 01:55 PM
அடடா.. உங்களின் ஏக்கம் புரிகிறது தாமரை...

முதல் தீபாவளியில் மாமனாரும் மாமியாரும் மச்சினியும் விழுந்து விழுந்து கவனிக்கும் சவரட்சனை என்ன ..?

லேசாக காதை குடைந்தாலும் என்னாச்சுங்க மாப்பிள்ளை.. என்று ஓடிவரும் மாமனாரின் கரிசனம் என்ன..?

குளிக்க வெந்நீர் வைத்துவிட்டு அதை பலமுறை தொட்டு தொட்டு பதமாக இருக்கிறதா என்று கவனிக்கும் மாமியாரின் கரிசனம் என்ன..?

டி வியை ஆன் பண்ணும் போது ஓடிவந்து நம் மடிமேல் உட்காராத குறையாக நெருங்கி வந்து உட்கார்ந்து என்ன சேனல் மாமா பிடிக்கும் என்று கண்களில் அன்பு ஒழுக கேட்கும் மச்சினியின் பாசம் என்ன..?

அக்கம் பக்கத்தினர் அடிக்கடி எட்டிப்பார்த்து உங்க மாப்பிள்ளை கருப்பா இருந்தாலும் களையா இருக்கார்டி என்று மாமியாரின் காதுகடிக்கும் போது பெருமிதத்துடன் லுக் விடும் மாமியாரின் பார்வை என்ன..?

திருட்டு தம் அடிக்க மாடிக்குப்போகும் போது மோப்பம் பிடித்து மேலே வந்து என்னமாமா இதெல்லாம் பழக்கம் உண்டான்னு கிறங்கும் படி கேட்கும் மச்சினியின் வியப்பு கலந்த அதே சமயம் கொஞ்சம் - கொஞ்சமே கொஞ்சம் - லைட்டா காதல் ஒழுக பார்க்கும் மச்சினியின் அருகாமை அருமை என்ன..?

இப்படி என்ன என்ன என்ன.. என்று சுந்தராம்பாள் போல கேட்டுக்கொண்டே போகலாம்..

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமப்பா..

( தாமரையின் காதில் புகை வருவதாகத் தெரிகிறதே.. ;) )

உங்கள் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் நன்றி தாமரை..!

கலைவேந்தன்
19-07-2012, 01:59 PM
நானும் இதையே சொல்கிறேன்

முன்பு பாக்கியம் ராமசாமி அவர்களின் கதைகளை படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது போல் இருக்கிறது. பாராட்டுக்கள்.

பாக்கியம் ராமசாமி எங்கே..? டெல்லி ராமசாமி நான் எங்கே..? அவிகளை எல்லாம் ஏணிவைச்சாலும் எட்டிப்பிடிக்க முடியாதுங்க.. ஒருவழியா ரிடையர்மெண்ட் வாங்கிக்கிட்டு முழுநேரம் எழுத்தாளனா மாறும் உத்தேசம் இருக்கு.. இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்..!

நன்றி கீழை நாடான்..

மதுரை மைந்தன்
19-07-2012, 08:44 PM
ஒரு நல்ல நகைசுவை கதையை வெகு நாட்களுக்கு பிறகு படிக்கும் வாய்ப்பு தந்த உங்களுக்கு மிக்க நன்றி கலை வேந்தரே!

கலைவேந்தன்
20-07-2012, 04:29 AM
தொடர்ச்சி...

வரத ராஜு பூரணி அம்மாள் மற்றும் ஜகதா ஆகிய மூவரும் வியப்புடன் வாய்பிளந்ததில் வியப்பில்லை.

காரணம் இருந்தது. அன்பே வா எம்ஜிஆர் போல எப்போதும் கூலிங் கிளாஸ் பெல்ஸ் பேண்ட் தோள்பட்டையில் ஃப்ளாப் வைத்த சர்ட்டுடன் வளைய வரும் நமது ஆராவமுதன் பேராசிரியர் அன்று ராம்ராஜ் வேட்டி விளம்பரத்தில் வரும் ஜெயராம் ரேஞ்சுக்கு பட்டு வேஷ்டி பட்டு சொக்காய் சோக்காய் போட்டுக்கொண்டதுடன் பிஜெபி ஜோஷி தோளில் போடும் மூவர்ண அங்கவஸ்திரம் போல் ஒன்றை இட்டுக்கொண்டு அமைதியாக ஆராவமுதன் நின்றது கண்கொள்ளாக் காட்சியென்றால் நம்ம வடிவு நின்ன ஸ்டைல் இருக்கே.. தூள்மா..

