PDA

View Full Version : என் பெயர் இறைவன்



"பொத்தனூர்"பிரபு
01-06-2012, 06:57 AM
http://illiweb.com/fa/empty.gif என் பெயர் இறைவன் (http://www.tamilmantram.com/t85467-topic#805133)






முழு அளவு காட்டுhttp://1.bp.blogspot.com/-uWuFlrTaZV0/T8hLQ6CyzUI/AAAAAAAADjc/BiXuRuygMwA/s800/PRABU-KADAVUL.jpg


அந்தக் கோவிலை ஒட்டிய
முட்புதரில் இருந்து
முனகல் சத்தம் கேட்டது

கையும் காலும் கட்டப்பட்டு
காயங்களுடன் கிடந்தவனிடம்
கட்டவிழ்த்தவரே வினவினேன்
"யாரப்பா தாக்கியது உன்னை " என்று

"தப்பை தட்டிக்கேட்டதால்
தாக்கினான் அந்த பூசாரி "-என்றவனிடம்

நீ யாரப்பா என்றேன்..
தட்டுத் தடுமாறி எழுத்தவன்
"என் பெயர் இறைவன்" என்று
சொல்லிவிட்டு ஓடத்துவங்கினான்

http://priyamudan-prabu.blogspot.sg/2012/06/blog-post.html

பிரியமுடன் பிரபு......

சிவா.ஜி
01-06-2012, 08:08 AM
கையாலாகதவன் இறைவனாவானா?....கீழ்பாக்கம் கேஸாய் இருக்குமோ....பிரபு?

வாழ்த்துக்கள்.

செல்வா
01-06-2012, 03:25 PM
பாவம் கடவுள். எத்தனை நாட்கள் தான் பொறுத்திருப்பது. தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடியிருப்பார் போலும்.

"பொத்தனூர்"பிரபு
04-06-2012, 09:37 AM
.....:)

இராஜிசங்கர்
04-06-2012, 10:26 AM
அருமை பிரபு

ராஜா
19-07-2012, 03:14 AM
கம்முன்னு இருக்கறவரைக்கும்தான் கடவுளுக்குக்கூட மரியாதை.. தட்டிக்கேட்டால், கட்டிப்போட்டுடுவாய்ங்கன்னு புரியுது..

வித்தியாசமான முயற்சி பிரபு..!

"பொத்தனூர்"பிரபு
19-07-2012, 04:11 AM
கம்முன்னு இருக்கறவரைக்கும்தான் கடவுளுக்குக்கூட மரியாதை.. தட்டிக்கேட்டால், கட்டிப்போட்டுடுவாய்ங்கன்னு புரியுது..

வித்தியாசமான முயற்சி பிரபு..!

நன்றிங்க

M.Jagadeesan
19-07-2012, 05:47 AM
இறைவன் பூசாரியைத் தட்டிக் கேட்டாரா அல்லது தட்டில் உள்ளதைக் கேட்டாரா? தட்டில் உள்ளதைக் கேட்டிருப்பார். பூசாரி தாக்கிவிட்டார்.

கவிதையும், கற்பனையும் சிந்திக்கத் தூண்டுபவை. பாராட்டுக்கள் பிரபு.