PDA

View Full Version : ஓர் ஈழச் சோதரியின் கூக்குரல்!



ரௌத்திரன்
15-07-2012, 06:24 PM
மண்ணில் நாங்கள் பிறந்த தெல்லாம்
கொடுமைக்கோ?-வெறும்-இடும்பைக்கோ?
கண்ணில் யார்க்கும் கருணை யென்பதே
பிறக்கிலையோ?-மனம்-திறக்கிலையோ?

தட்டிக் கேட்கும் தீரம் படைத்தவர்
இல்லையோ?-யாருமலிப்-பிள்ளையோ?
எட்டி நின்றினியும் இதனைத் தெய்வம்
பார்க்குமோ?-துயர்-வார்க்குமோ?

ஈழத்தி ருந்துயாம் உகுக்குங் கண்ணீர்த்
தெறிக்கிலையோ?-நெஞ்சை-அரிக்கிலையோ?
வாழத் தகுதிகள் அற்றவ ரென்றெம்மை
விடுத்தீரோ?-சதி-முடித்தீரோ?

விலகி யிருப்பதால் விழியும் இமையும்
வேறாமோ?-இரு-கூறாமோ?
தொலைவிற் போயினும் தண்டமிழ் மக்கள்நா
மன்றோ?-பேதம்-நன்றோ?

உலகினுக் கேநீதி உரைத்திட் டதமிழ்த்
தோழர்காள்!-மலைத்-தோளர்காள்!
உலகினுக் கேநாம் உரைத்தது நமக்கிலை
என்பீரோ?-மலம்-தின்பீரோ?

அக்கரை தன்னிலே அன்று பிழைத்திடச்
சென்றார்-இடரில்-நின்றார்!
அக்கறை எதற்கினி அவர்மீ தென்னும்
அரசே!-வீழுமுன்-சிரசே!




------------ரெளத்திரன்