ஃபேன்சி ட்ரெஸ் போட்டிகளில் வரும் பெண்களைப்போல அட்டகாசமான சூடிதாருடன் கைகளில் கஃப் வைத்து முகத்தை விட பெரிய கூலிங்க்ளாஸ் போட்டுக்கொண்டு வடிவுக்கரசிக்கு சூடிதார் போட்டது போல வந்து நின்றாள் வடிவு.

இது என்ன தலைகீழாக இருக்கிறதே என்று வியந்தாலும் வாய் நிறைய புன்னகையுடன் வாம்மா .. வாங்க மாப்பிள்ளை என்றுவாயாற வரவேற்றனர்.

ஜகதாவுக்கோ தலைகால் புரியவில்லை. ஓமக்குச்சி நரசிம்மன் போல இருந்த தனது மாமா இன்றும் ஒல்லியாக கறுப்பாக களையாக இருந்தாலும் எஜமான் ரஜினி ரேஞ்சுக்கு கலக்கலாக இருந்தது ரொம்ப பிடித்திருந்தது.

ஒரு கணம் நம்ம மாமாவுக்கு நம்ம பூசனி அக்கா பொருத்தமில்லையோ என்று கூட நினைத்தாள். மெலிதாக இருக்கும் தான் தான் பொருத்தம் போல நினைத்தாள்.( இந்த சம்பவங்கள் நடந்த பொழுது தேவதர்ஷினி போல ஒல்லியாக ஜகதா இருந்தாள். இப்போது இரண்டு குழந்தைகள் பெற்று நகைச்சுவை நடிகை ஆர்த்திபோல இருக்கிறாள் என்பதெல்லாம் வேறு கதை.)

புதிதாக தம் தொகுதிக்கு வருகை தரும் எம் எல் ஏ போல அலட்டலுடன் அங்கும் இங்கும் பார்த்து கையெடுத்துக் கும்பிடாத குறையா ஒரு கெத்துடன் நுழைந்த ஆராவமுதன் ஸ்டைலாக தனது வெள்ளைக் கலர் செருப்பை கழற்றியவன் எப்படி இருக்கீங்க மாமா அத்தை என்று கேட்டுவிட்டு பதிலைக்கூட எதிர்பாராமல் ஜகதாவை என்ன ஜகா எப்டி இருக்கே..? உன் ஸ்பின்னிங் ஒர்க் எப்படி போயிண்டிருக்கு என்று கரிசனத்துடன் கேட்டான்.

உள்ளே நுழைந்த ஆரா மற்றும் வடிவு அமர்வதற்காக நாற்காலிகளைக் காட்டிய வரத ராஜு கவனமாக ஒட்டு போட்ட நாற்காலியை மாப்பிள்ளைக்கும் கொஞ்சம் தெம்பாக இருந்த நாற்காலியை வடிவுக்கும் கை காட்டினார். இதைக் கவனியாத ஆரா நல்ல நாற்காலியில் சென்று அமர்ந்தான். மிச்சம் இருந்த இன்னொரு மியூ’சிக்கல்’ சேரில் நம்ம வடிவு உக்காந்தது தான் தாமதம்...

பொத்தென்று ஒரு பறங்கிக்காயை தரையில் போட்டால் ஒரு சத்தம் வருமே கேட்டிருக்கிறீர்களா..?

அதே அதே.. அதே சத்தம் தான். வடிவு ஐயோ அம்மா என்று அலறி தரையில் விழுந்தாள்..


வலுக்கட்டாயமாக தொடரும்..

கீதம்
20-07-2012, 08:43 AM
அரசியல்வாதிகளிலிருந்து தமிழ்மன்ற வாதிகள் வரை ஒருத்தரையும் விட்டுவைக்க மனமில்லைன்னு புரியிது.

ரொம்ப சரளமா நகைச்சுவையை அள்ளிவீசிட்டுப் போய்கிட்டே இருக்கீங்க. பிரமாதம்.

ஆராவமுதனின் அறிமுகப் படலக் கதையை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டுப் பின் கருத்திடுவேன்.

