PDA

View Full Version : தூது?



ரௌத்திரன்
16-07-2012, 06:41 AM
அவள்
குளிர்காய்ந்து கொண்டிருக்கிறாள்
அதில் எரிவது
என் சடலமென்று
அவளுக்கு யார் சொல்வது?



-----ரௌத்திரன்

M.Jagadeesan
16-07-2012, 07:07 AM
அவள்
குளிர்காய்ந்து கொண்டிருக்கிறாள்
அதில் எரிவது
என் சடலமென்று
அவளுக்கு யார் சொல்வது?



-----ரௌத்திரன்


உங்கள் ஆவி சொல்லட்டும் !

aasaiajiith
16-07-2012, 07:14 AM
உங்கள் ஆவி சொல்லட்டும் !


ஆவியாய் சொன்னால்
பாவி, எறிவது பிணம் என்று
முன்னமே சொல்வதற்கென்ன ??
என்று சண்டை பிடித்தால் ??

சிவா.ஜி
16-07-2012, 07:53 AM
எரிந்த பின்னும் ஏன் அவள் நினவு? குளிர் காய நெருப்பு வேண்டும்...எரிவது எதுவென யாருக்கு அக்கறை?

பாராட்டுக்கள் ரௌத்திரன்.

jayanth
16-07-2012, 12:39 PM
தூது...தியாகம்...!!!

தாமரை
17-07-2012, 05:06 AM
யாரோ கொளுத்திய நெருப்பில்
குளிர் காய்பவர்களுக்கு
எரிவது யாராய் இருந்தால் என்ன?
என்ன கவலை?

கொளுத்திய நெருப்பில்
தவறி விழுந்தவருக்கும்
தள்ளப்பட்டவர்களுக்கும்
குளிர் காய்பவர்களைப் பற்றி
என்ன கவலை?

கொளுத்தப்பட்ட நெருப்புக்கும்
எரிபொருளும் காற்றும் உள்ளவரை
எரிவதைத் தவிர என்ன கவலை?

உற்றவனாய் இருந்தால்
அவள் குளிர் போக்க உதவினேன் என
சந்தோஷப்படு.

மற்றவனாய் இருந்தாலும்
எரிந்தது முற்றிலும் வீணில்லை என
ஆறுதல் கொள்.

எதிரியாய் இருந்தால் மட்டுமே
அவள் அழவேண்டும் என
ஆதங்கப்படு!!!