PDA

View Full Version : ராமன் ஆண்மையற்றவன்!ரௌத்திரன்
17-07-2012, 02:25 AM
(ஒரு விலைமகள் என்னை ஆசையோடு நெருங்கிய போது
நான் உற்ற உணவுர்வுகளும், அடைந்த அவஸ்தைகளும்,
நடந்த நிஜங்களும் கவிதையாகி இருக்கிறது)


வேண்டாம்!

தயவு செய்து
என்னை நெருங்காதே!

நீ
அழகுதான்!

அதனால்தான்
அச்சப்படுகிறேன்....


உன்
நீல விழிகொண்டு
நீளப் பார்வை பார்க்காதே!

நான்
அவ்வப்போது அருந்தும்
விஸ்கியைவிட
உன்
விழியில் போதை அதிகமாக இருக்கிறது....


வேண்டாம்!
சொன்னால் கேள்!

ஒரு
கூலிக்காரனின்
காசைப் போல

சிறுகச் சிறுக
சேமித்த இந்திரியத்தைச்
சில நிமிடங்களில்
செலவழிக்கச் செய்துவிடாதே.....


புரிகிறது!

நீ சீதையுமல்ல
இது அசோக வனமுமல்ல!

ஆனால்
நிச்சயம்
நான் ராவணன் ஆயிற்றே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


உன்
தேகம் தீண்டினால்
காமன் கணைகளுக்கும்
காய்ச்சலடிக்குமே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


உன்
கட்டழகைக்
கண்டுவிட்டால்
இவன் ரெட்டைக் கண்களில் என்ன
சிவனின் நெற்றிக் கண்ணிலும்
காமம் வழியுமே....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


வேண்டாம்!
சொன்னால் கேள்!

வேதத்தின்
வேர்களைத் துழாவிய
விசுவாமித்திரன் கூட
விவேகம் இழந்த இடம் பெண்...

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


துறவியின்
தூய்மையைக் கூட
துடைத்து எறிந்துவிடும் ஆற்றல்
ஒரு
பெண்ணின் முந்தானைக்கு உண்டு....

அதனால்தான்
அச்சப்படுகிறேன்!


புழுதியைக் கூடப்
பூமணக்கச் செய்யும்
பாதங்களால்
என் கால்களை அழுத்தாதே!

உன் கால்களுக்குக் கீழே
என்
ஆண்மை பீடமே
அமுங்குவதாய்ப் படுகிறது எனக்கு....


உன்
புடவைவீசும்
புயல்காற்றில்
என்
புலன்களென்னும்
பூவனத்தை உதிர்த்துவிடாதே...


ஓ!
வேண்டாம்!
வேண்டாம்!

உன்
இடையைப் போல
இளைத்துக்கொண்டே வருகிறது
என் வைரக்கியம்....

ராவணனாய் வாழ்ந்து
ரணமானது போதும்.

இனியேனும்
ராமனாய் வாழ ஆசைப்படுகிறேன்!


சொன்னால் கேள்!

வரம் கிடைக்கும் நேரத்தில்
தவத்தைக் கலைத்துவிடாதே!


ஐயோ! போதும்!

ஆதவனின் கதிர்க்கரங்கள் தீண்டியும்
அவிழாத
அதிசயத் தாமரைகளாய்

என்
முகத்தில் அழுந்தும்
மதர்த்த நின்
முலைகளை எடு!

மூச்சு
முட்டுகிறது எனக்கு.....


விலகு...
விலகிவிடு...

வருகிறேன்!


ராவணன்
ராமனாகி விட்ட சந்தோஷத்தில்
நடக்க ஆரம்பித்தேன்.

ஆனால்
அந்த ஆனந்தத்தை
அடுத்த நொடியே
அடித்து நொறுக்கியது

என்
உள்மனம்
உதிர்த்த செய்தி!

"ராமனாகிவிட்டதாய்
ரொம்பப் பெருமைப் படாதே!

அவள் நினைத்திருப்பாள்
"சீ!
இவன் ஆண்மகன் தானா?""


ஒ!
ராமன் எனில்
ஆண்மையற்றவனோ?
-------------ரௌத்திரன்

M.Jagadeesan
17-07-2012, 03:04 AM
வாய்ப்புக் கிடைக்காத காரணத்தினால்தான் இன்று 99 % ஆண்கள் இராமனாக இருக்கின்றார்கள். ரௌத்திரனுக்குப் பாராட்டுக்கள்.

