PDA

View Full Version : இலக்கியமும் நடைமுறையும்......



ரௌத்திரன்
17-07-2012, 09:45 PM
பச்சைப் புல்வெளியில்
இரண்டு
இச்சைக் கிளிகள்...

அவர்கள்
கணிப்பொறி யுகத்துக்
காதலர்கள்!

அவளது
தேகமலரின்
தேன்குடிக்க
ஆயத்தமாயின
அவனது
விரல்கள் என்னும்
வண்டுகள்....

அவளோ
தன்
வாலிபத்தின்
வாலிப்பைப் போலவே
நாணத்தையும் மறைக்க முடியாதவளாய்
நெளிந்தாள்!

"பூவே!

பூமியில்
படைக்கப்பட்ட
அத்தனை
அழகிகளுக்கும் செலவழித்தது போக
பிரம்மன்
தன்
"மிச்சக் கற்பனையில்" வடித்த
உச்சக் கவிதையே!



இதோ!
என் விழிகள்!

இவற்றில்
இன்னும் இன்னும்
சொர்க்கச் சொப்பனங்கள்
சுரக்கவிடு...

இதோ!
என் உயிர்!

உன்
பார்வைப்
பட்டரையில்
இன்னும் கொஞ்சம் மெருகேற்று...."

கற்பனையைத் துப்பிக் கொண்டே
கனியிதழ் உறியச் சென்றான்!

உந்தி வந்த
அவன் உதடுகளை
முந்தி வந்து
அவள் தன் விரலால் தடுத்தபடி,

"கண்களோடு நிற்பதே
காதல் என்று

இலக்கியம்
இயம்புகிறதே!

உங்கள் பதிலென்ன?
உரைப்பீர்!" என்றாள்.

"உண்மைதான்
உயிரே!


ஆனால்,
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள் என்று
கம்பன்
கவியுரைத்தது
கடவுளர் காதலைத்தான்.

மனிதர் காதலை அல்ல!

நாம் மனிதர்கள்!

ஆகையால்,
நாம்
கண்களோடு நிற்பது
கூடாது காதலி!

வா!

"கர்ப்பம்வரை போவோம்....."





-----------------ரௌத்திரன்