PDA

View Full Version : புதிய ஜனநாயகம்



ரௌத்திரன்
15-07-2012, 12:16 AM
உண்மைக்கு குரல்கொடுத்தார்; நாட்டு மக்கள்
====உரிமைக்கு குரல்கொடுத்தார்; எந்த நாளும்
நன்மைக்கு குரல்கொடுத்தார்; அச்சப் பட்டோர்
====நெஞ்சுக்கு உரம்கொடுத்தார்; பத்தி ரிக்கை
வன்மைக்குப் பொருள்கொடுத்தார்; நேர்மைக் கோட்டில்
====வழுவாமல் நிற்கின்றார்; புலையர் தம்மின்
புன்மைக்கு குழிபறித்தார்; வாழ்த்து கின்றோம்
====புதியஜன நாயகம்தான் வாழ்க மாதோ!

கவர்ச்சியை நாடவில்லை; அட்டை மீதில்
====கட்டழகு நடிகையர் உருவ மில்லை
கவர்ச்சியதன் தேவையென்ன? கயவர் தம்மின்
====கழுத்தறுக்க வருகின்ற போர்வா ளுக்கு!
தவம்நாடி நிற்கின்ற துறவி கள்தம்
====தூய்மையென எளிமையினைக் கடைபி டித்தார்
அவம்நாடிச் சுட்டெரிக்கும் வேள்விக் குண்டத்(து)
====அழல்போல எழுகின்றார் வாழ்க! வாழ்க!

முகமூடி தான்கிழிந்த தென்றே மெத்த
====முரைத்திட்ட முதலாளித் துவத்து நாய்கள்
பகைநாடி தாங்கொண்ட படைபு லத்தின்
====பலம்நாடி நொறுக்கித்தான் போட்டா ரேனும்
முகம்வாடி ஒருநாளும் நின்றா ரில்லை
====மனம்வாடிப் பின்வாங்க வில்லை; எள்ளி
நகையாடி நின்றார்காண்; ஆண்மை தன்னின்
====நிறைகாண வேண்டுவோர்கள் இவரைக் காணீர்!


சிரம்தூக்கி நிற்கின்றார்; உலையின் தீயாய்ச்
====சினம்தூக்கி நிற்கின்றார்; புரட்சி யென்னும்
கரம்தூக்கி நிற்கின்றார்; தர்மம் காக்க
====களம்நோக்கி நிற்கின்றார்; என்று மிங்கே
அறம்தூக்கி நின்றவர்தான் தோற்ற தாக
====அகராதி இலையென்பேன்; உண்மை கண்டீர்!
தரம்தூக்கி நிற்கின்ற பத்தி ரிக்கை
====தரணியிலே தழைத்தினிது ஓங்கு தற்கு,

என்னருமைத் தமிழ்மக்காள் திரண்டு வாரீர்!
=====உமக்காக எரிகின்ற புரட்சி தீபம்
தன்னருமை கண்டுகொள்வீர்; இதனை யென்றும்
=====தீயவர்தம் மூச்சினிலே அணைந்தி டாமல்
இன்னருமைக் கரங்களினாற் காப்பீர்; யானும்
=====இதயத்தில் முப்போதும் இலங்கும் வாணி
அன்னையவள் பூந்தமிழால் வாழ்த்து கின்றேன்
=====ஆண்டவனும் வாழ்த்திடுவான் ஐய மில்லை!

(புதியஜனநாயகம்-புரட்சி மாத இதழ் தன் 28ம் ஆண்டில்
காலெடுத்து வைத்ததையொட்டி வாழ்த்தி எழுதியது)




--------------ரெளத்திரன்

jayanth
15-07-2012, 11:26 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

சிவா.ஜி
15-07-2012, 11:40 AM
புதிய ஜனநாயகத்துக்கு வாழ்த்துப்பா நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.