உண்மையான காரணம் என்ன என்றால் ஆராவமுதன் மேல் ரொம்பவே பாசம் வந்துவிட்டது ஜகதாவுக்கு. நடமாடும் பஞ்சப்பூனை போல எலும்பும்தோலுமாய் இருக்கும் ஆராவமுதன் மேல் பாசம் ஏன் வந்தது..? அதற்குக் காரணம் இருக்கிறது. ஆராவமுதனின் ஓர் ஒன்றுவிட்டதம்பி ராகவேந்திரன் அறிமுகம் வடிவாம்பாளின் திருமணத்தின் போது ஜகதாவுக்கு அறிமுகம் ஆகி இருந்தது. இருவரும் ஒரே மணி நேரத்தில் ஒரு யுகக்காதலை ஒன்றாக அனுபவித்ததால் அவரகள் திருமணத்துக்கு ஆராவமுதனின் உதவி ரெம்ப தேவைப்பட்டது. (இது சைட் ட்ராக். சும்மா சொல்லி வைத்தேன். பின்னால உதவுமில்ல...?)


ஒரு நாலு பின்னூட்டம் கிடைத்தபிறகு.. தொடரும்..!

ஆனாலும் உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு. :) பாராட்டுகள். தொடருங்கள்.

சுகந்தப்ரீதன்
20-07-2012, 10:01 AM
ஹைய்யா... இப்படி நையாண்டி கலந்து கலக்குறதுன்னா நமக்கும் ரொம்ப புடிக்கும்ண்ணா... அதுவும் ஆராவமுதனை வச்சி ஆராவரமா நம்மூர் அன்னக்காவடிகளை கலாய்க்கிறது எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்குண்ணா..!!:)

நாங்களும் வலுக்கட்டாயமாய் தொடர்வோம்..!!:icon_b:

Keelai Naadaan
20-07-2012, 02:49 PM
முதல் தீபாவளியில் மாமனாரும் மாமியாரும் மச்சினியும் விழுந்து விழுந்து கவனிக்கும் சவரட்சனை என்ன ..?

லேசாக காதை குடைந்தாலும் என்னாச்சுங்க மாப்பிள்ளை.. என்று ஓடிவரும் மாமனாரின் கரிசனம் என்ன..?

குளிக்க வெந்நீர் வைத்துவிட்டு அதை பலமுறை தொட்டு தொட்டு பதமாக இருக்கிறதா என்று கவனிக்கும் மாமியாரின் கரிசனம் என்ன..?

டி வியை ஆன் பண்ணும் போது ஓடிவந்து நம் மடிமேல் உட்காராத குறையாக நெருங்கி வந்து உட்கார்ந்து என்ன சேனல் மாமா பிடிக்கும் என்று கண்களில் அன்பு ஒழுக கேட்கும் மச்சினியின் பாசம் என்ன..?

அக்கம் பக்கத்தினர் அடிக்கடி எட்டிப்பார்த்து உங்க மாப்பிள்ளை கருப்பா இருந்தாலும் களையா இருக்கார்டி என்று மாமியாரின் காதுகடிக்கும் போது பெருமிதத்துடன் லுக் விடும் மாமியாரின் பார்வை என்ன..?

திருட்டு தம் அடிக்க மாடிக்குப்போகும் போது மோப்பம் பிடித்து மேலே வந்து என்னமாமா இதெல்லாம் பழக்கம் உண்டான்னு கிறங்கும் படி கேட்கும் மச்சினியின் வியப்பு கலந்த அதே சமயம் கொஞ்சம் - கொஞ்சமே கொஞ்சம் - லைட்டா காதல் ஒழுக பார்க்கும் மச்சினியின் அருகாமை அருமை என்ன..?


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே நண்பனே...

என பாட வைத்து விட்டீர்கள். நல்ல வர்ணனை. பாராட்டுக்கள்.:icon_b:

Keelai Naadaan
20-07-2012, 02:51 PM
ரிடையர்மெண்ட் வாங்கிக்கிட்டு முழுநேரம் எழுத்தாளனா மாறும் உத்தேசம் இருக்கு.. இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்..!


தங்கள் முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
20-07-2012, 04:05 PM
பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி. பதுங்கிப்பார்வையிட்ட அந்த ஒருவருக்கும் நன்றி..! :)