தாமரை
17-07-2012, 04:23 AM
எனக்கொரு சந்தேகம். இலட்சுமணன் கூட தன் மனைவியைத் தவிர யாரையும் ஏறிட்டும் பார்க்கலையே. அவருக்கும் சூர்ப்பனகை போன்றவர்களால் நெருக்கடி வந்ததே.. ஏன் அவரை உதாரணம் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்?

M.Jagadeesan
17-07-2012, 04:55 AM
எனக்கொரு சந்தேகம். இலட்சுமணன் கூட தன் மனைவியைத் தவிர யாரையும் ஏறிட்டும் பார்க்கலையே. அவருக்கும் சூர்ப்பனகை போன்றவர்களால் நெருக்கடி வந்ததே.. ஏன் அவரை உதாரணம் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்?

தசரதன் குடும்பத்தில் , தசரதனைத் தவிர , மற்ற அனைவருமே ஏகபத்தினி விரதர்கள்தாம். அவர்களுக்கு ஏற்றம் கொடுத்துப் பேசினால் , இராமனுடைய பெருமைக்கு முக்கியத்துவம் இருக்காது. காவிய நாயகனை மட்டுமே உயர்த்திப் பேசுவது காவிய மரபாகும் .

தாமரை
17-07-2012, 05:34 AM
எல்லோரும் தலைவனாகத் துடிப்பதும் இதனால்தானோ என்னவோ?

ரௌத்திரன்
17-07-2012, 01:34 PM
நீங்கள் சொல்வது சரிதான்!
ஆனால், ஏக பத்தினி விரதன் என்றாலே உலகம் உரைப்பது ராமன் ஒருவனைத்தானே!
எவரும் லட்சுமனனைக் கூறுவதில்லையே!

பத்தினி என்றால் உடனே கண்ணகி என்பது போல!

லஞ்சம் வாங்க மாட்டேன் என்பது ஒரு நற்கொள்கை. ஆனால் அப்படிச் சொல்பவனை உலகம் நியாயவான் என்று போற்றுவதில்லை.மாறாக பிழைக்கத் தெரியாதவன் என்று பரிகசிக்கிறது. அதைப்போல

ஒழுக்கமாக வாழ்வதிலும் உள்ள பாதகத்திற்கு இக்கவிதை ஒரு உதாரணம்.

வரதட்சணை கேட்பவனை உலகம் பேராசைக் காரன் என் கிறது. வேண்டாம் என்று எவனேனும் பெருந்தன்மையோடு சொன்னால் "என்ன கொளாறு?" என்று ஆராய ஆரம்பிக்கிறது. இதுதான் இன்றைய உலகம்---------ரெளத்திரன்

சிவா.ஜி
17-07-2012, 01:48 PM
சந்தர்ப்பம் கிடைக்காததால் ராமனாய் இருந்து புண்ணியமில்லை....சந்தர்ப்பம் கிடைத்தும் ராமனாய் இருப்பதே பெருமை.

பெண்ணை அடக்குவதல்ல ஆண்மை
தன்னை அடக்குவதே மேன்மை.

வாழ்த்துக்கள் ரௌத்திரன்.

கலைவேந்தன்
17-07-2012, 04:37 PM
அருமையான கவிதைகளை எழுதிய ரௌத்திரனிடமிருந்து ஓர் அருவெருக்கத்தக்க ஒரு கவிதை.

என்னதான் எதார்த்தத்தைச் சொல்வதாய் பீற்றிக்கொண்டாலும் என்னதான் எதுகை மோனையோடு கைகோர்த்து வந்தாலும் கவிதையின் கரு குமட்டுகிறது.

நல்ல கவிதைகளைப் பாராட்டிய நானே தான் இதுபோன்ற அவசியமற்ற கவிதையைத் தூற்றுகிறேன்.

இக்கவிதை மூலம் எதையாவது சாதித்துவிட்டதாய் நெஞ்சை நிமிர்த்துவதானால் தங்களின் கவித்திறமைக்கு அது களங்கமன்றி வேறெதும் இல்லை.

இது முழுக்க முழுக்க என் கருத்தே.. இதற்கு முன் பாராட்டியவர்களைக் குறித்தான எந்த வித மறுப்பும் இல்லை.

