PDA

View Full Version : இந்தியாவின் முதல் யூடூப் சூப்பர் ஸ்டார் ஒரு தமிழன்



ravikrishnan
15-07-2012, 04:09 PM
இந்தியாவின் முதல் யூடூப் சூப்பர் ஸ்டார் ஒரு தமிழன்

http://i1168.photobucket.com/albums/r486/rkvm/408921_10150473820977377_630836495_n.jpg

ஓராண்டுக்கு முன் என நினைக்கிறேன், தற்செயலாக ஒரு காணொளி காண நேரிட்டது. அதில் நமது மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, தென் தமிழன் ஒருவர் // இந்தியாவின் முதல் ´மாபெரும்´ யூடூப் ஸ்டார் // என வடநாட்டு ஊடகங்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தது. முதல் ஓரிரு நிமிடங்கள் ஒரு கோமாளி என நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு திறமை மிக்க கலைஞன் என்று.

பேட்டி எடுத்த பெண்மணியிடம் அவர் ஆங்கிலத்தில் அடக்கத்தோடும் , பண்புடனும், நகைச்சுவையுடனும் பதிலளித்த பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. அதைதொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக அவரது காணொளிகளை பார்த்து, சிரித்து, ரசித்து மகிழ்ந்துள்ளேன். உங்களில் சிலருக்கு அவரை தெரிந்திருக்கும் , பலருக்கும் தெரியாது. அவர்தான் வில்பர் சர்குனராஜ் .

மிக எளிமையான முறையில், குறைந்த செலவில், மிகுந்த எள்ளல் சுவையுடன், வித்தியாசமான கருத்தாக்கத்துடன் தாயாரிக்கப் படுகிற அவரது காணொளிகள் உலகம் முழுதும் பிரபலம். உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்யும் அவர், தான் ஒரு தமிழன், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன் என்று சொல்லத் தவறுவதில்லை.

இம்மாதிரி வித்தியாசமான திறமைகள் கொண்டவர்களை நமது சமூகம் ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் நமது இளைங்கர்கள் பலரின் பல புதிய திறமைகள் இணையத்தில் பிரபலமாகும். இதுவே நம் தமிழர்களுக்கான ´சாப்ட் பவர்´ ஆக பரிணமிக்கும்.

அவரது காணொளிகளில் சில:
http://www.youtube.com/watch?v=SzNjQ11y2w4
http://www.youtube.com/watch?v=ZIlS5WhAaQE
http://www.youtube.com/watch?v=YXbH0uSFg1A

அவரது யூடுப் அலைத்தடம் (சானல்) :
http://www.youtube.com/user/wilbursargunaraj
நன்றி: நண்பர்களுடன்

சிவா.ஜி
15-07-2012, 09:01 PM
இவரை ஒரு டம்மி பீஸுன்னு இல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்...ஏதோ விஷயம் இருக்கும் போலருக்கு...!!

ராஜா
17-07-2012, 04:55 PM
பாராட்டுகள் வில்ப(வ)ர்..!