PDA

View Full Version : இரவு



PremM
15-07-2012, 03:12 PM
நிஜம் புதையும் நிலா இரவுகளில்,
கனவுகளின் படியில் அமர்ந்து பயணிக்கிறேன்..

இருள் விலகும் நேரங்களில்,
திட்டுத்திட்டாய் படிந்திருக்கும் நினைவுகளோ
கோர்வையானதொரு கதைகளை தருவதில்லை..

ஊர் உறங்கும் ஓசையில்,
ஆர்ப்பரிக்கும் களவுக் கூட்டம்
இரவின் கிளைகளில் நிரந்தரப் பறவைகளாய் மாறி விடுகின்றன..

மெல்ல அடங்கும் முனங்கல் ஒலிகளில்,
உறக்கும் தொலைக்கும் கதிரவன் கண்கள் ,
இரவுகள் விதைத்த உயிர்களின் எண்ணிக்கைத் தேடி
அறைகளின் ஜன்னல் எட்டிப் பார்க்கின்றது....

வீதி அலங்கரித்த மஞ்சள் நிற இரவுகளில்,
காதலின் கடைசிக் கணங்களை
கண் சிமிட்டிப் பார்க்கும் நட்சத்திரங்களும்,

இரு உயிர்கள் பிணையும் இரவுகளில்,
மேகக் கரங்களால் தன் முகம் மறைக்கும் நிலவுகளும்,
ஒவ்வோர் இரவின் பிரதிகளை,
தன்னோடு கொண்டு போகவே செல்கின்றன..

சிவா.ஜி
15-07-2012, 09:35 PM
இரவின் முகம் காட்டும் அழகான கவிதை. வாழ்த்துக்கள் ப்ரேம்.

கீதம்
15-07-2012, 10:56 PM
நித்தமும் பார்த்தாலும்

சலிப்பதில்லையாம் நிலவுக்கு

இரவுக் காட்சிகள்!

அழகான கவிதை. பாராட்டுகள் பிரேம்.

PremM
12-08-2012, 06:03 PM
நன்றி சிவா.ஜி..

நன்றி கீதம்..

காலம் தாழ்த்தி பதில் இட்டமைக்கு மன்னிக்கவும்..

பூமகள்
22-08-2012, 05:17 AM
அற்புதம்..

தினம் வரும் கதிரவன்
விளைச்சலைப் பார்க்க வருகிறானா...??

நான் விளைவிக்கவென்றல்லவா நினைத்தேன்..!! ;-)

பாராட்டுகள்..

தொடரட்டும் உங்கள் பகல்-இரவுகளும்.. அவை தரும் கவிதைகளும்.. :)


சிறு பிழையென நினைக்கிறேன்..


மெல்ல அடங்கும் முனங்கல் ஒலிகளில்,
உறக்கும் தொலைக்கும் கதிரவன் கண்கள் ,

'உறக்கம் தொலைக்கும்' என்பது சரியாய் இருக்குமென நம்புகிறேன்.. மாற்றுங்கள்.

Sasi Dharan
22-08-2012, 11:08 AM
கவிதை வரிகள் அருமை...
இரவு நிலவை கொண்டு காதல் தவிர்த்து
காமத்தை சொன்ன விதம் புதுமை!
பாராட்டுக்கள் பிரேம்!

seguwera
22-08-2012, 05:25 PM
இரு உயிர்கள் பிணையும் இரவுகளில்,
மேகக் கரங்களால் தன் முகம் மறைக்கும் நிலவுகளும்,
ஒவ்வோர் இரவின் பிரதிகளை,
தன்னோடு கொண்டு போகவே செல்கின்றன..

அருமை ப்ரேம்