ஆதி
20-07-2012, 05:56 PM
ரௌத்திரன் அவர்களுக்கு, தவறாக என்ன மாட்டீர்கள் என்று ஒரு கருத்தை சொல்ல ஆசைப்படுகிறேன், உங்கள் கவிதைகள் அனைத்தும் அப்படியே வைரமுத்துவின் பாணியை அச்சடித்தாற் போல உள்ளன, அது உங்களின் சுயத்திறமையை மங்க செய்துவிடும், ஆதலால் தயவு செய்து பாணியை மாற்ற முயற்சியுங்கள்

உங்கள் கவிதை வரிகள் மிக அருமை ஆனால் அவை எனக்கு வைரமுத்துவை ஞாபகமூட்டுகின்றன, உங்களை ரசிக்க நீங்களே தடை போடாதீர்கள் ப்ளீஸ்

ரௌத்திரன்
20-07-2012, 09:38 PM
உங்களை நான் தவறாக நினைக்கவில்லை. அதே நேரம் நீங்கள் முன் வைத்த குறை முற்றும் பொய்யில்லை. எனது புதுக்கவிதைகளில் வைரமுத்துவின் சாயல் நிறையவே இருக்கிறது என்பது எனக்கு எப்பொழுதோ தெரியும். இதைப்பற்றி நான் விரிவாக ஒரு விளக்கம்(தனி கட்டுரையாக) அளிக்கிறேன் விரைவில்...

எனது எழுத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றுக்கு மிக்க நன்றி!-----ரெளத்திரன்

vasikaran.g
29-07-2012, 09:01 AM
கவிதை அருமை. ஏனோ தெரியவில்லை எப்போதும் ஒருவருடைய புகழில் இன்னொரு அல்லது இன்னும் பல நல்ல உள்ளங்களின் பெயர் மற்றும் அவர்களுடைய நல்ல பண்புகள் காணாமல் போகின்றன அல்லது மறைந்து விடுகின்றன அல்லது உலகம் அதை கண்டுகொள்வதில்லை .. இதற்கு புராணமும் விலக்கல்ல என்பது ராமனை மட்டுமே ஏகபத்தினிவிரதன் என்று உலகம் கொண்டாடுவதன் மூலம் தெரிகிறது ..

சுகந்தப்ரீதன்
30-07-2012, 05:56 PM
முதலில் இக்கவிதையை வாசித்தபோது வஞ்சபுகழ்ச்சி அணியில் தாங்கள் வாகை சூடிவிட்டதாகவே எண்ணினேன்... ஆனால் தங்களின் பின்னூட்டம் கண்டபின்பு அவ்வெண்ணம் என்னுள் பின்தங்கி போனதேனோ..?!:fragend005:

உலகத்தை விடுங்கள் ரௌத்திரரே... காவியதலைவன் இராவணனா? இராமனா? என்பது எந்த காவியத்தை ஏற்கிறோம் என்பதை பொறுத்தது அன்பரே…!! இராமனுடன் ஒப்பிட்டு ஓரம் உரைக்கும் முன் ஒருமுறை வாசித்துதான் பாருங்களேன் புலவர் குழந்தை அவர்கள் இயற்றிய இராவண காவியத்தையும்..!!

குறிப்பு:
புலவர் குழந்தை அவர்களால் இயற்றபட்டு 1946ம் ஆண்டு வெளிவந்த மகாகாவியமான “இராவண காவியம்”, தமிழகக் காண்டம், இலங்கை காண்டம், விந்தக் காண்டம்,பழிப்புரிக் காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களை தன்னகத்தே கொண்டது. அதில் 57 படலங்களும் 3100 செய்யுள்களும் உள்ளடங்கியுள்ளன..!! இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த ஒரே மகா காவியமான இது.. வெளிவந்த இரண்டாண்டுக்குள் அப்போதை காங்கிரஸ் அரசால் தமிழகத்தில் தடைசெய்யபட்டது (களவாணிகள் அப்பவும் இருந்தார்கள் போல..) கிட்டதட்ட 23 ஆண்டுகள் சிறைவாசம் செய்த இக்காவியம், 1971ல் தமிழக முதல்வராக வீற்றிருந்த அன்றைய புலி; இன்றைய எலி முத்தமிழ் விற்பனையாளர் மு.கருணாநிதி அவர்களால் ”தமிழ் இலக்கியத்தின் சாறு” என்று அணிந்துரை அளிக்கபட்டு விடுவிக்கப்பட்டது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது..!! இம்மாபெரும் காவியத்தை இயற்றுவதற்க்கு புலவர் குழந்தை அவர்களுக்கு உந்துதலாய் அமைந்தது ”வீரத்தமிழன்” என்ற பாவேந்தனின் இப்பாடல்வரிகள் என்பது மேலதிக தகவல்;

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடா!
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும்கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!