PDA

View Full Version : புதிய மதுக்கோப்பை!



ரௌத்திரன்
15-07-2012, 02:02 PM
வேண்டாம்
எடுத்துச் செல்லுங்கள்!

வழக்கமான கோப்பை..
வழக்கமான விஸ்கி.....

வேண்டாம்
எடுத்துச் செல்லுங்கள்!

புதுமை வேண்டும் எனக்கு.

இன்று மட்டும்

பிறை நிலவைக்
கோப்பையாக்குகிறேன்.....

நட்சத்திரக் கனிகளைப் பிழிந்து
மதுரசம் ஊற்றுகிறேன்....

பனிக்கட்டி?

அது இல்லாமலா?
மேகங்களை உடைத்து
மதுவிலே போடு!



-------------ரெளத்திரன்

ravikrishnan
15-07-2012, 03:41 PM
தவறாக நினைக்கவேண்டாம்,எல்லாம் முதல்வரியில் சரியாகச்சொல்லிட்டு அடுத்தவரியில் கவிதையாக சொல்லிட்டிங்க.அருமை
பாமரனுக்கும் புரியும் படி உள்ளது.......:icon_b::icon_b:

சிவா.ஜி
15-07-2012, 09:37 PM
மாற்று சிந்தனை மிக அருமை. நிலாக் கோப்பையில் எனக்கும் ஒரு நட்சத்திரக் கனிரசம் அருந்த ஆசை.

வாழ்த்துக்கள் ரௌத்திரன்.