PDA

View Full Version : மோக லாகிரி....



ரௌத்திரன்
15-07-2012, 12:11 AM
முத்தினமே!
என்
நித்திலமே!
அடி
ரத்தினமே!
அழகுச்
சித்திரமே!

நீயின்றி நான்கொண்ட மோகம்-இது
ஆகாயம் இல்லாத மேகம்!


பாழாகுமோ?
உடல்
நூலாகுமோ?
மனம்
தூளாகுமோ?
இன்னும்
நாளாகுமோ?

சிந்திக்க வேண்டும்நீ கொஞ்சம்-அடி
சந்திக்க வேண்டும்நாம் மஞ்சம்!


சித்தம் வரும்
முகம்
பித்தம் தரும்
அது
நித்தம் தரும்
உடல்
மொத்தம் தரும்

இதழோடு இதழ்கொஞ்சம் பொருத்து-என்
இதயத்தை எரியாமல் நிறுத்து!


வாட்டுகிறான்!
கணை
பூட்டுகிறான்!
கனல்
மூட்டுகிறான்!
வேலை
காட்டுகிறான்!

மன்மத னால்கொள்கை கைவிட்டு-உன்னைக்
கொஞ்சத் துடிக்கிறேன் மெய்தொட்டு!


வஞ்சம் என்னடி?
உன்
நெஞ்சம் என்னடி?
இதில்
பஞ்சம் என்னடி?
நான்
தஞ்சம் உன்னடி!

கட்டித் தழுவிசிவ சக்திநிலை-வா
கண்டு விடலாம் முக்திநிலை!





-----------ரெளத்திரன்

M.Jagadeesan
15-07-2012, 01:04 AM
மோக வாதையில் வாடும் ஆண்மகனின்
தாகத்தைக் காட்டும் அழகான வரிகள்.

" முத்தினமே " " நித்திலமே" இரண்டும் ஒன்றுதானே!

கீதம்
15-07-2012, 02:54 AM
கட்டவிழ்த்த மோகம் கரைபுரள, மெட்டமைத்துப் பாட வாகாய் அமைந்த வரிகள் அருமை. பாராட்டுகள் ரௌத்திரன்.

jayanth
15-07-2012, 11:23 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))மோக லாகிரி...விரகம்...!!!http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

கலைவேந்தன்
17-07-2012, 03:54 PM
வார்த்தை விளையாட்டை ரசித்தேன். பாராட்டுகள்..!